10 Apr 2020 6:28 pmFeatured
குட்டி தமிழ் நாடு என்னும் தாராவி பகுதியில் சுமார் பதினைந்து லட்சம் பேர் வசிக்கின்றனர், ஆசியாவிலேயே அதிகம் குடிசைகள் உள்ள பகுதி தாராவி மும்பையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப் பகுதியில் சிறு சிறு தொழிற்கூடங்கள் மற்றும் சிறு சிறு வீடுகள் குறிகிய வழி பாதைகள் அதிகம் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி தாராவி. மேற்படி பகுதியில் 07பேர்களுக்கு கொரோனா நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் பெரும்பாலான மக்கள் மேற்படி 144 தடை உத்தரவை கடைப்பிடிக்க வில்லை. ஆதலால் கொரோன நோய் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தாராவி பகுதியில் நோய் பரவினால் மும்பையை கடவுளால் மட்டுமே காப்பாற்ற முடியும்.......
ஆதலால் கோரான நோய் வராமல் தடுக்கவும் தாராவி மற்றும் மும்பையில் வாழும் மக்களின் நலன் கருதி சுகாதார துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் அதிகம் கவனம் செலுத்தி இப் பகுதியில் நோய் வராமல் தடுக்க மக்களுக்கு விழுப்புனர்வு ஏற்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்படி நோய் பரவாமல் தடுக்க தாராவி பகுதியை சீல் வைக்க வேண்டும் என மும்பை பாரதிய ஜனதா கட்சி தமிழ் பிரிவு மும்பை தலைவர் ராஜா உடையார் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உதவ் தாக்கரே, மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மராட்டிய மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சந்திரகாந்த் தாதா பாட்டில், பாரதிய ஜனதா கட்சி தலைவர் மங்கல் பிரதாப் லோடா, மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங்,IPS., மற்றும் மும்பை மாநகராட்சி கமிஷனர் பிரவுன் பர்தேசி, IAS., ஆகியோருக்கு கடிதம் மூலமாக கோரிக்கை வைத்துள்ளார்.