19 Sep 2022 10:41 pmFeatured
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 77 வது ஆண்டு நினைவு பொது கூட்டம் தாராவி கிராஸ் ரோட்டில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பள்ளி வளாகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது
இக் கூட்டத்திற்கு அமைப்பு தலைவர் பா.மதியழகன் தலைமை வகித்தார்
துணை தலைவர் பார்த்தசாரதி வரவேற்புரை ஆற்றினார்
துணை செயலாளர் பாரதிதாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்
பாரதி ஜனதா கட்சி தலைமை நிர்வாகி உமாகாந்தன், மும்பை தென் இந்திய ஆதி திராவிடர் மகாஜன சங்கத்தின் துணை செயலாளர் கிஷோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சிறப்பு அழைப்பார்களாக தென்னிந்திய ஆதி திராவிடர் மகாஜன சங்கத்தின் முன்னாள் தலைவர்
K V அசோக்குமார், மும்பை மாநில திராவிட முன்னேற்ற கழகத்தின் அவைத்தலைவர் ம. உத்தமன், மும்பை தமிழ் டிரைவர் சங்க தலைவர் தம்பிராஜ், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பேரவை தலைவர் மாசிலாமணி தலைவர், செயலாளர் ராஜேஷ், மும்பை தமிழர் நட்புறவுப் பேரவையின் த செ குமார் , மும்பை உறவுகள் ஆயிரம் அமைப்பு தலைவர் சேகர், தமிழ் டிரைவர் சங்கச் செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
முத்துக்குமார் , மகேஷ், குமார், பிரகாஷ், சேகர், முத்துவேல், இசை செல்வன், சுந்தர்ராஜன் மற்றும் அமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 77 நினைவேந்தல் நிகழ்சியில் கலந்து கொண்டு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி வீரவணக்கம் மரியாதை செலுத்தினார்கள்.
மூன்று தீர்மானங்கள்
சென்னை மண்ணின் மைந்தன். சென்னை மாகாண முதல் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பெயரை
1. சென்னை தலைமை நிலையம் ரயில்வே நிலையத்திற்கு சூட்டுவது தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டுகிறோம்
2.பொது வாழ்க்கை அரசியலுக்கு உதாரணமாக விளங்கும் மறைந்த பொதுப்பணித்துறை அமைச்சர் கக்கன் அவர்களின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைப்பதற்கு தமிழக அரசு முயற்சி செய்யவேண்டும்
3.சமுதாய அமைப்புகள் பல்வேறு பெயர்களில் செயல்பட்டாலும் சமூக ரீதியான ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும்
அனைத்து உறுப்பினர்களும் இணைந்து ஓர் மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இறுதியாக சேதுராஜ் நன்றியுரை ஆற்றினார்