30 Aug 2019 1:19 pmFeatured
தங்க. தமிழ்செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. திமுக கொள்கை பரப்பு செயலாளராக தங்க.தமிழ்ச்செல்வனை நியமித்து பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திருச்சி சிவா, ஆ,ராசா உடன் இணைந்து தங்க.தமிழ்ச்செல்வனும் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுவார்.
வி.பி.கலைராஜன் இலக்கிய அணி இணை செயலாளராகவும், திமுக நெசவாளர் அணி செயலாளராக கே.எம்.நாகராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் சற்று முன்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் திமுக கொள்கைப்பரப்பு செயலாளர்களாக பணியாற்றிவரும் ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோருடன் தங்க.தமிழ்ச்செல்வனும் கொள்கைப்பரப்பு செயலாளராக பணியாற்றுவார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.