13 Nov 2022 9:59 pmFeatured
ஆந்திர மாநில கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி நகரில் இயங்கிக் கொண்டிருக்கின்ற சிறிய அளவிலான இந்த பேனா தொழிற்சாலை 90 ஆண்டுகால பாரம்பரிய வரலாறு கொண்டது
வெள்ளையர்கள் தயாரிப்பில் வெளிவந்து கொண்டிருந்த பேனாக்களை ஓரம் கட்டிவிட்டு, சுதேசி பேனாக்களை நாட்டு மக்களிடம் கொண்டு சென்றதும் இந்த ரத்னம் பேனா நிறுவனம்தான்.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் கொகரி வெங்கடரத்தினம் ஆரம்பத்தில் தங்க நகைகள் செய்யும் பொற்கொல்லராக இருந்தார். 1921 ஆம் ஆண்டு, சிறப்பான வடிவமைப்பில் நகைகளைச் செய்து மகாத்மா காந்தியிடம் கொடுத்தார். பேனா போன்ற விலை குறைந்த பொருட்களை மட்டுமே பெறுவேன் என்று கூறி, தங்க நகையை வாங்க மறுத்துவிட்டார்.
ஊருக்குத் திரும்பிய ரத்தினம், பேனா தயாரிப்பு நிறுவனத்தை தன் பெயரிலேயே தொடங்கினார்,
ராஜமுத்திரி துணை நீதிபதி கிருஷ்ணமாச்சாரியின் பிரிட்டிஷ் பேனாக்களைப் பழுது நீக்கும்போது, நேரில் பார்த்துக் கற்றறிந்தார். மேலும், பேனா தயாரிப்பதற்கான பொருட்களைப் பெறுவதற்கு ஆந்திரா சயின்டிபிக் நிறுவனத்தின் உதவியை நாடினார்.
1932 ஆம் ஆண்டு பேனா தயாரிப்பை கோடகும்மம் பகுதியில் தொடங்கினார் முதல் பேனாவை 1934 ஆம் ஆண்டு மகாத்மா காந்திக்கு அனுப்பிவைத்தார் இங்கிலாந்தில் தயாரிக்கும் பேனாவைப் போன்று வடிமைப்பைக் கொண்டிருந்தது. இந்த பேனாவில் வெளிநாட்டுப் பொருட்களும் கலந்திருந்ததால், அதைப் பெற்றுக்கொள்ள மகாத்மா காந்தி மறுத்துவிட்டார்.
அதன்பிறகு, 100 சதவிகிதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உதிரிப்பாகங்களைக் கொண்டு பேனாக்களைத் தயாரித்தார். முதல் சுதேசி பேனாவை அகில இந்திய கிராமப்புற தொழிற்சங்கத்தின் செயலாளர் ஜே.சி.குமரப்பா மூலம் அனுப்பி வைத்தார்.
அதே பேனாவில் ரத்தினத்துக்குக் காந்தியடிகள் எழுதிய கடிதத்தில், மிக்க நன்றி. நீங்கள் அனுப்பிய பேனா, கடைகளில் கிடைக்கும் வெளிநாட்டுப் பேனாக்களுக்கு இணையாக இருக்கிறது' என்று குறிப்பிட்டுப் பாராட்டியிருந்தார்.அதன்பிறகு, முழு உத்வேகத்துடன் சுதேசி பேனாவை ரத்னம் நிறுவனம் தயாரிக்க ஆரம்பித்தது.
இந்தப் பேனா தொழிற்சாலைக்கு ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் வத்துள்ளனர். குடியரசுத் தலைவர், பிரதமர் முதல் குடிமக்கள் வரை ரத்னம் பேனாவுக்கு வாடிக்கையாளர்கள் ஆனார்கள். அமெரிக்க அதிபர்கள், ஜெர்மன் பல்கலைக்கழக வேந்தர்கள், முன்னாள் சோவியத் ரஷ்யாவின் தலைவர்கள், பத்திரிகை நிறுவனங்களுக்கு ரத்னம் நிறுவனத்திலிருந்து பேனாக்கள் அனுப்பப்பட்டன.
சமீபத்தில் ஜெர்மன் பல்கலைக்கழக வேந்தர் ஏஞ்சலா மெர்கலுக்கு ரத்னம் நிறுவனத்தின் 4 ஆயிரம் மதிப்புள்ள பேனாவை இன்றைய பிரதமர் அன்பளிப்பாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
இன்று ரத்னம் பேனா நிறுவனத்தில் 500 ரூபாயிலிருந்து 70 ஆயிரம் ரூபாய் வரையிலான பேனாக்கள் மாணவர்களுக்காகவே தயாரிக்கப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி பேனாக்கள் 2 லட்சம் ரூபாய் என்கிறார்கள் ரத்னம் நிறுவனத்தினர்.
Congratulations sir..👏🏼👏🏼👌🏼