04 Nov 2020 12:28 amFeatured
கவிஞர் இரஜகை நிலவனின்
தொடர்கதை
அத்தியாயம்-9
மருத்துவ மனையில் நரேன்
”என்னடா.. வந்தவன் திரும்பிப்போய் விட்டானா?” என்று கேட்டான் நரேன் கண்ணைத்திறந்து பார்த்து.
” நல்ல வேளை … நீ.. தூங்கின மாதிரி இருந்ததினாலே உனக்கு மிகவும் பலமான அடின்னு பயந்து போய் ஓடியிருக்கான்” என்றான் வசந்த்.
“இப்ப மட்டும் என்னாச்சு. கையை காலை அசைக்க முடியவில்லை. எப்பா அந்தப் பயங்கரத்தை இப்போ நினைத்தாலும் பயமாக இருக்கிறது”
”அவன் இப்போ காபி வாங்கி வருவான். அது வரை படுத்திரு” என்றான்.
காபி வாங்கி வந்த கண்ணன்” சார். ஏதாவது வேணும்ணா போன் பண்ணுங்க..” என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் கண்ணன்.
“அவன் போயாச்சா? நாம் இவ்வளவு எளிதாக நினைத்து வந்த காரியம் இவ்வளவு சிக்கலலாக மாறிப்போயிருக்கிறது? வசந்த், பிரபு நாம் எங்கே வரை போனோம் என்பதை எளிதில் தெரிந்து கொள்வார்.
அதுக்குள்ளே நாம் ஏதாவது செய்தாகணும். இப்படி ஆஸ்பத்திரிலே வந்து படுத்துக்கிடக்காவா இந்த ஊருக்கு வந்தோம்? சே… காலை கூட மடக்க முடியவில்லை” என்று வலியோடு எழுந்து உட்கார்ந்தான்.
இரண்டு கப்களில் காபியை ஊற்றி, ஒன்றை நரேனிடம் தந்து விட்டு” என்ன செய்யலாம் நரேன் சொல்லு?” என்றான்
நரேன் ஒன்றும் சொல்லாமல் சன்னலைப்பார்த்துக் கொண்டிருக்க, திரும்பிப்பார்த்த வச்ந்த் “ போச்சுடா..உனக்கு இந்த கிறுக்கு எப்போது விட்டுப்ப்போகப் போவுதுண்ணு தெரியல” என்று தலையிலடித்துக்கொண்டான் வசந்த்.
அது, அழகாக இங்குமங்கும் சுற்றிக் கொண்டிருந்து, கொஞ்சம் ஆச்சரியாமாகவும் , அதிசயமாகமாகவும் தோன்றியது நரேனுக்கு..
நரேன் சன்னலில் அம்ர்ந்த்திருந்த அந்தப் புறாவின் அசைவுகளைஆச்சர்யாமாக பார்த்துக்கொடிருந்தான். அலகு மெல்லிய வளைவுடன் அந்த மூக்கின் அருகில் ஒரு சின்ன வெள்ளைப் புள்ளியில் ஆரம்பித்து பின்னால் மெல்லிய சாம்பல் நிறத்தில் இரு கண்களையும் தொட்டது.
” என்ன திரும்பவும் ..இன்றைக்கும் புறா ஆராய்ச்சியா ?“ சிரித்துக் கொண்டே வெளியே எட்டிப்பார்த்தான் வசந்தன்.
அங்கே கண்ணனும் பிரபுவும் வந்து கொண்டிருந்தார்கள்.
“ நரேன். கொஞ்சம் படுத்துக் கண்ணை மூடிக்கொள். அதோ திரும்பவும் கண்ணன் பிரபுவோடு வந்து கொண்டிருக்கிறான்” என்றான் வசந்த்.
பிரபு வந்து நலம் விசாரித்து விட்டு ” வசந்த். உங்களுக்கு என்ன தேவை என்றாலும் கண்டிப்பாக கேளுங்கள். நான் ஏற்கனெவே தலைமை அலுவலகத்தில் பேசிவிட்டேன். எல்லா செலவுகளையும் நான் வாங்கித்தந்து விடுவேன். கவலைப்பட வேண்டாம். இப்படி
சென்னையிலிருந்து கொரோனாவிற்காக மருந்து தேடி வந்து விட்டு… சாரி… இப்படி ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை..
நரேன் விழித்தெழுந்ததும் எனக்கு போன் பண்ணச் சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
“ நீங்கள் வந்ததற்கு ரொம்ப நன்றி சார்” என்று வசந்த் மருத்துவ மனையின் வாயில் வரை வந்து வழியனுப்பி விட்டு திரும்ப வந்தான்.
” இனி என்ன செய்யலாம்.. ஒண்ணு பண்ணேண். நீ திரும்பப்போய் அந்த இடத்திலே அந்த செடியை தேடி பார்த்து விட்டு வாயேன்” என்றான் நரேன் எழுந்து அமர்ந்தவாறு..
“அதெல்லாம் சரி தான். ஒரு தடவை யானை கிட்டே மாட்டினது போதாதா? இதிலே வேறே பிரபு வேறு எந்த திட்டம் தீட்டிக்கிட்ட்ருக்கிறாரோ?.... “ பயந்தவாறு சொன்னான் வசந்த்.
“போடா… நீ ஒரு சரியான பயந்தாங்கொள்ளியாக வந்து சேர்ந்திருக்கிறாயே…” வலியோடு முகத்தைச் சுழித்துக் கொண்டு சொன்னான் நரேன்.
“ஆமா தீராதி தீரர்.. இந்தா ஆஸ்பத்திரியிலே வந்து விழுந்து கிடக்கிறார். பாருங்கள். “
” வசந்த்.. நேற்றைக்கு அப்புறம் என்னாச்சு?”
“ யானைகள் வருவதைப் பார்த்து, அந்த ஆபிசர் ஓட ஆரம்பித்தார்.
நீ பெரிய சூரன் மாதிரி நின்னுக்கிட்டேயிருந்தாய். யானைகள் நம் அருகில் வந்து விட்டன..
எனக்கு என்ன தைரியம் வந்ததென்று எனக்கேத் தெரியவில்லை பக்கத்திலே நின்ற தென்ன மரத்திலே வேகமாக ஏறிட்டேன்.
அவர் பாட்டுக்கு அவர் ஒடி போய் ஒளிஞ்சிகிட்டார். நீ நின்னதை பார்த்துட்டு யானைகள் உன்னைத் தாண்டி ஓடி வர அங்கே வந்த ஒரு பெரிய யானை உன்னை துதிக்கையால் தூக்கி ஒரு சுற்று சுற்றி அப்படியே தூக்கி எறிந்தது.. அதற்குள்ளே என்னவோ சத்தம் வர யானைகளெல்லாம் ஓட ஆரம்பிடுச்சி..” என்றான் வசந்த்.
“நல்ல வேளை யானை பக்கத்திலே வர்றதுக்கு முன்னாலே எனக்கு மயக்கம் வந்ததாலே என்ன நடந்தது என்று தெரியாமலே போய் விட்டது.” என்றான் வலியோடு நரேன்.
“அப்புறம்… யானை எல்லாம் ஓடிப்போயிடுச்சான்னு பார்த்துட்டு அந்த ஆபிசர் திரும்பி வர, ரெண்டு பேரும் சேர்ந்து உன்னைத் தூக்கிட்டு வந்து காரிலே போட்டு இந்த ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வந்தோம்.”
“ஏயப்பா இவ்வளவு நடந்திருக்கா…?”
”நாலஞ்சி யானை தான் இருக்கும்… அது நடந்து வந்த வேகம்.. உன்னை தும்பிக்கையிலே தூக்கும்போது எனக்கே தலைச்சுற்று வந்திடுச்சு”
“டேய் பையா வசந்த்… இது ஒண்ணு ரெண்டு ரூபா சமாச்சார்மில்லை.. நாலு கோடி ரூபா விசயம்?”
“ஆமா. நரேன். நீதான் என்ன நெனைச்சிகிட்டுப் பேசற…?”
“நாம சென்னையிலே பேசிகிட்ட மாதிரி… வந்தோமா..செடியை புடுங்கிட்டுப் போனோமாங்கிற விசயமில்லே…”
“சரி.. ரொம்ப சாதாரணமா சாதித்திரலாமுண்ணுதான் நெனச்சோம். அதுக்கு இப்ப என்ன சொல்ல வர்றே…”
“இப்படி…ஆஸ்பத்திரியிலே இருந்தா நடக்க கூடிய காரியமில்லை.”
“சரி. போட்டிருக்கிற கட்டை எல்லாம் அவுத்துப்போட்டுட்டு திரும்பவும் காட்டுக்குள்ளே போகணும்கிறியா?”
“ நான் போகவில்லை”
“அப்புறம்”
“ நீ தான் போகப்போறே…”
“ஏண்டா… நேற்று சாயங்காலம் தான் யானைகிட்டே அடி வாங்கிட்டு வந்திருக்கே… உனக்கு புத்தி எதுவும் கெட்டுப் போச்சா?”
“ஒரு பிரச்சினை இல்லை… நீ தான் வசந்த். போகிறாய்?”
“எப்படி… திரும்பவும் போய் யானை கிட்டே மாட்டிகிடச் சொல்லுகிறாயா?”
“டேய். நேற்று யானை வந்தது எதிர்பார்க்காத விசயம்”
“சரி.. இன்றைக்கு என்னைப் பலி கடாவாக்க முடிவு பண்ணியாச்சு. என்ன செய்யணும்?” என்றான் வசந்த்.
“ நம்ம ஊரிலேய்ருந்து வந்தப்ப கிடைச்சாரு பாரு ஒரு ஆட்டோ காரரு….ஆங்… அவர் பெயர் கூட… ரமணி … ஆங்.. நீ வென்னீர் போட்டு சூடாக குளிச்சிட்டு டிரஸ் பண்ணிட்டு வா.. நான் அந்த ரமணியைக் கூப்பிட்டு பேசறேன். ”
“அந்த பர்ஸிலேயிருந்து ஒரு சின்ன பேப்பரிலே அவர் நம்பரைக் குறித்து வச்சிருந்தேன். அதை எடுத்து என் மொபைலிலே டயல் பண்ணி தந்து விட்டு கிளம்பு. நீ வர்றதுக்குள்ளே பிளான் தயாராக இருக்கும்” என்றான் நரேன். வசந்த் நம்பரை எடுத்து போன் பண்ண ஆரம்பித்தான்.