21 Nov 2019 10:58 pmFeatured
மும்பையிலிருந்து வெளிமாநிலத்திற்கு செல்லும் ரயில்களில் பொருட்களை எடுத்து செல்வதற்கான தனி பெட்டி இணைக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே, அதேபோல்
பொருட்களை ரயில்கள் முலம் மும்பையிலிருந்து வெளியூர் அனுப்பவும் மற்றும் வெளியூரிலிருந்து மும்பை வரும் பொருட்களை சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் ஒப்படைக்கவும் முகவர்கள் உள்ளனர்.
மேற்படி முகவர்கள் மும்பையிலிருந்து தலச்சேரி, கண்ணூர் மற்றும் கோழிக்கோடு போன்ற ஊர்களுக்கு அனுப்பும் விலையுயர்ந்த பொருட்கள் வண்டி எண் 16345(நேத்ராவதி) டவுண் ரயில் குறிப்பிட்ட ரயில் நிலையம் சென்றடையும் முன்பே பாதி வழியிலேயே திருடு போவது தொடர் கதையாக உள்ளது, இன்று வரை ரயில்வே நிர்வாகம் மேற்படி திருடு போவதை தடுக்கவும் முடியவில்லை.... மற்றும் திருடர்களை கண்டு பிடிக்கவும் இல்லை என பாதிக்கப்பட்ட முகவர்களாகிய சித்தி பார்வர்டிங் அன்ட் கிளியரிங் ஏஜன்சியின் உரிமையாளர் முருகன், நெவர் ஸ்டாப் கம்பெனியின் உரிமையாளர் ஜகரியா உஸேன், எஸ். டி. எஸ். கார்கோ சர்விஸ் உரிமையாளர் எஸ். நாயுடு, முகவர் சங்கர் லிங்கே மற்றும் பலர்... மத்திய ரயில்வே மண்டல ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினரும், மும்பை பாரதிய ஜனதா கட்சி தமிழ் பிரிவு மும்பை தலைவராகிய ராஜா உடையார் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து மேற்படி திருடு போகிறதை தடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து திருடு போவதால் நாங்கள் பல கஷ்டங்களை சந்திக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களாகிய நாங்கள் பல முறை ரயில்வே நிர்வாக அதிகாரிகளிடம் நேரிலும் மனுக்கள் முலமாகவும் ரயிலில் அனுப்பும் பொருட்கள் பாதி வழியில் திருடு போவதை தடுக்க வேண்டும் மற்றும் திருடர்களை கண்டுபிடிக்க வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்தும் இன்று வரை எந்த பலனும் இல்லை ஆதலால் நீங்கள் தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என ராஜா உடையாரிடம் முறையிட்டுள்ளனர்.
ஆதலால் பாதிக்கப்பட்ட முகவர்களை அழைத்து கொண்டு மும்பையில் உள்ள மத்திய ரயில்வே தலைமை அலுவலகத்தில் மத்திய ரயில்வே துணை பொது மேலாளர் திரு.தினேஷ் வசிஷ்ட், அவர்களை நேரில் சந்தித்து ரயில்களில் அனுப்பும் பொருட்கள் தொடர்ந்து திருடு போவதை தடுக்க வேண்டும் மற்றும் ரயில்களில் அனுப்பும் பொருட்களை பாதி வழியில் திருடும் கும்பலையும் கண்டு பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ராஜா உடையார் மற்றும் பாதிக்கப்பட்ட முகவர்கள் வைத்த கோரிக்கையை பொறுமையாக கேட்டவர்... உடனே அத்துல் குமார் பாட்டக் ஐ.ஜி,ஆர்.பி.எப் (I.G of RPF) அவர்களை போனில் தொடர்பு கொண்டு உடனே மேற்படி நடக்கும் திருட்டை தடுக்க வேண்டும் மற்றும் திருடர்களை பிடிக்க உடனே நடவடிக்கை வேண்டும் என கேட்டுக் கொண்டார்... இனிமேல் நீங்கள் அனுப்பும் பொருட்கள் திருடு போகாது அதற்கு வேண்டிய எல்லாம் பாதுகாப்பும். நாங்கள் கொடுக்கிறோம் என மத்திய ரயில்வே துணை பொது மேலாளர் திரு தினேஷ் வசிஷ்ட் அவர்கள் ராஜா உடையார் மற்றும் முகவர்கள் அனைவருக்கும் உறுதியளித்தார் என ராஜா உடையார் தெரிவித்துள்ளார்