24 Jul 2021 11:14 amFeatured
வருகிற 25-07-2021. ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் இணையம் வழியாக நடைபெறவிருக்கின்ற விழாவினை மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றமும் தமெரிக்கா தொலைக்காட்சியும் தேனி மதுமதி மூலிகை ஆராய்ச்சி மைய அறக்கட்டளையும் யூ.கே.முரளி இசைக்குழுவும் இணைந்து நடத்தவுள்ளன.
தமிழ் எழுத்தாளர் மன்றப் புரவலரும் சமூக, இலக்கிய ஆர்வலருமான அலிசேக் மீரான் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் நிர்வாகக்குழுத் துணைச் செயலாளர் வெங்கட் சுப்ரமண்யன் வரவேற்புரையும் மன்றப் பொதுச்செயலாளர் கல்வியாளர் அமலா ஸ்டேன்லி தொடக்கவுரையும் ஆற்றுகிறார்கள்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் துணைத் தலைவரும் தேனி மதுமதி மூலிகை ஆராய்ச்சி மைய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளருமான நடிகர் இயக்குநர் முனைவர் யார் கண்ணன் சிறப்புரை ஆற்றுவதோடு இடையிடையே பார்வையாளர்களின் கலை இலக்கியம் சார்ந்த கேள்விகளுக்கு விளக்கங்களும் அளிக்கவுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள டெலவர் தமிழ்ச்சங்கத் தலைவர் தயானந்த் குசேலன் நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கவுள்ளார்.
யூ கே முரளி இசைநிகழ்ச்சி
முப்பத்தைந்து ஆண்டு கால இசை அனுபவமுள்ள திரையிசைப் பாடகர் யூ.கே.முரளியின் இசைநிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. அவரோடு தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் கலைப்பிரிவுப் பாடகி ராணி சித்ராவும் இணைந்து பாடவுள்ளார்
மன்றத்தின் முன்னணிப் பேச்சாளர் புவனா வெங்கட் நிகழ்வினை நெறியாள்கை செய்யவுள்ளார். இறுதியில் மன்றத் துணைத் தலைவர் கவிமாமணி இரஜகை நிலவன் நன்றியுரை ஆற்றவுள்ளார்.
நிகழ்வினை மன்றத்தின் நிர்வாகக்குழுச் செயலாளர் வே.சதானந்தன் மற்றும் துணைச் செயலாளர் தேவராசன் புலமாடன் ஆகியோர் ஒருங்கிணைக்கவுள்ளார்கள்.
கலையும் இலக்கியமும் இணைந்து பேசப்படவுள்ள இந்த நிகழ்வினையும் அதைத்தொடர்ந்து நடைபெறவுள்ள இன்னிசை நிகழ்ச்சியையும் உலகெங்கும் வாழும் தமிழன்பர்களும் கலந்து கண்டு மகிழும்படி நான்கு அமைப்புகளின் நிர்வாகிகளும் கேட்டுக்கொள்கிறார்கள்.