30 Mar 2020 12:13 pmFeatured
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் மற்றும் தென்னரசு மின்னிதழ் இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான கட்டுரை, சிறுகதை, கவிதை போட்டிகள் மின்னஞ்சல் வாயிலாக நடத்தப்பட இருக்கின்றன.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய நோயான கரோனா தொற்று நோயின் தாக்கத்தின் காரணமாக அனைத்து நாடுகளும் எந்தவித வேறுபாடுகளுமின்றி பாதிக்கப் பட்டிருப்பதைப் போல மகாராட்டிரமும் விதிவிலக்கல்ல என்று சொல்லத்தக்க வகையில் அனைத்துப் பள்ளி கல்லூரி மற்றும் தொழில் நிறுவனங்களின் மூடலின் காரணமாக அச்சத்தில் தவித்துக் கொண்டிருக்கும் நமது தமிழ்ப் பிள்ளைகளின் பயத்தைப் போக்கவும் கிடைத்துள்ள நேரத்தை சரியான வழியில் பயன்படுத்தி அவர்களது சிந்தனைகளுக்கு ஊக்கம் கொடுக்கும் நோக்கத்திலும் கட்டுரை சிறுகதை, கவிதைப் போட்டிகளை மின்னஞ்சல் வாயிலாக வீட்டில் இருந்து கொண்டே எழுதுவதற்கான வாய்ப்பினை பொதுநலன் கருதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வப்போது பல இலக்கிய நிகழ்வுகள், சொற்பொழிவுகள், நூல் வெளியீடுகள், ஆய்வுக் கூட்டங்கள், பட்டிமன்றங்கள், கருத்தரங்கள், கவியரங்கள் என பலவிதமான இலக்கிய நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி வருகின்ற தமிழ் எழுத்தாளர் மன்றமானது, கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக வீட்டில் ஓய்வில் இருக்கும் ஐந்தாவது முதல் பனிரெண்டாம் வகுப்பும் அதற்கு மேற்பட்டும் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பான இலக்கிய உணர்வினை ஊட்டுகின்ற முயற்சியாக தென்னரசு மின்னிதழுடன் இணைந்து மேற்சொன்ன போட்டிகளை நடத்த உள்ளது.
கட்டுரைக்கான தலைப்புகள்
1. அதிகாலை எழுதல்
(5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை)
(இரண்டு பக்கங்களுக்கு மிகாமல்)
2. உடற்பயிற்சி
(9ம் வகுப்பு முதல் 11ம்வகுப்பு வரை)
(இரண்டு பக்கங்களுக்கு மிகாமல்)
3. இயற்கையைப் பேணுவோம்
(12ம் வகுப்பு முதல் கல்லூரி மாணாக்கர்கள்)
(இரண்டு பக்கங்களுக்கு மிகாமல்)
சிறுகதைக்கான தலைப்பு
1. அன்பே ஆயுதம்
(5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை)
(இரண்டு பக்கங்களுக்கு மிகாமல்)
2. வரும் முன் விலகு
(9ம் வகுப்பு முதல் 11ம்வகுப்பு வரை)
(இரண்டு பக்கங்களுக்கு மிகாமல்)
3. கொரோனா - வீட்டுச்சிறையில் உதித்த சிந்தனைகள்
(12ம் வகுப்பு முதல் கல்லூரி மாணாக்கர்கள்)
(இரண்டு பக்கங்களுக்கு மிகாமல்)
கவிதைக்கான தலைப்பு
1. மழை
(5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை)
(24 வரிகளுக்கு மிகாமல்)
2. அப்பா
(9ம் வகுப்பு முதல் 11ம்வகுப்பு வரை)
(24 வரிகளுக்கு மிகாமல்)
3. மலர்
(12ம் வகுப்பு முதல் கல்லூரி மாணாக்கர்கள்)
(24 வரிகளுக்கு மிகாமல்)
நடுவர்கள்
மேற்சொன்னபடி கட்டுரைப் போட்டிகளை தமிழ் எழுத்தாளர் மன்ற செயலாளர் மற்றும் துணைச் செயலாளர்களும் நல்லாசிரியர்களுமான அமலா ஸ்டேன்லி மற்றும் பொற்செல்வி கருணாநிதி ஆகியோரும்
சிறுகதைப் போட்டிகளை மன்றத்தின் துணைத் தலைவர் கவிஞர் இரஜகை நிலவன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வெங்கட் சுப்ரமண்யன் ஆகியோரும்,
கவிதைப் போட்டிகளை மன்றப் பொதுக் குழு உறுப்பினர்களான கவிஞர் இறை.சா. இராசேந்திரன் மற்றும் கவிஞர் பாபு சசிதரன் ஆகியோரும் நடுவர்களாக இருந்து நடத்திக் கொடுக்கவுள்ளார்கள்.
போட்டிக்கான குறிப்புகள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய
மின்னஞ்சல் முகவரி: mahatwf@gmail.com
கடைசித் தேதி : 12.04.2020
படைப்புகள் : தமிழ் / ஆங்கிலம் (ஆங்கில வழி தமிழ் மாணாக்கர் -களுக்காக)
போட்டியாளர் பெயர்:
பெற்றோர் பெயர்:
அலைபேசி/தொலைபேசி எண்:
பள்ளி கல்லூரி பெயர்:
தாங்கள் படித்துக்கொண்டிருக்கும் வகுப்பு:
சொந்த ஊர்:
வசிப்பிட முகவரி:
கண்டிப்பாக அனுப்பவும்
அனுப்பவேண்டிய முறை :
முடிந்தால் Ms-Word ல் தட்டச்சு செய்து இணைத்தோ அல்லது நன்றாக தெளிவாக எழுதியோ ஸ்கேன் செய்து PDF / JPG வடிவிலோ mahatwf@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இணைத்து (Attachment) அனுப்பவும்
தேர்ந்தெடுக்கப்படவுள்ள படைப்புகளிலிருந்து முதல் இரண்டாம் மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் சிறந்த படைப்பாளர்களுக்கு அமைப்புகளின் சார்பாக வெற்றிச் சான்றிதழ்களும் தக்க ஊக்கத் தொகையும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பங்குபெறும் அனைத்து மாணாக்கர்களின் படைப்புகள் தொகுப்பு வாரியாக புத்தக வடிவில் பின்னர் வெளியிடப்பட்டு மாணாக்கர்களுக்கு வழங்கப்படும்
அனைத்து படைப்புகளும் உள்நாடு மற்றும் உலகம் முழுவதும் அறியும் வண்ணம் தமிழ் அறம் மற்றும் தென்னரசு இணைய இதழ்களில் பிரசுரிக்கப்படும்
மன்றத்தின் அனைத்து நிர்வாகிகள் தமிழ்அறம் ஆசிரியர் இராமர், தென்னரசு இதழாசிரியர் வே.சதானந்தன் மற்றும் ஏனைய நிர்வாகிகளின் சார்பில் போட்டிகளை ஊக்கப்படுத்தி தகுந்த மாணாக்கர்களை பங்குபெறச் செய்யும்படி தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் கேட்டுக்கொண்டுள்ளார்
தொடர்புக்கான அலைபேசி மற்றும் வாட்சாப் எண்கள்
முனைவர் வதிலை பிரதாபன் : 7875848340
(தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர்)
வே.சதானந்தன் : 9320751029
(ஆசிரியர் தென்னரசு மின்னிதழ்)
பெயர் போனவர்கள்!,,
—————————
காக்கையின் கரைச்ச லோடு,
காபியின் வாசனையையும் காற்றில் கலந்துணர்ந்தேன்,
“செல்லாத்தா செல்ல மாரியாத்தா”….
எல்,ஆர்.ஈஸ்வரியின் குரல்,
எழ வைத்து விடும் போல,
ஓய்வுக்காக காத்திருந்த கனரக வாகனங்களின் காற்றை பிளந்து,புகையை பரப்பி
கடக்கும் சத்தமும்,
காவலுக்கு காத்து கிடக்கும் நாயின் சத்தமும்,பால்காரர்களின் மணியோசையும்,பேப்பர் போடுபவர்களின் “சார் பேப்பர்”சத்தமும்,
நடைபயிற்சியாளர்களின் காலடி சத்தமும்,
சற்றே என்னை நெளிய வைத்தது,
கதிரவனின் காலதாமத்தினால்,
குளிர் வேறு,
கம்பளியின் கதகதப்பு போதவில்லை,
“எங்கம்மாவுக்கு காபி குடுத்தியா?”
மகனின் அதிகார குரல்,
ஆறுதலாய் வந்தது,
“நல்லா தூங்குறாங்க,அதான் எழுப்பலே,
இதோ இப்ப சூடு பண்ணி கொடுத்துடுறேங்க” காபியும் காயத்திரியோடு சேர்ந்து சூடானது
“அத்தே,அத்தே எந்திரிங்கா காபி ஆறிடும்”
கரிசனையோடு மருமகள்,
“அங்க வெச்சிட்டுப் போ காயத்திரி
நான் குடிச்சிக்கிறேன்”-தனத்தின் பதிலுக்கு காத்திருந்த காயத்திரி கிளம்பினாள்,
“அம்மா ,அம்மா எந்திரிம்மா இன்னும் சின்ன பிள்ளையாட்டம் எந்திரிக்க அடம் பிடிச்சிக்கிட்டு,அப்பா போனதுக்கு அப்புறம் உனக்கு குளிருட்டுப்போச்சி
எந்திரி,எந்திரிச்சி காபி குடிச்சிட்டு காயத்திரிக்கு உதவி பண்ணு,எனக்கு ஆபிஸுக்கு லேட்டாயிரும்”அன்பு கலந்த மிரட்டலை காட்டினான் மகன் ஆனந்த்,
“பாட்டி பாட்டி கொஞ்சம் தள்ளி படுங்க
இங்கதான் எங்க ஸ்கூல் பஸ் நிக்கும்”பேரனின் குரல் போலிருக்க
“இருடா இவன் வேறே நொய் நொய்யுன்னு எந்திரிச்சி தொலையுறேன்”என சலிப்புடன் எழ எத்தனித்தாள் தனம்,
அடுத்த நொடி
“இந்தாம்மா எந்திரி, தினமும் இங்கியே படுத்துகிட்டு,எருமை மாடு மாதிரி,
நாங்க கடை போட வேண்டாமா?
இங்க தூங்கதே எத்தனை தடவை சொல்றது
“,சொன்னா கேட்க மாட்டியா?உனக்கு ஒரு தடவை சொன்னா ஒரைக்காதா?எந்திரி சனியனே”கோபக்குரல் காதில் விழ
இது யார் அதிகார குரல்? வெடுக்கென்றெழுந்து
எழுந்து கண் தேய்த்தேன், கண்டதெல்லாம் கனவோ?
கனவுகள் கலைத்து, மருமகளின் வற்புறுத்தலால் துரத்தி விட்ட மகனின் நினைவுகளோடு,ஒடுங்கிய தட்டுடன்
அழுக்கு மூட்டையை அள்ளிக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கு,
அம்மன் கோவிலை நோக்கி தடுமாறி கைத்தடியுடன் நடக்கலானேன்!,தினமும் என்னருகில் உறங்கும்
நன்றியுள்ள
தெருநாயோடு,…..
இரட்டைக்கரடு மு.இளங்கோவன்
அந்தியூர்