18 May 2022 1:33 pmFeatured
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது.
ஆளுநர் காலதாமதம் செய்தது தவறு
உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், 'ஆளுநர் காலதாமதம் செய்ததால் நீதிமன்றமே தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுவிக்கிறது. அரசியல் சாசனப் பிரிவு 161ன் படி மாநில அரசு எடுத்த முடிவை ஆளுநர் செயல்படுத்தவில்லை. ஆளுநர் காலதாமதம் செய்தது தவறு.
ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தது அரசியல் அமைப்பு சட்டப்படி தவறு. ஆளுநர் செயல்படாத விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசின் கருத்தை பெறத் தேவையில்லை. முழுமையாக ஆராய்ந்த பிறகே பேரறிவாளனை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.
மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. பேரறிவாளன் விவகாரத்தை மீண்டும் ஆளுநர் பரிசீலனைக்கு அனுப்ப விரும்பவில்லை. பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
ஆளுநர் காலதாமதம் செய்ததாலேயே உச்சநீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது,'என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு கடந்து வந்த பாதை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை கடந்த 2014ல் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
தொடர்ந்து, 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
அதன் மீது 2 ஆண்டுகளாக முடிவெடுக்காமல் இருந்த ஆளுநர் குடியரசு தலைவருக்கே அதிகாரம் உள்ளதாக உள்துறை அமைச்சகம் மூலமாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்தார்.
அதே சமயம் குற்றமே நிரூபிக்கப்படாமல் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள தன்னை விடுதலை செய்யக் கோரி கடந்த 2020ம் ஆண்டு பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். 10 மாதங்களாக பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பேரறிவாளன் விடுதலை செய்யும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்ற வாதத்திற்கு இடையே அவர் ஏன் சிறையில் இருக்க வேண்டும் என்று கேட்ட நீதிபதிகள், நீதிமன்றமே விடுதலை செய்ய நேரிடும் என்று கூறினர்.
மாநில அமைச்சரவையின் முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்ற கூறிய நீதிமன்றம், தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பியது அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் செயல் எனவும் தெரிவித்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு இன்று மேற்கண்ட வழக்கில் தீர்ப்பு வழங்கியது.
மத்திய அரசு வாதம்
மத்திய அரசு வைத்த வாதத்தில், பேரறிவாளன் வழக்கில் தண்டனை குறைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. ஏற்கனவே அவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுவிட்டது.
அவருக்கு ஏற்கனவே ஒரு நீதி சலுகை வழங்கப்பட்டுவிட்டது. இதனால் மீண்டும் அவரின் தண்டனையை குறைக்க கூடாது. இந்த வழக்கில் மத்திய புலானய்வு அமைப்பு விசாரித்த வழக்கு. இதன் காரணமாக அதில் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கவே அதிகாரம் உள்ளது.
ஆளுநர் ஏற்கனவே குடியரசுத் தலைவருக்கு இந்த மனுவை அனுப்பிவிட்டார். இதனால் அவர்தான் இதில் முடிவு எடுக்க வேண்டும் என்று வாதம் வைத்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வாதம்
இதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வைத்த வாதத்தில், ஆளுநர் எப்படி மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். பேரறிவாளன் ஆயுள் தண்டனை கைதி என்பதால் அவரின் விடுதலையில் ஆளுநர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தவறு. இந்திய கூட்டாச்சி தத்துவத்திற்கே இது எதிரானது. பேரறிவாளனை யார் விடுதலை செய்வது என்ற அதிகார மோதலுக்கு இடையில் பேரறிவாளன் ஏன் சிக்கி தவிக்க வேண்டும். அவரை ஏன் நாங்களே விடுதலை செய்ய கூடாது.
அமைச்சரவை முடிவு எடுத்த விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்து முடிவெடுக்க போகிறோம், என்று கூறியது.
தீர்ப்பு பேரறிவாளன் ஏற்கனவே சிறையில் 30 வருடம் இருந்துவிட்டார். அவர் அங்கேயே படித்தும் விட்டார். அவரின் நடத்தையில் எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் விடுதலை செய்யும் வரை காத்திருக்காமல் நாங்களே ஏன் விடுதலை செய்ய கூடாது? என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கும், தமிழ்நாடு ஆளுநருக்கும் கடுமையான கேள்விகளை எழுப்பியது
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
விடுதலை உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்றம் இது போன்ற தீர்ப்பை வழங்குவது மிகவும் அரிதாகும்.
நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், பேரறிவாளன் வழக்கில் ஆளுநர் செய்த தாமதம் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டது.
அவரின் விடுதலை மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியது. 28 மாதங்கள் இதில் முடிவு எடுக்காமல் இருந்தது தவறு. அவர் காலதாமதம் செய்தது தவறு. இதனால் அவரை விடுதலை செய்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பாக ராகேஷ் திவேதி இந்த வழக்கில் ஆஜர் ஆனார். அவர் வைத்த வாதத்தில்,
ஆளுநர் தனது தனி முடிவுகளை எடுக்க கூடாது
ஆளுநருக்கு அதிகாரமே இல்லை
கோட்சே
திருப்பத்தை ஏற்படுத்திய வாதம்