03 Jan 2020 5:48 pmFeatured
தமிழ் எழுத்தாளர் மன்றக் கலந்தாய்வுக் கூட்டம்
முலுண்டில் நடைபெறுகிறது
வருகின்ற 05.01.2020 ஞாயிறு மாலை 6 மணியளவில் தமிழ் எழுத்தாளர் மன்றக் கலந்தாய்வுக் கூட்டம் முலுண்ட் வித்யா மந்திர் பள்ளியில் வைத்து மன்றத்தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.
அதுசமயம் மன்றத்தின் பழைய உறுப்பினர்களின் படிவங்களைப் புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பனர்கள் சேர்த்தல் என நிர்வாக சீரமைப்புப் பணிகளையும் இந்த ஆண்டில் நடத்தப்படவிருக்கின்ற இலக்கிய நிகழ்வுகள், சொற்பொழிவுகள்; புதிய எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி சிறுகதை, கட்டுரை மற்றும் கவிதைத் தொகுப்புகள் வெளியிடுதல்; மும்பையைத் தாண்டி புனே நாசிக் போன்ற மராத்திய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கிய உணர்வினை ஊக்கப்படுத்தும் விதமாக அந்தந்தப் பகுதிகளில் இலக்கிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல் மற்றும் வரவிருக்கின்ற நாட்களில் வறுமைக்கோட்டுக்கு கீழே வசிக்கின்ற தமிழ் மாணவ மாணவிகளுக்கு நம்மால் முடிந்த சிறு நிதியுதவி அளித்து கல்வி கற்பிக்க வைத்தல் போன்ற நலத்திட்டங்கள் சார்ந்த பல பொருண்மைகளைப் பற்றிய கலந்தாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே, மன்றத்தின் அனைத்து அங்கத்தினர்களும் கலந்து கொண்டு தத்தம் கருத்துக்களை வழங்குமாறு நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு சார்பாக மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் கேட்டுக்கொள்கின்றார்.
தென்னரசு ஆலோசனைக் கூட்டம்
இதற்கு முன்னர் தென்னரசு ஆலோசனைக் கூட்டம் முலுண்ட் வித்யாமந்திர் பள்ளியில் வைத்து நடைபெறவிருக்கிறது.
தென்னரசு ஆசிரியர் குழுவினர், ஆலோசகர்கள், புரவலர்கள் மற்றும் தென்னரசுவின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர்கள், மற்றும் வாசகர்கள் அவசியம் கலந்துகொண்டு நல் ஆலோசனைகளையும், நிறை-குறைகளையும் எடுத்து இயம்ப தென்னரசு ஆசிரியர் வே.சதானந்தன் கேட்டுக்கொள்கின்றார்.