Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

எமையாளும் தலைவருக்கு எழிலார்ந்த தமிழ்வணக்கம்

06 Jun 2023 11:38 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures vathilai

பாவரசு வதிலை பிரதாபன்,
தலைவர் - மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்

  • தலைவர் - மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்
  • தலைவர் மற்றும் நிருவாக இயக்குநர் - Martin Airconditioners & Refrigerators Pvt Ltd
  • மேனாள் தலைமை இணை அமைச்சர் - ஔவைக்கோட்ட அறிஞர் பேரவை திருவையாறு
  • அறங்காவலர் - பாரதிகண்ணா பாவலர் பூஞ்சோலைக் குழுமம்
  • மதிப்புறு தலைவர் - மராத்திய மாநில மனித உரிமைப் பாதுகாப்புக் கழகம்
  • மதிப்புறு தலைவர் - மராத்திய மாநில சமூக நீதி அமைதி மற்றும் சட்ட வல்லுநர் பேரவை
  • இணைத் தலைவர் - மகாகவி பாரதி கலை இலக்கியப் பேரவை
  • புரவலர் - காஞ்சி கலைச்சங்கமம் இயல், இசை, நாடகம் நாட்டுப்புறக் கலைக்கூடம்- தமிழ்நாடு

இலக்கியப் படைப்புகளுக்காக விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள்

தமிழன்னை, தமிழ்த்தாய், செந்தமிழ் சுடரொளி, அறிவொளி, தமிழ்நெறிக் காவலர், எழுத்துச்சிற்பி, பாவரசு, முனைவர் பட்டம், எழுத்துச்செம்மல், தமிழ்ச்செம்மல், தமிழ்த்தென்றல், திருக்குறள் மாமணி, வாழ்நாள் சாதனையாளர் விருது, போன்ற எழுபதுக்கும் மேற்பட்ட விருதுகளும் நானூறுக்கு மேற்பட்ட பாராட்டுச் சான்றிதழ்களும் பெற்றவர்

படைப்புகள்

  • நெஞ்சு பொறுக்குதில்லையே!
  • நெஞ்சம் மறப்பதில்லை
  • நெஞ்சிருக்கும் வரை
  • நெஞ்சில் குத்திய நெருஞ்சில்கள்
  • நெஞ்சில் நின்றவர்கள்
  • மலேசிய சிங்கப்பூர் பயணக் கட்டுரை
  • மறக்க முடியுமா!
  • சிந்திய இரத்தம்

பதிப்பிற்காகக் காத்திருப்பது
"கலைஞர் அந்தாதி" உள்ளிட்ட ஆறு கவிதைத் தொகுப்புகள்

இருநூறுக்கும் மேற்பட்ட அணிந்துரைகள், வாழ்த்துரைகள், மதிப்புரைகள்

எமையாளும் தலைவருக்கு
எழிலார்ந்த தமிழ்வணக்கம்

தென்னகத்துக் கதிரவனாய் திசையெங்கும் வளமுடைத்து

தெள்ளுதமிழ்ப் பாட்டெழுதி தெவிட்டாத முழக்கமிட்டு

திராவிடத்துக் கதிரொளியாய் தனையீந்து தமிழாய்ந்து

உள்ளத்து உணர்விற்கு உணவாகும் உரமுடைத்து

இல்லத்துச் சொந்தமென இதமான மகிழ்வுடைத்து

மொழியோடு இனங்காக்க முழக்கமிட்ட முன்னேராம்

தந்தைப் பெரியாரும் தகைமைசார் அண்ணாவும்

எடுத்துரைத்த சிந்தைதனை ஏந்தித்தான் காத்திட்டு

அரசியலும் இலக்கியமும் ஆன்றோர் அவையாவும்

அள்ளியள்ளி வாழ்த்திட்டு அரவணைத்துக் காத்திட்ட

அன்புசார் கலைஞரவர் ஆற்றலமை தலைவரவர்

நூற்றாண்டு உலகெங்கும் நினைவாடும் காலமதில்

கவிமலர்கள் பூத்திட்டு கருத்தரங்கு மகிழ்ந்திடவே

திரைத்துறையும் பொதுத்துறையும் தவிர்க்கத்தான் இயலாத

தங்கமகன் கலைஞருக்கு தரணியெங்கும் புகழ்மாலை

உலகத்துத் தமிழர்க்கு உணர்வூட்டும் தலைவருக்கு

இதயங்கள் மகிழ்வுடைத்து இனமொழியால் களிப்புடைத்து

எழுதிட்ட படைப்புகளும் எழுச்சிமிகு உரைவீச்சும்

காலங்கள் கடந்தேனும் காக்கின்ற அரணாகும்

தாயகத்துத் தமிழருக்குத் தாயாகும் செறிவாகும்

சொற்சுவையும் பொருட்சுவையும் செறிவார்ந்த சிந்தனையும்

குறைவின்றி வழங்கிட்ட கருத்தாளர் கலைஞருக்கு

உலகத்தார் உவகையுடன் உளமாற கொண்டாடி

தலைவருக்கு அணிசெய்தல் தமிழுக்கே அணியாகும்

நாவினிக்கப் புகழ்பாடி நறுமணத்தில் கருத்துரைத்த

நாட்களெல்லாம் நினைவூட்டும் நற்றமிழில் புகழ்பாடும்

தேன்தமிழே! தென்னகமே!! தெவிட்டாத சுடரொளியே!

நீமறைந்த செய்தியினை நீங்காமல் பொய்ப்பிக்க

படைத்திட்ட படைப்புகளே பார்போற்றும் சான்றாகும்

விதைத்திட்ட சிந்தனையே விளைச்சலென வழிவகுக்கும்

எண்ணத்து விளக்காகி எழுச்சிக்கு உரமாகி

எமையாளும் தலைவருக்கு எழிலார்ந்த தமிழ்வணக்கம்

You already voted!
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Sudhakaran
Sudhakaran
1 year ago

Great personality vadhilai. Long live.

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096530
Users Today : 15
Total Users : 96530
Views Today : 19
Total views : 416661
Who's Online : 0
Your IP Address : 3.144.8.68

Archives (முந்தைய செய்திகள்)