Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

திரும்பி பார்த்ததில் – ஜெயா மணி

15 Feb 2022 2:42 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures jeya

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-47
படைப்பாளர் - ஜெயா மணி, ஐதராபாத்-தெலங்கானா

அந்த ஆத்மா முழித்து முழித்து பார்த்துக்கொண்டிருந்தது .கண்ணாடிப் பேழைக்குள் இருந்த தன் உடலை. அருகில் மனைவி எதுவும் புரியாமல் 80 வயது ஆயிற்று. எதுவும் தெரியாது அழுகாதே என்று சொன்னது அவளுக்கு கேட்கவில்லை. கண்ணீரைத் துடைத்து விட நினைத்தாலும் தொடமுடியவில்லை.

யாரோ கேட்கிறார்கள் எப்பொழுது பிணத்தை எடுப்பீர்கள் என்று. அதுவரை தாத்தா அய்யரே சாமி சார் என்றெல்லாம் அழைக்கப்பட்டது , இறந்தவுடன் பிணம் அது என்றாகிவிட்டது. பெண் மாப்பிள்ளை பேத்தி மறைந்த மகனின் மனைவி பேரன்கள் வர வேண்டும் என்கிறார்கள். இந்த ஆத்மா துடிக்கிறது இறந்து போயாச்சு யார் வந்து என்ன ஆகப்போகுது. .பாவம் அவர்கள் கஷ்டப்பட்டு வரவேண்டுமே. தொண்ணூத்தி ஒரு வயசு ஆச்சு இருந்தும் யாருக்கும் பயனில்லை இறந்தும் தொந்தரவு தருகிறேன் என்று எண்ணிக் கொள்கிறது அப்படியே அதுவரை வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறது

பிறந்த ஊர் கோவில்கள் நிறைந்த ஊர். உடன்பிறந்தோர் நால்வர். 4 வயதிலேயே தந்தை மரணம் ஏதும் புரியாத வயது சில மாதங்கள் சுற்றத்தார் உதவினர் பின்னர் படிப்படியாக குறைந்து போயிற்று.

ஐந்து வயதில் பக்கத்திலிருந்த ஒரு வீட்டிற்கு தினமும் காலை ஒரு தொட்டி நிறைய தண்ணீர் நிரப்ப வேண்டும். இரண்டு ரூபாய் தருவார்கள். பள்ளிக்கு சென்று வந்த பின் மதியம் ஒரு மாமாவிற்கு மதிய காப்பியும் சிற்றுண்டியும் குடுத்து விட்டு வந்தால் 1 ரூபாய் கிடைக்கும். இன்னும் சில சின்ன சின்ன வருமானம்.

இப்படியே சில ஆண்டுகள் கழிந்தன .அதற்குள் தங்கையின் மரணம், sஅண்ணன் அவரது சித்தப்பா வீட்டிற்கு படிக்க சென்றுவிட்டார். 9 வயதிலிருந்து மாலை மளிகை கடையில் பொட்டலம் கட்டும் வேலை .பள்ளி கட்டணம் உடன் பயிலும் நண்பன் கட்டி விடுவான் பதிலுக்கு வீட்டு பாடத்தை எழுதி தரவேண்டும். பாடத்தைக் கற்றுத் தர வேண்டும்.ஒரு அக்காவின் திருமணம் எப்படியோ சுற்றத்தார் சேர்ந்து செய்து வைத்துவிட்டார்கள். அவருக்கு பாம்பே வாசம் .பதினோரு வயதில் ராணுவ வண்டியின் கீழ் சாலையை கடக்கும் போது குறுக்கே விழுந்ததில் காலில் பலமான அடி. ஒருவழியாக காலை சேர்த்து வைத்து தைத்து விட்டார்கள். அதிலும் ஒரு சின்ன கோளாறு கால் கட்டைவிரல் மட்டும் மேல்நோக்கியவாறு மற்ற நான்கு விரல்களும் கீழே படுத்த வாக்கில் இருக்கும். அனைவரும் அணிவது போல காலணி அணிய முடியாது.சிறப்பாக தயார் செய்ய வேண்டும் அதற்கு வழி இல்லாததால் பலகாலம் செருப்பில்லாமல் நடை.  ஓராண்டு ஆயிற்று எழுந்து நடக்க.

மீண்டு வந்து மீண்டும் வேலைகளைத் தொடங்கி இரண்டாவது சகோதரியை மணம் முடித்துக் கொடுத்தது. இருக்கும் இடம் சொந்தம் ஆனால் பணப்பற்றாக்குறை. அங்கிருந்து தனது தாயாரின் சகோதரி சித்தி அவரது ஊருக்கு அழைத்துக்கொண்டார் .இப்பொழுது அந்த ஊரில் நினைத்துப் பார்க்கிறது வயது 16 17 இருக்கும் அங்கிருந்த ஒர்க்ஷாப்பில் வேலை கற்றுக்கொண்டது.

காலம் ஓடியது கைக்கும் வாய்க்கும் சரியாக இருந்தது.வருடங்கள் போனது இரண்டு மூன்று ஒர்க்ஷாப்பில் வேலை செய்தது. முதலாளியிடம் சிறு தகராறு வந்து கோவையில் உள்ள பெரிய கம்பெனியில் வேலைக்கு சேருவேன் என்று சொல்லி வெளியே வரவும் யாரோ சொல்லி வைத்தது போல் அங்கு வந்த கஸ்டமர் அழைத்துச் சென்று அந்த கம்பெனியில் அவர் சார்பில் சேர்த்துவிட்டார். அதன்பின்னர் வாழ்க்கை சற்று இலகுவாக ஏறுமுகமாக இருந்தது. பால் சோறு இல்லை என்றாலும் பட்டினி இல்லை

இன்று இந்த உடல் கிடக்கும் இதே இடத்தில்தான் பெண் பார்க்க வந்துவிட்டு, இரவில் நேரம் கழித்து வந்ததால் விடிந்து பார்க்கலாம் என்று அன்றும் கண்மூடி உறங்கியது.

காலையில் எழும் பொழுது வாசலில் பெண் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். தலையை சரியாக கோதிக்கொண்டு நெற்றியில் பொட்டுடன் கைகளில் கண்ணாடி வளையலும் சற்று மெலிந்த உடலும். ஆனால் பார்த்தவுடன் பிடித்து சம்மதம் சொல்லிட. அறுபத்தி இரண்டு வருடம் இணைந்து ஒருவருக்கொருவர் அன்பாக ஆதரவாக வாழ்க்கை ஓடியது. இருவருக்குமிடையில் 11 வயது இடைவெளி. குழந்தையைப் போல் பார்த்துக்கொண்டது. அவளுக்கு வீட்டிற்குள் அனைத்தும் செய்ய தெரியும். வெளியுலகம் தெரியாது. எங்கும் தனித்து செல்ல இயலாது. பயம்.

முத்தான மூன்று குழந்தைகள் இரண்டு ஆண் ஒரு பெண் ஆண் பிறந்த பொழுதை விட பெண் பிறந்த பொழுது மிகுந்த மகிழ்ச்சி.

பணியிடத்தில் சேவை மனப்பான்மை உள்ளவர்களை ரெட் கிராஸ் செஞ்சிலுவை சங்கத்தில் அவசர நேரத்தில் உதவிக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மிகுந்த மகிழ்ச்சி. நம்மால் பலருக்கு உதவியாக இருக்க முடிகிறது என்பதில்.

அப்படி ஒரு முறை ஒரு கோவிலின் விழாக்காலத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த சென்ற இடத்தில் ,சேவை மனப்பான்மை கொண்ட கண் மருத்துவமனை நிறுவனர்கள் அறிமுகமானார்கள். அதன்பின்னர் அந்த மருத்துவமனைக்கு விடுமுறை நாட்களில் இலவசமாக முடிந்த பணியை செய்தது. பணியிலிருந்து ஓய்வு பெற்று அந்த கண் மருத்துவமனையிலேயே வாகனங்களுக்கு பொறுப்பாளராக பணியில் சேர்ந்து. அங்கும் 20 ஆண்டுகள் பணி புரிந்தது.

அந்தக் காலகட்டத்திற்குள் மகளின் திருமணம். மகன்களின் திருமணம். பேரன் பேத்தி பார்த்தது. வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள். எத்தனையோ மனதிற்கு வருத்தப் படும்படியான நிகழ்வுகள், மகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடந்தது. யாருக்கும் மனதால் கூட கெடுதல் நினைக்காத மனம். 78 வயதில் மகனை இழந்து புத்திர சோகத்தில் ஆழ்ந்தது. அதையும் தாண்டி இன்னும் தன்னை மாற்றிக்கொண்டு, யார் மனத்தையும் நோகடிக்காமல் வாழ்க்கையை நகர்த்தியது. எண்பது வயதில் பணியிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு மனைவியின் சொந்த ஊருக்கு மீண்டும் இடமாற்றம்.

மகளுக்காக அவளின் உடல் நிலைக்காக அவளிடம் தங்கி காடாறு மாதம் நாடாறு மாதம் ஆக இங்குமங்கும் ஓட்டம். இந்தக் கொரோணா என்னும் கிருமி வந்தது. அதன்பின் எங்கும் செல்ல இயலவில்லை. தன் வீட்டிலேயே கிராமத்தில் முடக்கிப் போட்டது. நல்லவேளை கொரோணா அந்த ஊருக்குள் வரவில்லை. ஆத்மா இத்தனையும் திருப்பிப் பார்த்து வாழ்வில் என்ன சாதித்து இருக்கிறோம். சொந்த வீடு இல்லை. சொத்து சுகம் சேர்க்கவில்லை. சம்பாதித்த மகனுமில்லை. என்று எண்ணிக் கொண்டிருந்தது. ஆனால் நிறைய மனிதர்களை சேர்த்து வைத்ததை பெருமையாக நினைத்துக் கொண்டது. அப்பொழுது இறந்த உடலை பார்க்க வந்தவர்கள் பார்த்துவிட்டு பேசுகிறார்கள். என்ன பேசுகிறார்கள் என்று கூர்ந்து கேட்டால். எத்தனை ஒரு சிறந்த மனிதர் யாருக்கு எந்த உதவி என்றாலும் தயங்காமல் வந்து நிற்பார். இனி இவரை போல் ஒருவரை காண முடியுமா? தான் தன் சுகம் என நினைக்கத் தோன்றாதவர்.

ஆசை மகள் குடும்பத்துடன் வருகிறாள். அழுது அரற்றினாள்.எல்லாமே தந்தை தான் அவளுக்கு. அணைத்து சமாதானப்படுத்த தவிக்கிறது. ஆனால் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறது.

ஊரெல்லாம் நல்லவர் நல்ல மனிதர் என்று கூறிக்கொண்டே செல்கிறார்கள்.

பேழைக்குள் இருந்து உடலை வெளியே எடுத்து வைக்கிறார்கள். எத்தனையோ இறப்பை கண்ட ஆள்தான். ஆனாலும் இறுதியாக போகப்போவதை கண்டு சற்று மனம் கலங்கினாலும் அப்பொழுதும் இறைவனிடம் கேட்டு கொள்கிறது.

இறைவா என் இழப்பு யாரையும் பாதிக்க கூடாது என்று சொல்லி கொண்டே பிரபஞ்சத்தில் கலந்து விடுகிறது. இதை இவர் உயிருடன் இருக்கும் போது அனைவருக்கும் கற்றுத் தந்த முறை. தினமும் உறங்க செல்லும் போது அன்றைய நாளில் நடந்ததை நினைத்து பார்த்தால். நாம் செய்த நன்மை தீமைகள் தெரியும். நல்லதை தொடர்ந்து அல்லதை மாற்றிக்கொண்டால் வாழ்வில் எதை சாதிக்கிறோமோ இல்லையோ நல்ல மனிதனாக வாழாலாம்.

You already voted!
4.4 49 votes
Article Rating
Subscribe
Notify of
guest
100 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
கருவூர் இரா.பழனிச்சாமி
கருவூர் இரா.பழனிச்சாமி
2 years ago

“இறைவா என் இழப்பு யாரையும் பாதிக்க கூடாது என்று சொல்லி கொண்டே பிரபஞ்சத்தில் கலந்து விடுகிறது. இதை இவர் உயிருடன் இருக்கும் போது அனைவருக்கும் கற்றுத் தந்த முறை. தினமும் உறங்க செல்லும் போது அன்றைய நாளில் நடந்ததை நினைத்து பார்த்தால். நாம் செய்த நன்மை தீமைகள் தெரியும். நல்லதை தொடர்ந்து அல்லதை மாற்றிக்கொண்டால் வாழ்வில் எதை சாதிக்கிறோமோ இல்லையோ நல்ல மனிதனாக 
வாழலாம்”.
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் (திருக்குறள் – 96)
மனித நேயத்தோடு நல்ல மனிதனாக வாழ நல்வழி காட்டியுள்ள கதை. 

Gsr Ramamurthy
Gsr Ramamurthy
2 years ago

Very very nice story

Venkat
Venkat
2 years ago

மிக அருமை

விஜயகுமாரி
விஜயகுமாரி
2 years ago

இறப்பை விட ஆன்மா எண்ணும் நினைவலைகள் புனிதமானது என்பதை சிலரின் வாழ்க்கை கதை சொல்லி விட்டு செல்கிறது. எழுதியவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

S.guganeshwaran
S.guganeshwaran
2 years ago

Good congratulations ma’am

Jaganmohan
Jaganmohan
2 years ago

Excellent emotional journey.. A great insight into every little twist and turn in life. Keep it up

Jaya
Jaya
Reply to  Jaganmohan
2 years ago
மிக்க நன்றி :)
ஈஸ்வரன்உஷா
ஈஸ்வரன்உஷா
2 years ago

மிகவும் அருமை அனைவருக்கும் தன்னைப் பற்றி ஒரு நினைவூட்டல்

Jaya
Jaya
Reply to  ஈஸ்வரன்உஷா
2 years ago
மிக்க நன்றி :)
Meenakshi Sundaram
Meenakshi Sundaram
2 years ago

Arumai

Jaya
Jaya
Reply to  Meenakshi Sundaram
2 years ago
  மிக்க நன்றி :)
SARADHA SANTOSH
SARADHA SANTOSH
2 years ago

தெளிந்த நீரோடையாய் இயல்பாக கதை நகர்கிறது.. சிறப்பு.. வெற்றி பெற வாழ்த்துகள்..

Jaya
Jaya
Reply to  SARADHA SANTOSH
2 years ago
மிக்க நன்றி :)
ஜெய்சக்தி
ஜெய்சக்தி
2 years ago

அனுபவத்திலிருந்து பிறந்த கதை.உயிரோட்டமாக இருக்கிறது

Jaya
Jaya
Reply to  ஜெய்சக்தி
2 years ago
மிக்க நன்றி Madam :)
Anandkumar
Anandkumar
2 years ago

எழுத்துக்களும் ,உணர்வுகளும் ,எண்ணங்களும் அற்புதமான சங்கமம் ….சிறுகதை என்னும் பெயரில் கொடுத்திருக்கிறார் மிகப்பெரிய வாழ்வின் யதார்த்தத்தையும் …உண்மை நிலையையும் …அமைதியாய் ரசித்து உணரப்பட வேண்டிய அற்புதமான கதை ஓவியம் …வாழ்த்துக்கள் ….jaya lakshmi..

Last edited 2 years ago by Anandkumar
Jaya
Jaya
Reply to  Anandkumar
2 years ago
மிக்க நன்றி
VENNILA KAMARAJ. M
VENNILA KAMARAJ. M
2 years ago

ஆத்மாவின் அமைதியான குரல் என் செவிவழி சென்று ஆழ்மனதில் எனை ஆழ்த்தி கண்களுக்கும் வியர்த்தது….
உணர்ச்சி ததும்பி
உள்ளம் வெதும்பி
இதயம் துளைத்த கதை….
இயல்பான நடை….
இறப்பிலும் உயிர்ப்பித்தார் அய்யர்….. உணர்ச்சி பூர்வமாகவும் மனதில் ஏதோ இனம் புரியாத கலக்கத்தினையும் ஏற்படுத்தியது…எழுத்தாளருக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் 💐💐

Jaya
Jaya
Reply to  VENNILA KAMARAJ. M
2 years ago
மிக்க நன்றி ma  :)
க.முத்துநாயகம்
க.முத்துநாயகம்
2 years ago

அருமை. மனதைத் தொடும் இதமான கதை!

Jaya
Jaya
மிக்க நன்றி :)
T KUMARARAJAN
T KUMARARAJAN
2 years ago

EXCELLENT

Jaya
Jaya
Reply to  T KUMARARAJAN
2 years ago
மிக்க நன்றி :)
Kavitha
Kavitha
2 years ago

ஜெயா இந்த கதையை படித்து முடித்த போது இதயம் கனமானது எனக்கு. ஆனால் அப்பா இப்ப பெருமிதம் அடைகிறார் இதை படித்து.

அன்பே அப்பா. அன்பு தான் அப்பா

Jaya
Jaya
Reply to  Kavitha
2 years ago
மிக்க நன்றி :)
S Muthukumar
S Muthukumar
2 years ago

மனிதனாக வாழ எல்லா குணங்களையும் பெற்று வாழ்ந்து காட்டுவது மிக எளிதல்ல. இச்சிறுகதையில் படித்தபோது ஒரு மனிதன் எந்த சூழ்நிலையிலும் இறைவன் படைத்த மனித குணம் இயற்கையாகவே இருந்துள்ளது. அதில் மனிதமும் வாழ்ந்திருக்கிறது என் புரிய வைத்த இச்சிறுகதை புத்தகம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளரின் விரல் இறைவனின் துணை கொண்டு எழுதப்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன்.

Jaya
Jaya
Reply to  S Muthukumar
2 years ago
மிக்க நன்றி :)
Shanthi Sriram
Shanthi Sriram
2 years ago

அருமை மேடம்…நாங்களும் AOR Sir உடன் வாழ்ந்துள்ளோம்..அன்பு,அடக்கம், பணிவு,பரிவு,உண்மை, உழைப்பு,உறுதி அனைத்தும் இருக்கும் மிக எளிமையான மனிதர் …..அவரது 80 வருட வாழ்க்கையை
80 வார்த்தையில் அழகாக தெரிவித்து உளளீர்..கண் கலங்குகிறது…

Jaya
Jaya
Reply to  Shanthi Sriram
2 years ago
மிக்க நன்றி :)
நீலகண்ட தமிழன்
நீலகண்ட தமிழன்
2 years ago

இதைவிட சிறந்த ஒரு சிறுகதை இன்னொன்று இந்த போட்டியில் கலந்து கொள்ளுமா என்று தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் வரக்கூடிய அனுபவம். எழுதியவருக்கும் இதைப் படித்துக் கொண்டிருக்கும் எவருக்கும் கிடைத்திருக்காத அனுபவம். எனக்கும் கிடைக்காத இந்த அனுபவம் ஆனால் படித்து முடித்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவம் போல் உணர்ந்தேன்.
அந்திம காலத்தின் அனுபவம் இவரது எழுத்துக்களில் சிறப்பாக விளங்குகிறது.

Jaya
Jaya
மிக்க நன்றி :)  Vanakkam sir
Last edited 2 years ago by Jaya
PUGALENTHI
PUGALENTHI
2 years ago

Super Ma’am

Devaraj
Devaraj
2 years ago

மிகவும் அற்புதமான கதையை தொகுத்து வழங்கிய ஜெயலட்சுமி மணிகண்டன் அவர்களுக்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

Jaya
Jaya
Reply to  Devaraj
2 years ago
மிக்க நன்றி :)
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096530
Users Today : 15
Total Users : 96530
Views Today : 19
Total views : 416661
Who's Online : 0
Your IP Address : 18.227.48.131

Archives (முந்தைய செய்திகள்)