29 Oct 2019 10:24 amFeatured
குழந்தை சுஜித்தின் உடல் ஆழ்துளை கிணற்றில் இருந்து 5 நாட்களுக்கு பின் அழுகிய நிலையில் மீட்டு நல்லடக்கம்
25.10.2019ம் தேதி மாலை 5.30 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 80 மணி நேரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை சுர்ஜித் உடல் நான்கு நாட்கள் முயற்சிக்கு பின் இன்று அதிகாலை மீட்கப்பட்டது.
ஆம்புலன்ஸ்
மூலம் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை
அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முன்னதாக
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்
உயிரிழந்துள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர்
ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இரவு 10.30 மணியளவில் இருந்து ஆழ்துளை கிணற்றில்
இருந்து அழுகிய வாடை வந்ததாக
அவர் கூறினார். 80 மணி நேர மீட்புப் பணியும் பலனளிக்கவில்லை. குழந்தையை
உயிருடன் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
இதனையடுத்து வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்
செய்தியாளர்களை சந்தித்தார்.அவர் கூறியதாவது: ஆழ்துளை
கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க
அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆழ்துளை
கிணற்றில் இருந்து இரவு 10.30 மணியளவிலிருந்து
அழுகிய வாடை வந்தது என
வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்
தெரிவித்து இருந்தார். இதனையடுத்து அழுகிய நிலையில் குழந்தை
சுஜித்தின் உடல் தற்போது மீட்டப்பட்டு
பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டது.
அங்கு பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில் சுஜித் உடல் சவப்பெட்டியில் வைத்து ஆம்புலன்ஸ் மூலம் ஆவாரம்பட்டி பாத்திமா புதுநகர் கல்லறைக்கு சுர்ஜித்தின் உடல் எடுத்துச்செல்லப்பட்டது.
அங்கு அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கே வைக்கப்பட்டுள்ள சுஜித் உடலுக்கு அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மீட்புப் போராட்டத்தின் பலன் கிடைக்காமல் சிறுவன் சுஜித் உடல் மட்டும் மீட்கப்பட்டது. உறவினர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடல் வைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே கல்லறையில் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக குழி தோண்டப்பட்டு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. நான்கு நாட்களாக மண்ணுள் சிக்கித் தவித்த அந்த சின்னஞ்சிறு பிஞ்சு மீண்டும் மண்ணுக்குள்ளேயே துயில்கொண்டது.
இந்நிலையில் அந்த 600 அடி ஆழ்துளை கிணறு மற்றும் சுஜித்தை காப்பற்ற தோண்டப்பட்ட குழியும் கான்கிரீட் கலவைகள் மூலம் மூடப்பட்டது.