20 Oct 2021 6:07 amFeatured
17-10-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் - இந்தியா வொரேயால் தமிழ்க்கலாச்சார மன்றம் - பிரான்ஸ், தமெரிக்கா தொலைக்காட்சி- அமெரிக்கா ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து இணையம் வழியாக சிறப்புப் பட்டிமன்றம் நடத்தியது.
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றப் பொதுச் செயலாளர் கல்வியாளர் அமலா ஸ்டேன்லி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரான்ஸ் வொரெயால் தமிழ்க் கலாச்சார மன்றத்தின் தலைவர் இலங்கை வேந்தன் வரவேற்புரை ஆற்றினார்.
கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களில் பெரிதும் மிளிர்வது! கவிதை நயமா! வாழ்வியல் அனுபவமா! என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தை கோயம்புத்தூர் கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் பேராசிரியர் முனைவர் க.முருகேசன் நடுவராக தலைமையேற்று நடத்தித்தந்தார்.
கவிதை நயமே! என்ற அணியில் தமிழ் எழுத்தாளர் மன்றப் புரவலர் கவிஞர் அரியக்குடி மெய்யப்பன் மன்றத்தின் முன்னணிப் பேச்சாளர் கவிஞர் கா.பாபு சசிதரன், நிர்வாகக்குழுத் துணைப் பொருளாளர் வெங்கட் சுப்ரமண்யன் ஆகிய மூவர் உரையாற்றினர்.
வாழ்வியல் அனுபவமே! என்ற அணியில் மன்றத்தின் முன்னணிப் பேச்சாளர் உரைத்தென்றல் கி.வேங்கடராமன், பட்டிமன்றப் பேச்சாளர் கவிச்செம்மல் ஆரோக்கியசெல்வி கருத்தரங்கப் பேச்சாளர், கவிஞர் பிரவினா சேகர் ஆகிய மூவரும் உரையாற்றினார்கள்.
சென்னை - பம்மல் கண்ணதாசன் தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவர் கவிஞர் காவிரி மைந்தன் மற்றும் தமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் மகேஷ் நாட்டாண்மை, சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியை மன்றத்தின் கருத்தரங்கப் பேச்சாளர் நற்றமிழ் நாவலர் செல்வி ராஜ் தொகுத்து வழங்கினார். வெரெயால் தமிழ்க் கலாச்சார மன்றத்தின் இணைச்செயலாளர் கௌதம் துரைராஜ் நன்றியுரை ஆற்றினார்.
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்ற ஆலோகர்கள் கருவூர் பழனிச்சாமி, பாவலர் முகவை திருநாதன், வொரெயால் தமிழ் கலாச்சார மன்றத்தைச் சார்ந்த பாண்டுரெங்கன் மற்றும் பல தமிழன்பர்களும் மும்பை தமிழ்ச்சங்க மேனாள் தலைவர் ராமதாஸ், செயலாளர் சுந்தரி வெங்கட் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தமிழன்பர்களும் நிகழ்வில் கலந்து கவியரசரின் பெருமைகளை நினைவு கூர்ந்தார்கள்.
நிகழ்விற்கான ஒருங்கிணைப்பு வேலைகளை மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்ற நிர்வாகக் குழுச் செயலாளர் வே.சதானந்தன் மற்றும் துணைச் செயலாளர் தேவராசன் புலமாடன் ஆகியோர் செய்தனர். இணையம் வழியாக நடைபெற்ற நிகழ்வினை தமெரிக்கத் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பியது. வொரெயால் தமிழ்க்கலாச்சார மன்ற முகநூல் பக்கத்திலும் ஒலிபரப்பப்பட்டது.