21 May 2023 11:36 pmFeatured
வாரம் ஒரு கவிஞர்
தன்குறிப்பு :
பெயர் : பெரணமல்லூர் சேகரன்
வயது : 63
பணி : உதவி இயக்குனர் (ஓய்வு)
கைபேசி எண் : 9442145256
மின்னஞ்சல் : sekernatesan@gmail.com
அஞ்சல் முகவரி
பெரணமல்லூர் சேகரன்
8ஏ வேளாளர் தெரு
பெரணமல்லூர் 604 503
திருவண்ணாமலை மாவட்டம்
இதுவரை வெளிவந்த நூல்கள்..22
சிறுகதை தொகுப்பு. 10
கவிதைத் தொகுப்பு. 6
கட்டுரைத் தொகுப்பு. 2
நாவல்கள். 2
வரலாற்று நூல். 1
சிறுவர் கவிதை நூல் 1
இதுவரை எழுதிய கவிதைகள்..5000
சிறுகதைகள்.250
கட்டுரைகள். . 1000
தொடர்புள்ள இலக்கிய அமைப்பு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
செம்புலப் பெயல்நீராய்
காதலன் காதலி
ஒருவருக்கொருவர்
கொலைகாரர்களாய்
அதிர்ச்சித் தகவல்களாய்
ஊடகச் செய்திகள்
செவியில் ஊற்றும்
காய்ச்சிய ஈயம்
கண்கள் எரியும்
வன்மக் காட்சிகள்
கூலிப்படை வைத்தும்
கொலையரங்கேற்றம்
காதல் கேள்விக்குறியில் முற்றும்
இனக்கவர்ச்சிக்கு
இரையாதலில்
இரையாகும் காதல்
உயிர்க்கொலையில் முடியும் மோதல்
வாட்ஸ்அப் ஃபேஸ்புக் இன்ஸ்டா
ட்விட்டர் என இயங்கும்
இளசுகள் மயங்கும்
ஆயிரம் பகிர்ந்தாலும்
உள்ளே பொதிந்து கிடக்கும் பொய்கள்
ஆடவனும் ஆரணங்கும்
நேரில் சந்தித்தலில்
மனந்திறந்து உரையாடலில்
ஒத்த கருத்துக்களின் சங்கமமாய்
ஓங்கி வளரும் காதல்
அதற்கெல்லாம் நேரமிலாது
எதற்கும் கேள்விகள் கேளாது
அவசர உலகில்
அள்ளித் தெளிக்கும்
காதல்(?)கோலங்கள்
கொலையில் முடியும்
காதலர்களின் வாழ்வு
வாழ வேண்டிய இணையர்க்கும்
ஈன்றோர்க்கும்
சமூகத்திற்கும்..ஏன்
காதலுக்கும் தாழ்வு
சாதி மறுப்புக் காதலில்
நீதியின்றி நிகழ்த்தும்
பெற்றோரின் வன்முறைகள்
கொலையில் முடியும்
காதலர்களின் கனவும் வாழ்வும்
மடைமாற்றும்
இப்போதைய
காதலர்களுக்கிடையிலான
விரும்பத்தகா கொலைகள்
அரும்பிலேயே கிள்ளி எறியட்டும்
அறிவுக் கண் திறக்கட்டும்
மலரினும் மெல்லியது காதல்
அலறி அடித்து ஓடும்படியான
நடப்பு நிகழ்வுகளில்
காதலின் பயணம்
விரக்தியின் தருணம்
ஆயினும் முற்றுப் பெறாது
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
தொடரும் காதல் வாழ்வு
செம்புலப் பெயல்நீராய்
அன்புடை நெஞ்சங்கள்
புரிதலின் உச்சியில்
காதலில் வாழும்
வன்முறை வீழும்
அரும்புலேயே கிள்ளி எறியட்டும் அறிவுக்கண் திறக்கட்டும்
ஆயினும் முற்றுப் பெறாது
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
தொடரும் காதல் வாழ்வு
என்ற பதிவுகள் மிக வும் அருமை. இது இலக்கியத்தில் காதல் புரட்சி.இதுகுறித்து பல்வேறு உலக இலக்கியவாதிகள் கூறியிருந்தாலும் தங்களின் சாரம் ( literary scholarly essence) மிகவும் ஆழமானது, ஈர்த்து.
K.GANESHAN
Mumbai