04 Aug 2023 2:05 amFeatured
S.D.சுந்தரேசன், I.A.S (அரசுச் செயலர், அருணாச்சலப்பிரதேசம்)
(2) ஐ.ஏ.எஸ். தேர்வு - பணிகள் பலவிதம்
”தம்பி ஐ.ஏ.எஸ். பரிச்சையில் பாஸ் பண்ணி விட்டீர்களாமே! அதனை எந்தக் கல்லூரியில் படித்தீர்கள்? தமிழ்நாட்டுக் கல்லூரியில் ஐ.ஏ.எஸ். பட்டப்படிப்பு கிடையாதோ? எந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தால் நல்லது? அது செமஸ்டர் சிஸ்டமா அல்லது நான்-செமஸ்டர் சிஸ்டமா? ஐ.ஏ.எஸ். பட்டம் வாங்கிவிட்டால் உடனே வேலை கிடைத்துவிடுமா? என்று எண்ணுவோர் அன்றும் இருந்தனர். இன்றும் உள்ளனர். தமிழகத்தில் பெற்றோர் பலரும் ஐ.ஏ.எஸ். தேர்வு பற்றி அதிகம் தெரியாமல் இருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ். என்பது பி.ஏ., எம்.ஏ., என்பன போன்ற பட்டங்கள் என்று எண்ணுவோர் பலர். பலருக்கும் ஏற்படும் இது போன்ற ஐயங்கள் போக்கும் வகையில் ஐ.ஏ.எஸ் தேர்வு மற்றும் பணிகளின் விபரம் பற்றி விரிவாக காண்போம்.
ஐ.ஏ.எஸ். (I.A.S.) என்பதை ”இண்டியன் அட்மின்ஸ்ட்ரேட்டிவ் சர்வீஸ்” (Administration Service) என்று ஆங்கிலத்தில் விரிவாகக் குறிப்பிடுகின்றனர். இதனை தமிழில் ”இந்திய ஆட்சிப் பணி” (இ.ஆ.ப.) என்று குறிப்பிடுவர், ஆக. ஐ.ஏ.எஸ் என்பது ஒரு பட்டம் அன்று. அரசாங்கத்தின் உயர்பணியைச் சுருக்கமாக குறிக்கப்பயன்படும் மூன்று எழுத்துக்களே.
மத்திய அரசு, மாநில அரசு ஆகிய இரண்டிலும் அரசாங்க உயர் பணிகள் உள்ளன. இந்த உயர் பணிகளில் அமர்ந்து நிர்வாகம் செய்வதற்கு அதிகாரிகள் தேவை. தகுதி வாய்ந்தவர்களை அதிகாரிகளாகத் தேர்ந்தெடுப்பதற்கு, ”மத்தியத் தேர்வாணைக் குழு” (Union Public Service Commission - UPSC) என்ற அமைப்பை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசாங்கம் அமைத்துள்ளது.
UPSC என்ற சுருக்கமாகக் குறிப்பிடப்படும் மத்தியத் தேர்வாணைக் குழு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு வகையானத் தேர்வுகளை நடத்துகிறது. அத்தகைய தேர்வுகளில் ”சிவில் சர்வீஸஸ் தேர்வு” (Civil Services Examination) என்பதே மிகவும் கடினமானத் தேர்வாகும். இந்தத் தேர்வில் சிறந்த முறையில் வெற்றி பெற்றால் மட்டுமே ஒரு ஐ.ஏ.எஸ். எனப்படும் அரசு உயர் பணியில் சேர முடியும்.
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும்: ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகிவிடுவதில்லை, ஏனெனில் இத்தேர்வு ஐ.ஏ.எஸ். என்ற ஒரே ஒரு பணிக்கு மட்டுமே உரியத் தேர்வு அன்று. இத்தேர்வில் வெற்றி பெறுகிறவர்கள் ஐ.ஏ.எஸ். போன்ற "பல்வேறு உயர்பணியில் அமரத்தகுதி பெற்றவர்களாவார்கள், இந்த 2023ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுக்கான 01.2.2023 தேதியிட்ட அறிவிக்கை (Notification) வெளியானது. இந்த அறிவிக்கையின்படி பல்வேறு வகைப்பட்ட 21 பணிகளுக்கு 1105 சர்வீஸ் தேர்வு மூலம் தேர்ந்துதெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடப்படும் 21 பணிகள் வருமாறு:
(i) Indian Administrative Service
(ii) Indian Foreign Service
(iii) Indian Police Service
(iv) Indian Audit and Accounts Services Group “A”
(v) Indian Civil Accounts Service Group “A”
(vi) Indian Corporate Law Service Group "A"
(vii) Indian Defence Accounts Service Group "A"
(viii) Indian Defence Estates Service Group “A”
(ix) Indian Information Service, Group A
(x) Indian Postal Service Group "A"
(xi) Indian P & T Accounts And Finance Service Group "A"
(xii) Indian Railway Protection Force Service Group "A"
(xiii) Indian Revenue Service (Customs & Indirect Taxes) Group "A"
(xiv) Indian Revenue Service (Income Tax) Group "A"
(xv) Indian Trade Service Group “A”(Grade III)
(xvi) Indian Railway Management Service Group “A”
(xvii) Armed Forces Headquarters Civil Services, Group “B” (Section Officer’s Grade)
(xviii) Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service (DANICS), Group “B”
(xix) Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police Service (DANIPS), Group “B”
(xx) Pondicherry Civil Service (PONDICS), Group “B”
(xxi) Pondicherry Police Service (PONDIPS), Group “B”
சிவில் சர்வீஸ் - பணிகள் பலவிதம்
மேற்காணும் சிவில் சர்வீஸ் பணிகள் அனைத்தும் இரு பெரும் பிரிவுகளுள் அடைக்கலாம் அவை
1. அகில இந்தியப் பணிகள்:
அகில இந்தியப் பணிகளுக்கு தகுதியானவர்கள் மத்திய அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் ஆனால் மத்திய அரசு மாநில அரசு ஆகிய இரு அரசுகளாலும் கட்டுப்படுத்தப்படுகின்றனர்
சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அகில இந்திய பணிகள் இரண்டே அவை
2.மத்திய அரசுப் பணிகள் :
ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். தவிர மற்ற அனைத்து பணிகளும் மத்திய அரசு பணிகள் என்று அழைக்கப்படுகின்றன. இப்பணிகளை மத்திய அரசு மட்டுமே கட்டுப்படுத்த முடியும் மத்திய அரசு பணிகளை பிரிவு “ஏ” (Group “A”) மற்றும் பிரிவு “பி” (Group “B”) என்று பகுத்துள்ளனர்.
விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு பணிகள்:
சிவில் சர்வீஸ் பணிகள் பல தன்மையன இத்தேர்வு எழுதுபவர்கள் தமக்கு எத்தகைய பணி பிடித்தமானதாக உணர்கிறார்களாரோ அதனைத் தமது விருப்பத்தில் முதன்மையாக குறிப்பிட்டு அப்படியில் சேர வாய்ப்புள்ளது.
பொதுமக்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு செயலாற்றக் கூடிய ஆட்சிப் பணி வேண்டும் என்று விரும்புபவர்கள் கீழ்கண்ட பணிகளுள் ஒன்றில் சேரலாம்
Indian Administrative Services (I.A.S)
Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil
Service Group “B” (DANICS),
Pondicherry Civil Service Group “B” (PONDICS)
வெளியுறவுத் துறையில் சேர்ந்து வெளிநாடு சென்று பணியாற்ற விருப்பம் உள்ளவர்களுக்கு :
Indian Foreign Service (I.F.S)
காவல் துறை தொடர்புடைய பணிகள் மற்றும் சீருடைப் பணிகளில் (Uniformed Service) உள்ளவர்கள் கீழ்கண்ட பணிகளுள் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
Indian Police Service (I.P.S.)
Indian Railway Protection Force Service Group "A"
Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police
Service (DANIPS), Group “B”
மற்றும் Pondicherry Police Service (PONDIPS), Group “B”
வருவாய் மற்றும் சுங்கவரித்துறை பணியில் அமர்ந்து திடீர் சோதனை போன்ற நடவடிக்கையில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள்,
Indian Revenue Service (Customs & Indirect Taxes) Group "A"
Indian Revenue Service (Income Tax) Group "A" போன்ற பணிகளில் சேரலாம்.
கணக்குத் தணிக்கை மற்றும் வணிகவியல் நாட்டம் கொண்டோர் பின்வரும் பணிகளில் ஒன்றில் சேரலாம்
Indian Audit and Accounts Services Group “A”
Indian Civil Accounts Service Group “A”
Indian Defence Accounts Service Group "A"
Indian P & T Accounts And Finance Service Group "A"
நாட்டின் ராணுவத் துறையுடன் தொடர்புடைய பணிகளில் சேர நாட்டம் உள்ளவர்களுக்கு
Indian Defence Estates Service Group "A"
Armed Forces Headquarters Civil Services, Group “B” (Section Officer’s Grade)
போன்ற பணிகள் உள்ளன.
மேற்கண்ட பணிகள் தவிர, பல்வேறு வகைப் பணிகள் கீழ்க்கண்ட பணிகளுக்கும் இத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
Indian Postal Service Group "A"
Indian Corporate Law Service Group "A"
Indian Information Service, Group A
Indian Trade Service Group “A”(Grade III)
Indian Railway Management Service Group “A”
பணிகள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன.
”இத்தனை பணிகள் இருக்கின்றனவே இவற்றுள் நாம் விரும்பும் பணியில் எவ்வாறு சேர்வது?” என்ற மனக்குழப்பமே வேண்டாம். சிவில் சர்வீஸ் தேர்வில் ஒருவர் பெரும் மதிப்பெண்கள் மற்றும் அவரது விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக்கு ஏற்ப பணிகள் ஒதுக்கப்படுகின்றன.
ஒரு சிலரைத் தவிர எல்லோருக்கும் ஐ.ஏ.எஸ். (I.A.S.) அதிகாரியாக வேண்டும் என்பதே முதன்மையான விருப்பமாகக் கொண்டுள்ளனர். பலரின் விருப்பமும் ஐஏஎஸ் என்ற நிலை இருக்கும் பொழுது அவ்வாறு விருப்பம் உள்ளவர்களில் சிவில் சர்வீஸ் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறவர்கள் காலி இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஐ.ஏ.எஸ் பணியை அடுத்து பலரது முதன்மையான விருப்பம் ஐ.எஃப்.எஸ்.(I.F.S.) அல்லது ஐ.பி.எஸ். (I.P.S..) என்றிருக்கும். இவ்வாறு விருப்பம் உள்ளவர்களில் சிவில் சர்வீஸ் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் குறிப்பிட்ட விருப்பம், பணி இடங்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு பணிகளுக்குமான இட ஒதுக்கீடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பணிகள் ஒதுக்கப்படுகின்றன.
மேற்கண்ட முறையிலேயே மற்றும் உள்ள அனைத்து பணிகளுக்கும் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ஐ.ஏ.எஸ். தேர்வுகள் என்று பொதுவாக குறிப்பிடப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் பல்வேறு பணிகள் பற்றி விபரங்கள் அறிந்து கொண்டோம். அடுத்ததாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாவதற்கு வெற்றி பெற வேண்டிய சிவில் சர்வீஸ் தேர்வுகளை வெற்றி கொள்வது பற்றி பலரும் கொண்டுள்ள எண்ண ஓட்டம், நம்பிக்கைகள் பற்றியும், உண்மை நிலவரம் என்ன என்பது பற்றியும் வரும் அத்தியாயத்தில் காண்போம்.