20 Aug 2019 1:27 amFeatured
பேராசிரியர் சமீரா மீரான் பிறந்த நாள் ஆகஸ்ட் 20.
எம் நினைவில் என்றும் நிலைத்திருப்பார் சமீரா.
-அலிசேக் மீரான்
மும்பை புறநகர் திமுக துணை செயலாளர் ,மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற தலைவர் , மராத்திய மண்ணிலிருந்து ,பகுத்தறிவு , சமூக நீதி , இன, மொழி ,வளர்ச்சிக்காக வெளிவரும்,
தலைவர் கலைஞரால் பாராட்டப்பட்ட ''தென்னரசு'' திங்களிதழின் நிறுவனர், ஆசிரியர் ,
எழுத்தாளர், பேச்சாளர் ,கவிஞர் , கட்டுரையாளர் ,நாடக ஆசிரியர்,மொழி ஆராச்சியாளர்,சென்னை பல்கலை கழகத்தில் படித்து இரண்டு முது கலை பட்டம் பெற்றவர்.
என் பால்ய , இனிய நண்பர் கடந்த ஆண்டு December 8 அன்று மறைந்த பேராசிரியர் சமீரா மீரான் அவர்கள். இருந்திருந்தால் இன்று 65 வயதை நிறைவு செய்திருப்பார்.இனம்,மொழி,இயக்கம் சார்ந்த எண்ணம், செயலுடன் வாழ்ந்து மறைந்தவர்.எண்ணற்ற இளைஞர்களை பொது வாழ்வில் அறிமுக படுத்தி வார்தெடுத்தவர்.
மும்பையில் தமிழ் வழி கல்விக்கு வளர்ச்சிக்கு பாடுபட்டவர். எண்ணற்ற தமிழ் பள்ளிகள் மும்பையில் தொடங்க உதவியாக இருந்தவர்.
மும்பையில் உள்ள அத்தனை தமிழ் சங்கங்களின் நிகழ்ச்சிகளுக்கு ஓத்துளைப்பு வழங்கி நண்பர்களுடன் சென்று பங்கு பெறுபவர்.ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழில் வீட்டிலும், வெளியிலும் பேசுபவர்.
பேராசிரியர் சுப வீ, கவிஞர் அறிவுமதி, இன்குலாப், நக்கீரன் கோவி லெனின், உள்ளிட்ட எண்ணற்ற கவிஞர்கள், எழுத்தாளர்களை மும்பைக்கு அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தியவர்.
அவரை எண்ணாத நாளில்லை.
உடல் நலம் சீர்கெட்ட நிலையிலும் தலைவர் கலைஞர் இறுதி அஞ்சலி செலுத்த மும்பையிலிருந்து சென்னை வந்து மிகுந்த சிரமத்துடன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு தன் கண்ணீரை தலைவருக்கு காணிக்கை ஆக்கினார்.
ஒவ்வொரு பிறந்த நாளிலும் நண்பர்கள் அவர் இல்லம் சென்று வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அவரது வாழ்க்கை துணைவியார் இன்முகத்தோடு அனைவரையும் வரவேற்று உணவு வழங்குவார்.
இன்று வரை தினமும் ஏதாவது ஒன்றில் நண்பர்கள் நாங்கள் அவரை நினைத்து கொண்டே இருக்கிறோம்.
அவரைப்பற்றி சிலாகித்து பேசாத நாளில்லை.
என்றும் எம் நினைவில் நிலைத்திருப்பார் சமீரா.
வாழ்க அவர் புகழ்.