10 Apr 2020 1:43 pmFeatured
-வே.சதானந்தன்
சித்திரை பிறக்கும்
திருவிழா நடக்கும்
தேரேறி ஊர்வலமா வருவேன்
இப்போ!
கும்பிடவே ஆளில்ல
ஆடிக்கே காத்திருக்கேன்
கூழ் ஊத்த ஆள்வருமான்னு
புனித வெள்ளி ஊருக்கு
கருப்பு வெள்ளி எனக்கு
ஈஸ்டர் வந்தா எழுந்து வருவேன்
எழுப்புதல் பாட ஆளில்லை.
பிரசங்கம் கேட்கவே
யூட்யூப்பே சதமா கிடக்கு
ஏஞ்சனெமெல்லாம்
அட நீ அன்றைக்கே வந்திருந்தா
என்னை தொட்டு
சிலுவையேற்றியிருக்க மாட்டானே !
தூரமா போயிருப்பானே!!
அஞ்சு நேர தொழுகைன்னு
அடங்கி கிடக்கு ஏஞ்சனமெல்லாம்
வெளியே வரவே தயங்குது
வெள்ளி ஜும்மாக்கும் ஆளில்லை
வெறுப்பை கக்கும்
வேற்று சனத்தால.
நோம்பு நோக்கும் எம்மக்கா
நொந்து நீ போகாத
என்னாளும் இருக்காது
இந்நாளப் போலவே
பரிச்சை முடியும்
வேலைக்கு போகலான்னு
படிக்கும் போதே
பாஸானேன்
உள்ளரங்கு தேர்வுல.
பரிச்சை நடக்குமா?
எங்கனவு பலிக்குமா?
வெட்டியாதானே இருக்கே
வெளியே போனாதானே
வேலை கிடைக்கும்ன்ன சனம்
வெட்டியா முறிக்கபோற
வீட்டோட கிடங்குது
பக்கத்து தெருவுதான்
பார்க்ககூட முடியல பலநாளா.
தொலைபேசினாலும்
தொல்லை கொடுக்குதாம்
அவ வீட்டு சனம்….
ரீச்சார்ஜ் நான் போட்டும்
ஒருவேள சோத்துக்கு
கோவில் கண்ட இடமெல்லாம்
குத்தவச்சு எந்திரிப்போம்.
வந்து போகும் எஞ்சாமிங்க கொடுக்கும்ன்னு.
பங்குனியில உத்திரமில்ல
கிடாவெட்டவும் ஆள் வரல
குலச்சாமியே கூழுக்கு அழுது
குடுப்பார் யாருமில்லேன்னு….
எங் கும்பிய யாரு கேப்பா?
மக்கா வந்திட்டீயா?
பாரின் சரக்கு கொண்டு வந்தியா?
தோப்புக்கு வந்துரு
சைட் டிஷ் என் பொறுப்பு
கதுவாலி பிரை பண்ணிடுவோம்.
சொன்னவனெல்லாம்
சைடாவே போரான்!!
என்ன மக்கா
செக்கப் பண்ணிக்க !
சைலண்ட்டா இருண்ணுட்டு !
சீவி சிங்காரிச்சு
ஊரடங்க காத்திருப்பேன்
நொள்ளையோ சொள்ளையோ
உறவாட வாருவானுங்க
இப்போ
சீண்டுவார் யாருமில்லை
ஊரடங்கு உத்தரவாம்ல!?