13 Oct 2019 4:03 pmFeatured
கேரளாவைச் சேர்ந்த மறைந்த கன்னியாஸ்திரி மரியம் தெரேசாவுக்கு போப் பிரான்சிஸ் இன்று வழங்குகிறார். திருச்சூரைச் சேர்ந்த மரியம் தெரேசா கடந்த 1876ம் ஆண்டு இரிஞ்ஞாலக்குடாவில் பிறந்தவர்.
தனது 16வது வயதில் சமூகப் பணிகளில் ஈடுபடத் தொடங்கிய மரியம் தெரேசா வைசூரி எனும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருணையுடன் கவனித்து வந்தார். பின்னர் சீறோ மலபார் திருச்சபையில் கன்னியாஸ்திரியாக இருந்த அவர், அருட்சகோதரிகளுக்கான திருச்சபையை நிறுவினார்.
அயராது பாடுபட்ட அருட்சகோதரி மரியம் தெரேசா கடந்த 1924ம் ஆண்டு காலமானார். கடந்த 2000ம் ஆண்டு அப்போதைய போப் 2ம் ஜான்பால் முக்திப் பேறு அடைந்தவர் என்ற பட்டத்தை வழங்கினார்.
தொடர்ந்து இன்று வாடிகனில் நடைபெறும் நிகழ்ச்சியில் மரியம் தெரேசாவை புனிதராக போப் பிரான்சிஸ் அறிவிக்க உள்ளார். போப்பின் இந்தியப் பிரதிநிதி கர்டினல் ஜார்ஜ் ஆலன் ஹென்றி, மத்திய இணையமைச்சர் முரளீதரன் உள்ளிட்ட குழுவினர் வாடிகன் சென்றுள்ளனர்.