14 Dec 2020 12:22 pmFeatured
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் மேனாள் தலைவர் பேராசிரியர் சமீரா மீரானின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 13-12-2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் சூம் செயலி வழியாக நடைபெற்றது.
தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் இந்தியன் ஐ.ஏ.எஸ் அகடமி நிறுவனத்தின் தமிழ்த்துறை -இணை இயக்குநர் செ.வ.இராமாநுசன் சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக மன்றப் புரவலர்கள் சேதுராமன் சாத்தப்பன் மற்றும் அரியக்குடி மெய்யப்பன் மன்றப் பொருளாளர் அ.இரவிச்சந்திரன் ஆகியோரின் நினைவுரையைத் தொடர்ந்து மன்ற ஆலோசகர்கள் கருவூர் இரா.பழனிச்சாமி, முகவை திருநாதன், ஆறுமுகப்பெருமாள் ஆகியோர் நினைவேந்தலுரை ஆற்றினார்கள்.
இலெமூரியா அறக்கட்டளைத் நிறுவனத் தலைவர் சு.குமணராசன், மும்பைத் தமிழ்ச்சங்கத்தின் மேனாள் தலைவர் எஸ்.இராமதாஸ், ஜெரிமெரி தமிழ்ச்சங்கத் தலைவர் கோ.சீனிவாசகம், அணுசக்திநகர், , கலைமன்றத் தலைவர் ந.கனகசபை, மும்பை இலக்கியக் கூடம் நிர்வாகி கவிஞர் இறை.ச.இராசேந்திரன்
ஆகிய தமிழ் அமைப்பினர் நினைவேந்தல் உரையாற்றினர்.
மும்பை திராவிடர் கழகத்தலைவர் பெ.கணேசன், மும்பை புறநகர் மாநிலத் திமுக பொருளாளர் பி.கிருஷ்ணன், மாநில இலக்கிய அணி அமைப்பாளர் ந. வசந்தகுமார், ஆகியோரும் தமிழகத்திலிருந்து பேராசிரியர் சமீரா மீரானின் அண்ணன் சைனி சேக், காரை கரு.இரவீந்திரன் ஆகியோரும் நினைவேந்தலுரையாற்றினர்
மன்றத்தின் ஏனைய அங்கத்தினர்களும் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சார்ந்த தமிழ் அன்பர்களும் நினேவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
வே.சதானந்தன் மற்றும் பு.தேவதாசன் சூம் வழியாக நிகழ்வை ஒருங்கிணைத்தார்கள்.
கூட்ட ஏற்பாடுகளை, கு.மாரியப்பன், வெங்கட் சுப்ரமண்யன் ஆகியோர் செய்தனர்
பேராசிரியர் சமீரா மீரானின் மேல் அன்புள்ளம் கொண்ட அனைவரும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையைக் கேட்டு சமீரா மீரான் அவர்களின் தொய்வில்லாத் தமிழ்ப்பணிகளை அறிந்து மகிழ்ந்தனர். கூட்டத்தில் உரையாற்றியவர்கள், வரக்கூடிய காலங்களில் தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் மாணவ மாணவிகளுக்குப் போட்டிகளை நடத்தி வெற்றியாளர்களுக்கு பேராசிரியர் பெயரில் விருது ஒன்றும் வழங்கப்பட வேண்டும் என்றும் பேசினார்கள்
பேராசிரியர் சமீரா மீரான் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகச் சிறப்பாக தமிழ் எழுத்தாளர் மன்றம் ஏற்பாடு செய்து அவர் புகழ் பரப்பிய பலரில் மனித நேயமிக்க மாமனிதர் எனக்கு செய்த மாபெரும் உதவிகளை கூற வாய்ப்பு கிடைத்து. நன்றி. அவர் புகழ் என்றும் நிலைக்க நம் பணி தொடர்வோம்.
கருவூர் இரா.பழனிச்சாமி
நன்றி.