02 May 2020 12:45 pmFeatured
நேற்று (1-5-2020) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொளி காட்சி மூலம் மும்பையில் தாராவி,லேபர் கேம்ப், கோரேகான், தானே,நேரு நகர்,மாகிம்,உள்ளிட்ட பகுதிகளில் குவாரண்டினில் உள்ள தமிழ் மக்களிடம், மற்றும் தலைச் சுமை தொழிலாளர்கள், இட்லி,வியாபாரிகள்,ஆகியோரிடம் உரையாடினார்.
பெரும்பாலானோரின் கோரிக்கையான ரயில் சேவை கேட்டு எழுதிய கடிதம்.
பின்னர் அவர்களது கோரிக்கையை ஏற்று, அவர்களை தமிழகம் அழைத்துவர ஏற்பாடு செய்யும்படி, பிற மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர். அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப., அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நடவடிக்கை
அத்துடன் இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மகாராஷ்டிரா முதல்வர் அவர்களுக்கு மும்பை தமிழ் மக்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் அனுப்பி உள்ளார்.
T.R. பாலு M.P. அவர்கள் மகாராஷ்டிரா முதல்வர் நேர்முக உதவியாளர் சுதிர் மற்றும் அரசு தலைமை செயலாளர் ஆகியோரிடம் தமிழகத்திற்கு ரயில்கள் விடுவது பற்றிய அவசர அவசியம் பற்றி வலியுறுத்தி உள்ளார். மேலும் NCP தலைவர் சரத்பவார் அவர்களிடமும் ரயில் சேவை பற்றி இன்று காலை பேசி உள்ளார்
மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரயில்வே அமைச்சகத்திடம் பேசியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் பின்வருமாறு:
01-05-2020
பெறுநர்
டாக்டர். அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப.,
கூடுதல் தலைமைச் செயலாளர்,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை - 600 009.
அன்புடையீர், வணக்கம்.
மகாராஷ்ட்ராவில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் இன்று நான் நடத்திய காணொலிக் காட்சி ஆலோசனையில், அங்கு வாழும் நம் மாநிலத் தொழிலாளர்கள் அனைவரும், தமிழகம் திரும்ப விரும்புவதாகத் தெரிவித்தனர். ஆகவே, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, அவர்களை சிறப்பு ரயில்கள் மூலம் தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கு உரிய ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கொரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடிப்படையில், மகாராஷ்டிராவில் இருந்து அவர்களை தமிழகம் அழைத்துவந்து, தமிழகத்தில் அவர்களுக்கு உரிய பரிசோதனைகள் செய்து, அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களின்படி தனிமைப்படுத்தி, அவர்களது பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
அன்புடன்,
மு.க.ஸ்டாலின்
தலைவர், தி.மு.க.