12 Nov 2019 6:58 pmFeatured
மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாததால் மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டுள்ளது அதிக இடங்களை வென்ற கட்சியான பாஜகவுக்கு முதலில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். ஆனால் பெரும்பான்மைய நிருபிக்க முடியாது என்பதால் ஆட்சியமைக்க விரும்பவில்லை என பாஜக கட்சி அறிவித்ததை தொடர்ந்து,
இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஆளுநரை சந்தித்த சிவசேனா கட்சியின் தலைவர்கள் ஆட்சியமைக்க கூடுதல் அவகாசம் கேட்டனர். கோரிக்கையை நிராகரித்த ஆளுநர் 3வது பெரிய கட்சியான சரத் பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார். பவார் கட்சிக்கு ஆட்சி அமைக்க 24 மணி நேர அவகாசம் அளித்தார் கவர்னர்
இந்த பரபரப்பான சூழ்நிலையில், மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைக்க யாரும்
முன்வராத நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த
ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி
பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவை பதவிக் காலம் முடிந்துவிட்டதால்
மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு
மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.
இதையடுத்து மத்திய அமைச்சரவை கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த
மத்திய அமைச்சரவை பரிந்துரைத்தது.
மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை உள்துறை அமைச்சகம் குடியரசுத்தலைவருக்கு அனுப்பியது. மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்ற குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதனால் மகாராஷ்ட்ராவில் உடனடியாக குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
சிவசேனா உச்சநீதிமன்றத்தில் மனு
இதனிடையே மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அவகாசம் தரவில்லை என உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மனுதாக்கல் செய்துள்ளார்.