15 Mar 2020 11:18 amFeatured
மராத்திய மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது அங்கொன்று இங்கொன்றாக சுமார் 30 பேர்கள் மகாராஷ்ட்ராவில் கரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையெடுத்து தீவிரமாக பரவுவதை தடுக்கும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் சில நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
மராத்திய மாநில அரசு அதிகமாக கூட்டம் கூடும் இடங்களுக்கு தடை விதித்துள்ளது குறிப்பாக திரையரங்குகள், வணிக வளாகங்கள், விழா அரங்கங்களை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி (1-9 வகுப்பு வரை) மற்றும் கல்லூரிகளுக்கு மார்ச்-31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 10,12 ம் வகுப்புகளுக்கான மற்றும் பல்கலைக் கழக பொதுத்தேர்வுகள் அறிவித்தது போல் தடையின்றி நடைபெறும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது