Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

கண் சிமிட்டும் வானவில் – 17

13 May 2021 10:49 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

கவிஞர் இரஜகை நிலவனின்
தொடர்கதை
அத்தியாயம்-17 (இறுதி பாகம்)

தேடுதலின் வீழ்ச்சி!!!

பதினான்கு நாட்களுக்குப் பிறகு......
நெய்லி மருத்துவ னைக்கு வந்து எல்லாம் முறைப்படி பணப் பட்டுவாடா செய்து விட்டு நரேனின் அறைக்கு வந்து "நேற்று முடிந்தால் போவதாகச் சொன்னாயே போக முடிந்ததா?" என்று கேட்டாள்.

உதட்டை  பிதுக்கிய  நரேன் "ப்ச்....போக முடியல...இப்ப கூட உன் காரிலே  ஏறுவதற்கு  இண்டு  பேர் துணை தேவைப்படுது.... ஆஸ்பத்திரிலே  ரெண்டு  பேரை  அரேஞ்ச் பண்ணி வச்சிருக்கேன்"எழுந்து  நொண்டியபடியே வந்து நாற்காலியில் அமர்ந்தான்.

தொடர்ந்து " வசந்த் அப்பா அம்மா கேட்டாங்கண்ணா என்ன சமாதானம் சொல்லப்போகிறோனோ அதுதான் பயமாயிருக்கு” என்றான்

”அதன் பிறகு வசந்த், கவிதா போனே வரவேயில்லையா? .என்றாள் நெய்லி.

”இல்லியே… அது தான் பயமாக இருக்கிறது….” “சரி..சரி… கிளம்பு… என்கூட வந்தவர்கள் காரில் காத்திருக்கிறார்கள்” என்று சொல்ல, இருவர் வந்து மெதுவாக, நரேனைத் தாங்கிப்பிடித்துக் கொண்டு காருக்கு வந்தார்கள்.

* * * * * *

”என்ன திட்டம் வைத்திருக்கிறாய் சொல்லு?" என்றார் அமைச்சர்.

அமைச்சரே கேட்கும் போது அமைதி காப்பது தவறென உணர்ந்த பிரபு "கண்ணன் நல்ல செய்தியோடு வருவான் சார்" என்றார் 

"கிழிச்சீங்க...இப்ப கண்ணனே நம்ம முத்து சொல்ற மாதிரி ஆடிக்கிட்டு இருக்கான். சே...இன்னும் இந்த ஆளை நம்பிக்கிட்டிருக்கேன் பாரு... முத்து சொல்லுப்பா"? என்றார்

"ஐயா அவங்க. போற காரிலே சிப் வைத்தாகி விட்டது.

அவங்க எங்க போனாலும் நாம நம்ம காரிலே இருந்தபடியே ஈஸியா  அங்கள பின் தொடர்ந்திலாம்" என்றான் முத்து.

”சபாஷ் முத்து. சரி அவங்க எப்ப கிளம்புறாங்கண்ணு பாரு. நாம பின்னால போயிடலாம். ஆங்..பிரபு....காட்டுக்குள்ளே போறதுக்கு அனுமதி வாங்கிடுவீங்கல்ல. ...இல்ல ..அதுக்கும் மந்திரி பவரைத்தான் உபயோகிகக்கணுமா"? கோபமாக சாடினார் அமைச்சர்

"அதெல்லாம் நான்  பார்த்துக்கொள்கிறேன் சார்" என்றார் பிரபு

"ஆங்... முத்து அவங்க கார் கெளம்பிட்டாண்ணு பாரு…

“ஆமா. சார். அவங்க கெளம்பியாச்சி” என்றான் முத்து “நாமும் புறப்பட வேண்டியது தானே?” என்று முன்னால் அமைச்சர் நடக்க, எல்லோரும் அவரை பின் தொடர்ந்தனர்.

* * * * * *

நரேனும் நெய்லியும் இங்கிலாந்து குழுவினரும் அந்த செடியை நெருங்கிய போது, “ஏய் யாரோ நம்மள பாலோ பண்ற மாதிரி தெரியுது”  என்றாள் நெய்லி.

”சான்ஸே இல்ல.. இந்த இடம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்ல. பாரு  அந்த ஆல காலச் செடி அங்கே தெரியுது பாரு” என்றான் நரேன்.

“ஏய்… இங்கே பாரு. வசந்த்… கவிதா… இது யாரு?” என்றாள் நெய்லி பயத்தில் கிறீச்சிட்ட படி.

“அது நம்ம ஆட்டோ டிரைவர் ரமணி..இது என்ன மூணு பேரும் சிலை மாதிரி நின்னுகிட்டு…” என்று சொல்லியவாறு  முதலில்  நரேன் இறங்க, நெய்லியும் பின் தொடர்ந்தாள்.

கூட வந்தவர்கள்  “நீங்க போய் அந்த செடியக்கொண்டு வாங்க” என்றவாறு திரும்ப பாம்பு கூட்டம் பின்னால் நெளிந்து வர, அவர்களும் நரேன், நெய்லியோடு இறங்கி ஓட, அவர்கள் செடியை நெருங்க, எல்லோரும் கற்சிலையாகி விட,  யாரோ  அலை பேசியில் அழைத்ததில் நெய்லியின் அலைபேசி மணி அடித்துக்கொண்டே இருந்தது.

பின்னால் வந்த மந்திரியின் காரில் இருந்த பிரபு,” அதோ அந்த சித்தரின் கல்லறை மேலே அந்தச் செடி” என்றார்.

கூட இருந்த கண்ணான்,  “என்ன எல்லாரும் அங்கே சிலை மாதிரி நின்று கொண்டிருக்கிறார்கள்”? என்று கேட்க, “எவன் எப்படி போனா நமக்கென்னடா?” என்ற அமைச்சர், “கமான். முத்து. இறங்கு.  கண்ணன் இறங்கி வந்து முன்னாலே போ…” என்றார்.

அந்த ஆலகாலச் செடியை நோக்கி முத்து, கண்ணன், அமைச்சர். மூவரும் நடக்க, ஏதோ தப்பு நடக்கிறது என பிரபு பின்னாலே ஒட ஆரம்பிக்க… அவரை பாம்புக்கூட்டம் துரத்த ஆரம்பித்தது. செடியை நோக்கி நடந்த  முத்து, கண்ணன், அமைச்சர் மூவரும் அருகில் வர, முதலில் கண்ணன் ”ஆ” வென்று கத்தியவாறு கற்சிலையாகிப் போக… அவனோடு முத்துவும் அமைச்சரும் கற்சிலையாகிப் போனார்கள்.

* * * * * *

”உச்சிக்கு கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள் மச்சிக்கு மேலேறி வானுதிரம் தானெடுத்து கச்சை வடம் புரிய காயலூர் பாதையிலே வச்சு மறந்தல்லோ- என் கண்ணம்மா வகை மோசமானேன்டி.’*

பேரின்பத்தை உணர்ந்தவர்கள் சிற்றின்பத்தை
நாடமாட்டார்கள். இப்படி இறை இன்பத்தை
உணர்ந்தவர்களுக்கு கரும்பும் துவர்க்குமாம்;
செந்தேனும் புளிக்குமாம்.

ஆக்ஞையில் (இரு புருவங்களுக்கு நடுவில்
தியானம் செய்து) பிரம்ம எந்திரத்தை தரிசித்து
நினைத்தால் அமிர்தத் தேனைப் பருகமுடியும்.

பேரின்பம் பெறமுடியும் என்பது கருத்து.

நரேன் வந்திருந்த காரில் கிடந்த சித்தர் எழுதியிருந்த புத்தகத்தில்

'இந்தப் பாடலை பாராயணம் செய்தும் தொடர்ந்து சொல்லிக் கொண்டும்  போகிறவர்களுக்கு இந்த  ஆலகால கற்பக செடி எளிதில் கிடைக்கும்.

இந்த மந்திரத்தை சொல்லாமல்  செடியின்  அருகில் அரைகல் தொலைவு  நெருங்குபவர்கள் கற்சிலையாவார்கள் என்று எழுதியிருந்தது...

முற்றும்

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
3 years ago

அருமையான சிறுகதை இரஜகை நிலவன், வாழ்த்துக்கள்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096542
Users Today : 3
Total Users : 96542
Views Today : 3
Total views : 416677
Who's Online : 0
Your IP Address : 3.145.97.235

Archives (முந்தைய செய்திகள்)