10 Aug 2020 12:00 amFeatured
கவிஞர் இரஜகை நிலவனின்
தொடர்கதை
அத்தியாயம் - 02
அது, அழகாக இங்குமங்கும் சுற்றிக் கொண்டிருந்து, கொஞ்சம் ஆச்சரியாமாகவும் , அதிசயமாகமாகவும் தோன்றியது நரேனுக்கு..
” என்ன இன்றைக்கும் புறா ஆராய்ச்சியா ?“ சிரித்துக் கொண்டே வெளியே எட்டிப்பார்த்தான் வசந்தன்.
“பார்.. அது அங்கேயும் இங்கேயுமாக..நடப்பதும்… கழுத்தையும் முன்னே பின்னே அசைத்துக்கொண்டே பறக்க முயல்வதும்… சே… இவ்வளவு அழகான விசயங்களை நாம் இவ்வளவு நாளும் இரசிக்காம இருந்த்திருக்கிறோமே.. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது..“ அந்த புறா இங்குமங்கும் நடப்பதை பார்த்துக்கொண்டே வர்ணித்தான் நரேன்.
“ ஏய் நரேன், எவ்வளவு விசயங்கள் கிடக்கின்றன. அதை விட்டு விட்டு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? கவிதா ஏதாவது பேசினாளா?” வசந்த் படுக்கையிலிருந்து எழுந்தான்
“ தூங்கு மூஞ்சி… முதல்ல எழும்பி குளிச்சி முடிச்சுட்டு வா..” என்றான்நரேன்.
” டேய் இன்றைக்கு புரொபசருக்கு…..அதாண்டா..பிரபுவிற்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்…?” என்றான் தொடர்ந்து….
”அது தான் நேற்றே முடிவு பண்ணிய விசயம் தானே”…வசந்த், நரேனின் கண்களைப் பார்த்து.. “சரி.. காலையிலே நெய்லியிடம் போனிலே என்ன சொல்லிக் கொண்டிருந்தாய்…”நரேன்…எழுந்து கண்ணன் வருகிறானா என்று எட்டிப்பார்த்தான்.
”என்ன கண்ணனைத் தானே தேடுகிறாய்.. எல்லாம் நேற்றே சொல்லியாச்சி.. அவன் டீ கூட டிபனும் மத்தியான சாப்பாட்டையும் எடுத்துட்டு வந்துடுவான். பிரபு சார் தான் நம்ம சொன்னத நம்பின மாதிரி தெரியல..
ம்… நரேன்… காலையிலே நெய்லி ஒரு அருமையான விசயம் சொன்னாள்… கவிதா அனுப்பிய வரைப்படத்திலே இருக்கின்ற மாதிரிதான் புதையல் இருக்கிற இடம் இருக்கவேண்டும்.. அத்தோட அந்த கொரோனாவுக்கான மூலிகையும் அந்த ஏரியாவுலேதான் இருக்ககூடும் என்றுசொன்னாள்.”
” இங்கிலாந்திலேயிருந்து அவ தேடிக்கண்டு பிடிச்சி சொல்லிக்கிட்டிருக்கா டேய் … அவஎங்கே … எப்படித் தேடுறா?” என்றான் நரேன்
”ஏதோ அவ சொன்ன அனுமானத்திலேதான் தேட ஆரம்பிச்சிருக்கோம்..
பாக்கலாம்.. ஆமா கவிதா என்ன சொன்னாள்” என்று கேட்டான் வசந்த்.
”ரெண்டு பேரும் லவ் பண்ணிக்கிட்டு … அரசாங்கத்துக்கு தெரியாம புதையலப்பற்றி பேசிக்கிட்டிருக்கோம்… சரி நெய்லி சொன்னதை கவனமாக குறிச்சிக்க… புரொபசர் வந்ததும் மெதுவாக கிளம்ப ஆர்ம்பிக்கணும்.” என்றான் நரேன்.
பிரபு வந்தவுடன், “ ரொம்பவே வேக்க ஆர்ம்பிச்சிடுச்சு.. வசந்த்… கண்ணன் வந்தவுடன் நீங்க காட்டுக்குள்ளே கிளம்ப ஆரம்பிச்சிடுங்க..
எதுவரைக்கும்வண்டியிலே போகமுடியுமோ அதுவரைக்கும் வண்டியிலேயே போங்க.. அப்புறம் வண்டியை விட்டுட்டு நடந்துருங்க.. இடம் எங்கே தெரியுமில்லையா..டிரைவர் தீபக்கை கூட்டிட்டுப் போறீங்களா எப்படி்?..... அவர் கேட்டதும் “வேண்டாம் சார். நாங்களே வண்டி ஓட்டிக்கொள்கிறோம்… எதற்கும்..நம்ம கண்ணனை துணைக்கு வச்சிக்கிடறோம்..” என்றான் வசந்த்.
“அதுசரி … லோக்கல் ஆள் ஒண்ணு இருந்தா வசதியா இருக்கும். .எவ்வளவு தூரம் இருக்கும் என்று பார்த்தீர்களா“ என்றார் பிரபு.
“அது..நம்ம வண்டி போற தூரம் நாலு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.. அதுக்கப்புறம் ஏரக்குறைய அஞ்சு கிலோ மீட்டர் நடக்க வேண்டியதிருக்கும்.. அங்கே கொடிய மிருகங்கள் இருக்கலாம் என்று கண்ணன் சொன்னான்” என்றான் வசந்த்.
“ சரி .. சரி… கவனமாக போங்க..கையிலே கத்தி வச்சிக்கிடுங்க,…என் கை துப்பாக்கியையும் தர்ரேன். தேவைக்கு வச்சிக்கிடுங்க.. ” என்றார் பிரபு.
”ரொம்ப நன்றி சார்..” என்றான் நரேன்.
“ஏதோ கொஞ்சம் வேலை செய்கிற மாதிரி தெரியுது… பார்ப்போம்.. எனக்கு எவ்வளவு பிரசர் போட்டிக்கிட்ட்ருக்கங்க.. தெரியுமா?” ”சீக்கிரம் கெளம்புங்க.. நான் தீபக்கிடம் சொல்லி மத்தியான சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணிக்கிறேன்.” உள்ளே சென்றார்.
“வசந்த்..நீ அந்த கம்ப்யூட்டரிலேயிருந்து நெய்லி அனுப்பின வரை படத்தை ப்ரிண்ட் போட்டுக்கொள்… “ நான் சார் கிட்டேயிருந்து துப்பாக்கியை வாங்கிட்டு வர்றேன்..” என்றவாறு உள்ளே சென்றான்.
”துப்பாக்கியெல்லாம் தேவையா? “ எச்சரித்தான் வசந்த்..
“கையிலே இருக்கட்டுமே..” என்றான் நரேன்.
:”சரி உன் விருப்பம்..”
“நாம் காட்டுக்குள்ளே புதுசா போகிறோம்… ஜாக்கிரதையாக இருக்கிறது நல்லதில்லையா..”
கண்ணன் கீழேயிருந்து கையசைக்க.. “ வசந்த். .இவனுக்கு நம்ம விசயம் எதுவும் தெரியுமா..?“ என்று கேட்டான் நரேன்
“இவன் ஒருத்தன். .நல்லா தெரிஞ்சுக்க… நம்ம நால் பேர்தான் இந்த பிளானிலே இருக்கோம்.. நான் ப்ரிண்ட் எடுத்கிட்டு கீழே போறேன்.. சீக்கிரம் புறப்பட்டு வா..” என்று உள்ளே நுழைந்தான்.
கையிலே பிரிண்ட் போட்டு எடுத்துக் கொண்ட காகிதங்களோடு வசந்த் வெளியே வர … நரேனும் சேர்ந்து கொண்டான்.
எல்லோரும் வண்டியில் ஏறியவுடன் கண்ணன் ,” எந்தப்பக்கமாக போக வேண்டும் ”என்று கேட்டான்.
“நேரே போய்க்கிட்டே இரு. நான் சொல்ற திருப்பிலே லெப்டிலே திரும்பிப் போகலாம்…..” என்ற வசந்த், “ நரேன், ஒண்ணு கவனிச்சியா! பிரபு…ஏதோ சந்தேகப்படுகிறது மாதிரி தோணுது…” என்றான் முணுமுணுப்பாக
வழியில் ஒரு போலீஸ் படை நின்று வண்டியை வழி மறித்தது.
தொடரும்................