28 Aug 2019 10:53 amFeatured
பாரதிய ஜனதா கட்சி தமிழ் பிரிவின் மும்பை தலைவராக ராஜா உடையார் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் ராஜா உடையார் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இது அவருக்கு பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது.
மராட்டிய மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் 2019 ஆண்டுஅக்டோபர் மாதத்தில் நடக்க இருப்பதை கருத்தில் கொண்டு மராட்டிய மாநில தலைவராக சந்திரகாந் தாதா பாட்டிலும், பாரதிய ஜனதா கட்சியின் மும்பை தலைவராக தொழிலதிபரும் மற்றும் சட்ட மன்ற உறுப்பினருமான மங்கல் பிரதாப் லோடா புதியதாக மும்பை பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ளனர்.
மூன்றாண்டுக்கு ஒருமுறை நிர்வாகிகளை மாற்றி அமைப்பது வழக்கம், அதன் அடிப்படையில் மும்பையில் உள்ள முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை மாற்றி அமைக்கப்படுகிறது.
ராஜா உடையாரின் வளர்ச்சி
ராஜா உடையார சுமார் 29 வருடங்களுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். முதன் முதலாக வார்ட் துணை தலைவராக பொறுப்பேற்று படி படியாக பதவிகள் பெற்று இப்போது பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் பிரிவு மும்பை தலைவராக இருந்து வருகிறார். இவருடைய பதவி காலம் முடிவடைகின்ற நிலையில் ராஜா உடையார் பொதுமக்களுக்கு செய்யும் உதவிகள் மற்றும் சுயநலமற்ற சேவைகள், கட்சி தொண்டர்கள், நண்பர்கள், மற்றும். ஏழை எளிய பொது மக்களுடன் இணைந்து கட்சியை வளர்க்கும் விதம் இவற்றை கருத்தில் கொண்டு பாரதிய ஜனதா கட்சியின் மும்பை பொது செயலாளர் மொழித் பாரதிய, சாலாகர் சால்வி, அமித் சாட்டம், மும்பை துணை தலைவர் வினாயக் காமத் இவர்களின் சிபாரிசின் படி மும்பை தலைவர் மங்கல் பிரதாப் லோடா. கல்வித்துறை அமைச்சர் வினோத் தாவுடே, மராட்டிய மாநில முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் இவர்களின் ஆலோசனை படி போட்டியின்றி ஒரு மனதாக ராஜா உடையார் அவர்களை பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் பிரிவு மும்பை தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.