10 Dec 2019 8:35 amFeatured
மும்பை புறநகர் மாநில திமுக மற்றும் மாராட்டிய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் இணைந்து நடத்திய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், பேராசிரியர் சமீரா மீரான் நெஞ்சம் போற்றும் நினைவலைகள் நிகழ்ச்சி ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு செம்பூர் , இராஜிவ் காந்தி பூங்கா அரங்கில் நடைபெற்றது.
தலைமை அலிசேக் மீரான்
மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் தமிழ் நேசன் வரவேற்புரை ஆற்ற, மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் தொடக்கவுரை ஆற்றினார்.
புகழ் வணக்கம்
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் திருவுருவப் படத்திற்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.அவர்களும், பேராசிரியர் சமீரா மீரான் அவர்கள் திருவுருவப் படத்திற்கு இரா.உமா அவர்களும் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர்.
பேராசிரியர் சமீரா மீரான் அவர்கள் எழுதிய "நாளைய வரலாறு"
பேராசிரியர் சமீரா மீரான் அவர்கள் எழுதிய " நாளைய வரலாறு" என்ற நூலை பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் வெளியிட முதல் பிரதியை சமூக சேவகர் இராஜேந்திர சுவாமி அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களிடமிருந்து நூலைப் பெற்றுக் கொண்டனர்.
இழந்து தவிக்கிறோம்
மேலும் "இழந்து தவிக்கிறோம்" என்ற பொதுத் தலைப்பில் நடைபெற்ற நினைவேந்தல் சொற்பொழிவில்
"நெருப்பில் மலர்ந்த வீரத்தை.." என்ற துணைத் தலைப்பில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் குறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும், "அன்பில் சுரந்த ஈரத்தை..." என்ற துணைத் தலைப்பில் பேராசிரியர் சமீரா மீரான் குறித்து தோழர் ஊடகவியலாளர் இரா.உமா அவர்களும் மிகச் சிறப்பான உரை நிகழ்த்தினர்.
இரா.உமா அவர்கள் பேசும் போது பேராசிரியர் சமீரா மீரான் அவர்களின் அன்புள்ளத்தை மிக உருக்கமாக எடுத்துரைத்தது பார்வையாளர்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தலைவர் கலைஞரின் சாதனைகளை பல்வேறு மேற்கோள்களோடு பேசியதோடு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் , தளபதி மு.க. ஸ்டாலின் எனத் தொடரும் திராவிட இயக்க வரலாற்றையும், சமூக நீதிக்கு தலைவர் அவர்கள் ஆற்றிய சிறப்பான பணிகளையும், அரசியலில் எப்படி மாபெரும் ஆளுமையாக உருவானார் என தலைவர் கலைஞர் குறித்தான அரிதான செய்திகளையும், தலைவர் கலைஞருக்கும் , தொண்டர்களுக்கும் இருந்த நெருக்கத்தையும் குறிப்பிட்டு செறிவானதொரு உரையை நிகழ்த்தினார்.
முன்னிலை
மும்பை புறநகர் மாநில பொருளாளர் பி.கிருஷ்ணன், எழுத்தாளர் ஷேக் முகமது, துணைச் செயலாளர் அ.இளங்கோ, இலக்கிய அணி புரவலர் சோ.பா.குமரேசன், தமிழ் எழுத்தாளர் மன்ற ஆலோசகர் பாவலர் முகவை திருநாதன், துணைப் பொருளாளர் அந்தோணி ஜேம்ஸ், துணைச் செயலாளர் ஆசிரியர் பொற்செல்வி கருணாநிதி, மும்பை மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இரா.கணேசன், செம்பூர்கிளைக் கழகச் செயலாளர் ச.நம்பி, செம்பூர் கிளைக் கழகத்தைச் சார்ந்த ம.பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நினைவேந்தல் உரை
தருண் பாரத் நற்பணி மன்ற நிறுவனர் இராஜேந்திர சுவாமி அவர்கள் நினைவேந்தல் கவிதை வாசிக்க , மும்பை மாநில இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், பா.ஜ.க மும்பை தமிழர் பிரிவு தலைவர், இராஜா உடையார், தமிழ் எழுத்தாளர் மன்ற பொருளாளர் அ.இரவிச்சந்திரன், மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், மும்பைத் தமிழ்ச் சங்க மேனாள் செயலாளர் வெ.பாலு, திராவிட மறுமலர்ச்சி நடுவம் ஜோ.இரவிக்குமார்,
இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன், தமிழ் எழுத்தாளர் மன்ற செயற்குழு உறுப்பினர் கு.மாரியப்பன், இலக்கிய அணி புரவலர் கவிஞர் இரஜகை நிலவன், துணை அமைப்பாளர் ஜெய்னூலாப்தீன், பீவண்டி கிளைக் கழகச் செயலாளர் மெகபூப் பாட்சா ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பேராசிரியர் சமீரா மீரான் அவர்களின் இணையர் சைபுன்னிசா, மகள் சமீரா, மகன் சமீர் உள்ளிட்ட குடும்ப உறவுகள், இலெமூரிய இதழ் முதன்மை ஆசிரியர் சு.குமணராசன், மும்பை மாநகர திமுக அவைத் தலைவர் வே.ம.உத்தமன், இரயில் பயணிகள் சங்கச் செயலாளர் டி.அப்பாத்துரை, ஜெரிமெரி தமிழ்ச் சங்க மேனாள் தலைவர் கோ.சீனிவாசகம், கோரேகாவ் தமிழ்ச் சங்க மேனாள் தலைவர் மணி, தமிழ் காப்போம் செயலாளர் இறை.சா.இராசேந்திரன்,, அணுசக்தி நகர் கலைமன்றச் செயலாளர் பு.தேவராசன், மும்பை தமிழ்ச் சங்க செயலாளர் செ.இராமானுஜம்,
மும்பை மாநகர திமுகவைச் சார்ந்த பொன்னம்பலம், என்.வி.சண்முகராசன், மாறன் ஆரிய சங்காரன், இ.காங்கிஸ் அருண்குமார், கம்யூனிஸ்ட் ஞான அய்யாப்பிள்ளை , மும்பை புறநகர் மாநில திமுக கிளைக் கழக நிர்வாகிகள் வீரை.சோ.பாபு, சு.பெருமாள், திவா.வேல்முருகன், முஸ்தாக் அலி, பேராசிரியர் சு.சம்பத்,
பத்திரிக்கையாளர்கள் வணக்கம் மும்பை ஜெயா ஆசிர், தமிழறம் இராமர், தினத்தந்தி கருணாநிதி, மதிமுக தமிழ் மணிபாலா, மற்றும் கி.வீரமணி, பெ.ஆழ்வார், முனியன், வள்ளியூர் மணி, அப்துல் லத்தீப், வா.தில்லை, வாஷி ஆறுமுகம், பாண்டுப் சதாசிவம், ஆர்.சக்தி வேல், அ.திருநாவுக்கரசு மும்பை தி.க , அ.கண்ணன், செந்தமிழரசி, அறிவுமலர், ஆரேகாலனி இராஜேந்திரன், இரா.செல்வம், ஆ.பாலசுப்பரமணியம்,அண்ணாதுரை, க.மு.மாணிக்கம், கி.தனுஷ்கோடி உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.