Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

ஆப்பிள் விதைகள் – கவிதைக்கோமான்

15 Feb 2022 3:15 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures - kavidhai

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-49
படைப்பாளர் - கவிக்கடல் கவிதைக்கோமான், பெங்களூரு

"காலைச்   சுற்றியப்   பாம்பும்
அடிபட்டப்    பாம்பும்
கடிக்காமல்   விடாது   என்பதும்...

 முன்னோர்   செய்த   பாவமோ
முன் பிறவியில்   செய்த   பாவமோ
இல்லை..... இப்பிறவியில்
செய்த பாவமோ..... விடாமல்     
துரத்தும்  என்பதும்  நிதர்சனம்! "

மருத்துவமனையே   சந்தைக்கடை   போல்  மாறியது.  பெரியவர், சிறியவர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று   இருபது முப்பதுக்கும் மேற்பட்ட  கூட்டமொன்று   திபுதிபுவென்று  மருத்துவமனைக்குள்   நுழைந்து  எங்கு  இருக்கிறார்? என்ன  ஆயிற்று? எப்படி இருக்கிறார்? என்ற   பதற்றத்துடன்   ஒவ்வொரு  பிரிவிலும்  நுழைந்து நுழைந்து, சுத்தி முத்திக் கண்களால் துழாவிப் பார்த்தது. இவர்களைப் பார்த்தால் வசதியான பணக்காரருமில்லை; பிச்சைக்காரருமில்லை; பிச்சைக்காரருக்கும் நடுத்தர வர்க்கத்திற்கும் இடைபட்டவர்களாக இருந்தனர். அப்பொழுது   எதிர்பாராமல்  இவர்களைப்  பார்த்து   விட்ட   மருத்துவமனையின் வார்டு பாய் மாதவன்,

" அலோ... அலோ.... யார்   நீங்க?  எடம்  தெரியாம  நொழஞ்சிட்டீங்களா? இது ஆஸ்பிட்டல்; பேஷண்டுகளுக்குத் தொந்தரவாகும்; இப்படி கூட்டமா நொழறதுக்கு இது சந்தக்கட இல்ல. எல்லாரும்  வெளில  போங்க. " என்று  மருத்துவமனையின் வார்டு பாய் மாதவன் விரட்டினான். "

"  நோ.. நோ... நாங்க தெரிஞ்சித்தான்   வந்திருக்கோம்;   இருதய நாதன் எந்த  வார்டுல   இர்க்காரு? "

       " எந்த  இருதய  நாதன்? இந்த ஆஸ்பெட்டல்ல  நெறய   பேரு  இருக்காங்க.... "
       " ஆக்ஸிடன்ட்   ஆயி  ஆம்புலன்ஸில் கொண்டு வந்தாங்களே?....."
        "ஓ.... அவரா?  அவரு சீரியஸ் கண்டிஷன்ல  இருக்கிற்தால  எமர்ஜென்சி  வார்டான ஐ. சி. யு. வில்  இர்க்காரு. ஆமா... நீங்களெல்லாம்   அவர்க்கு  என்ன  வொறவு?"
" நான்  அப்பா!.... நான்   அம்மா!... நான் அக்கா!... நான்  தங்கச்சி!.... நான்   தாத்தா!... நான்  பாட்டி!.... நான்  அண்ணன்!.... நான்  தம்பி!.... "  என்று  ஒவ்வொரு  உறவு  முறையிலும்  மூன்று, நான்கு, ஐந்து  பேர்  என்று ஆளாளுக்குச் சொன்னதும்  மருத்துவமனையின் வார்டு பாய்  மாதவன் குழம்பியவனாக  தலையைச்  சொறிந்தபடி, ஆச்சரியமாக அவர்களைப்  பார்த்து  திகைத்தான்.
" இர்ங்க  இர்ங்க என்ன... ஒலர்றீங்க?  அண்ணன், தம்பி, அக்கா, தங்கெ, மாமன், மச்சான், சின்னம்மா, பெரியம்மா, தாத்தா, பாட்டின்னு  மூனு நாலு பேரு கூட  இருக்கலாம்....ஆனா, அப்பா, அம்மான்னு  எப்படி  நாலஞ்சு  பேரு  இர்க்க முடியும்? என்ன என் காதில பூ சுத்துறீங்களா? போங்க வெளில. "
" நாங்க  எல்லாருமே   சொந்தந்தான்....  ஒறவுக் காரங்கதான்." என்று  எல்லோரும் தனித்தனியாக ஒவ்வொருத்தரும் சொல்லி  கடந்த  காலத்தில்  மூழ்கினர்.
         இருதய நாதன்  தினமும்   வேலைக்குப்  போகும்போதும், வேலை  முடிந்து  வீட்டிற்கு  திரும்பிப்  போகும் போதும்  பெற்றப்  பிள்ளைகள்  பெற்றோரை  வயதான  காலத்தில் விட்டுவிட்டு  போனதால்  அநாதையாக  தவித்து  முதுமையில்  அல்லல்படும்  அவர்களுக்குப்  பழங்கள், உணவு  வகைகள்  வாங்கி வந்து  தான் யாரென்றே  காட்டிக் கொள்ளாமல்  கதவருகே  வைத்துவிட்டு  கதவைத்  தட்டிவிட்டு செல்வார். கதவைத் தட்டிய  சத்தம் கேட்டு கதவைத் திறந்து பார்த்தால் உணவு பொருள்கள்  இருக்கும்; இதை  வைத்துவிட்டு  போகுபவரின் முதுகு மட்டும் தான் தெரியும். போகப் போக  பழக  ஆரம்பித்தனர்.
         தள்ளு  வண்டியில்   உணவு  விற்கும்  வயதான  தம்பதியர்  வண்டியைத்  தள்ள முடியாமல்  சிரமப்  படுவதைப்  பார்த்து   வண்டியைத்  தள்ளிக்கொண்டு  போய் வியாபாரம்  செய்யும்  இடத்தில் நிறுத்தி வைத்து விட்டு  வருவார்;  இரவு நேரத்திலும்  வீடுவரை  உணவு விற்கும்  வண்டியைத்  தள்ளிக் கொண்டு போய், வண்டியில்  உள்ளப்  பாத்திரங்களை  எடுத்து வீட்டில் வைத்து விட்டு வருவார். வரும்   வழியில்   தாயும்  மகளும்  பிச்சை  எடுப்பதைப்  பார்த்துப்  படிக்க  வேண்டிய  வயது  என்று  சிறுமியைப்  பார்த்து" நீ இனிமே பிச்சை எடுக்கக் கூடாது. படி."  என்று பள்ளியில்  சேர்த்துப்  படிக்க  வைத்துப்  பட்டதாரியாக்கினார். தெருவில் பிச்சை எடுப்பவர்களுக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுப்பார். வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாங்கித் தருவார். இப்படி சாதி, மதம், மொழி, இனம் என்று எந்த வித்தியாசமோ, உயர்வு தாழ்வோ பார்க்காமல் பலருக்குப் பல்வேறு  விதத்தில் உறுதுணையாக   இருந்து  உதவிகள்   செய்து  வந்தார்.
         மனிதர்களுக்கு  உதவுவது  மட்டுமில்லாமல்   தினமும்   சாலை  ஓரங்களில்  மரக்கன்றுகளை  நட்டு  தண்ணீர் ஊற்றி வளர்த்து  வந்தார்.  தனக்கென  எந்த  உறவோ, குடும்பமோ  இல்லாமல்  இருந்ததால்  இருதய  நாதன்  சம்பாதிக்கும் பணத்தை அப்படியே மற்றவர்க்காகச்  செலவு செய்து  விடுவார். தனக்கென ஒரு  துணையாக  இருப்பது   அவர்  வளர்க்கும்   நாய்  மட்டுந்தான்.  தனக்காக  வாழாமல்  பிறருக்காக  வாழ்ந்ததால்  உதவி   பெற்றவர்கள் தான்  உயிரையும்  கொடுக்கக் கூடிய  உறவுகளாக  மாறினர்.

ஒருநாள்  வேலை  முடிந்து  வீட்டிற்கு  வரும்போது இருதய   நாதன் வருவதைத் தூரத்திலிருந்து  பார்த்த வளர்ப்பு  நாயானது  பாசமாக  எதையும்  கவனிக்காமல் சாலையின் குறுக்கே ஓடி வந்தது. பின்னால்  வேகமாக   ஒரு கார் வந்து  கொண்டிருந்ததை  நாய் பார்க்காமல் நால் கால் பாய்ச்சலில் இருதய  நாதனை நோக்கி ஓடி வந்துக் கொண்டிருந்ததையும், பின்னால் ஒரு கார் வந்துக் கொண்டிருப்பதையும் பார்த்து பயந்த இருதயநாதன், நாய் மாட்டிச்  செத்துவிடும்  என்று எண்ணி ஓடிச் சென்று  நாயைக் காப்பாற்றப் போய்  காரில் அடிபட்டு உயிருக்குப்  போராடும்  நிலையில் தான்  மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். என்ற  விபரங்களைக்  கேட்ட மருத்துவமனையின் வார்டு பாய்  மாதவன் தன்னை  மறந்த நிலையில்  கண்ணீரைச் சிந்தினான். ஒரு  மகாத்மா  வடிவில்  இருதய நாதனை  நினைத்துக்  கையெடுத்துக்   கும்பிட்டான்.

" நெறயப்  புண்ணியம் செஞ்சிருக்கார்; அவருக்கு ஒன்னும்  ஆகாது. தர்மம்  தலைக்காக்கும்; ஐ. சி. யு. வில இருக்கிறதால  பாக்க  முடியாது. வார்டுக்கு  மாத்தின  பொறவுதான்  பாக்க முடியும். அதுவும் இப்படி கும்பலா பாக்க முடியாது. ரெண்டு ரெண்டு பேரா வந்து பாருங்க. தயவு செஞ்சு இப்ப எல்லாரும்  போங்க; இல்லன்னா  என்  வேலயே  போய்டும் "  என்று  பக்குவமாக  எடுத்துச்   சொல்லி  அனுப்பி வைத்தான் வார்டு பாய்   மாதவன்.

' பெற்றோர்கள்   பிள்ளைகளுக்குச்  செய்ய  வேண்டிய  கடமையை, பிள்ளைகள்  பெற்றோருக்கு  ஆற்ற  வேண்டிய  நன்றி கடனை, தம்பி, தங்கைகளுக்கு  அண்ணனாய்  இருந்து   செய்ய வேண்டிய  உதவிகளை, தாத்தா பாட்டிகளுக்குக் காட்ட வேண்டிய பாசம் என்று  எந்த  எதிர்பார்ப்பும்  இல்லாமல்  தான்  உழைத்துச்  சம்பாதித்த  வருமானம்  முழுவதையும்   மற்றவர்க்காக   வாரி வழங்கிய  வள்ளலாக மட்டும்  இல்லாமல்  ஒரு  நாய்க்காகத்  தன் உயிரைப்   பணயம் வைத்து  காப்பாற்றி  இருக்கிறார்  என்றால்  உண்மையிலேயே இவர்தான் கண்கண்ட  தெய்வம்;  பெயருக்கேற்ப  பெரிய  இதயமுடைய  மனிதர்க்கெல்லாம்  நாதனாகவே  விளங்கி  இருக்கிறார். இப்படிப் பட்ட  கலியுகக்  கர்ணனுக்கு   பணிவிடை  செய்யக் கூடிய  பாக்கியம்  கிடைத்ததற்கு  கடவுளுக்கு  நன்றி '  என்று  மனதிற்குள்  எண்ணினான் வார்டு பாய்  மாதவன்.

அவசரப் பிரிவில்  அவசர  சிகிச்சை  அளிக்கப்பட்டு, அறுவை  சிகிச்சை  செய்து,  வார்டுக்கு  மாற்றப்பட்டார்  இருதய நாதன்.  தினமும்  எல்லோரும்  மாறி மாறி  வந்து  பார்த்துக்  கொண்டனர். ஒரு  ஆறு  மாதத்தில்  குணமாகி  வீட்டிற்கு  அழைத்துச் செல்லப்  பட்டார் இருதய நாதன்.  ஆனால், விபத்தால்   இரண்டு  கால்களையும்  இழந்து  விட்டதால்  மற்றவர்  உதவி  இல்லாமல்  உயிர் வாழ  முடியாது  என்பதால்  இருதய நாதன்  மூலமாக  உதவிப்  பெற்றவர்கள் தினம்  ஒருவர்  நர்ஸ்  மாதிரி  பார்த்துக்  கொள்வதென   முடிவெடுத்து  பார்த்துக் கொண்டனர். 'எந்த  எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி  செய்தது அதற்கு  எந்தப்  பலனும்  இல்லாமல் போய்  அவர்கள்  திருப்பி செய்யும்  பண்டமாற்று முறைபோல்  ஆகிவிட்டதே  என்று  தினமும்  மனம்  வருந்தி  இனிமேல்  உயிர்  வாழ்ந்து  என்ன  பலன்? இதைவிட  சாவதே நல்லது'  என்று  தினமும்  வேதனைப்  பட்டார்   இருதய நாதன்.
" ஆப்பிள்  விதை  சாப்பிட்டால்  உயிர் போகுமா? "  என்ற  கேள்விக்கு  டாக்டர்  விளக்கமளித்தார்.
" ஆப்பிள்  விதை  கொடிய  விஷமாகும். விஷம்னு தெரிஞ்சே  யாரோ  அவருக்கு  அரைத்து  வாயில்  ஊற்றி இருக்கிறார்கள். "

" என்  கணவரான  இருதய  நாதனை உயிருக்குயிராகப்    பாசங்  காட்டுகிற சொந்தங்களுக்கும்   காவல்துறைக்கும்  இந்தக்  கடிதம்   மூலமா  ஜாக்குலின் நான் சொல்வது  உங்க  குழப்பதுக்கு  வடிகாலாகவும்  அமையும். இது என்னுடைய  மரண   வாக்கு மூலம்னு   கூட  காவல்துறை எடுத்துக்கலாம்.

நானும்  இருதய  நாதனும்  உயிருக்குயிராக்  காதலிச்சோம்;  கல்யாணம் செய்துக்கப்  போறோம்னு  நம்பிக்கையோட  பல முறை  ஒன்னா  சேர்ந்திருக்கோம்; இதனால  எனக்கு கரு உண்டாச்சி; அப்போது  இருதய நாதன்  வீட்டில் கல்யாணத்துக்கு சம்மதிக்காததால்   மனம்  வெறுத்து  குழப்பமான   நிலையில்  என்னை  அம்போன்னு   விட்டுட்டு  இந்த  ஊருக்கு  வந்திட்டார்;  நானும்  பல  ஊர்களில் பலரிடம்  விசாரித்தும்  கண்டு பிடிக்க  முடியாமல் போயிடுச்சி. நானும்    ஒரு  ஆண் பிள்ளையைப்  பெற்று    படாதபாடு பட்டு  தனி  மனுசியா  கேலி  கிண்டலுக்கு மத்தியில்  வைராக்கியத்தோடு   வளர்த்து,  படிக்க  வச்சு, பட்டதாரியாக்கி, நல்ல  வேலையில்   சேர்ந்த பின்ன   ஒரு  பொண்ணப்  பார்த்து  கல்யாணமும்  முடிச்சிட்டேன்;  ஆனா, நெஞ்சில்  உள்ள  காயம்  போகல;  இருதய நாதன்  செய்த நம்பிக்கை  துரோகத்துக்கு  என்  கையால   கொல்லணும்  என்று  இருந்தேன்; அப்போது  தான்  இருதய நாதன்  ஒரு  நாய்க்காக   விபத்துல  சிக்கி  ஆஸ்பத்திரியில் இருக்கிறதா  பத்திரிகையில்   செய்தி  பார்த்து வந்தேன்.

இங்கேயே  வீடெடுத்துத்  தங்கி  இருதய நாதன் மூலமாக நானும்  உதவி  பெற்ற  விசுவாசியா  நடித்தேன்;  ஆஸ்பத்திரியில்  இருந்து  வந்த பிறகு எப்போது  என்னை  அவரைப்  பார்த்துக்க உதவிக்கு அனுப்புவாங்க? என்று  காத்திருந்தேன்; இன்றைக்கு  அந்த சந்தர்ப்பம் வந்தது; கொலை வெறியோடு  போன  எனக்கு அதிர்ச்சி  காத்திருந்தது;  ஆமாம்.... என் கணவர் என்னைக் கண்டதும் அதிர்ச்சி ஒரு பக்கமும் குற்றவுணர்வு ஒரு பக்கமும் அவர்க்கு ஏற்பட்டு, கண்ணீர் விட்டு  அழுது  நான் உன்னை ஏமாற்றி  விட்டதாக நீ  நினைக்கலாம், ஆனா, நான் எங்கே போகறது?  என்ன செய்யறது? வாயும்  வயிறுமா  இருக்கிற  உன்னை  எப்படி  எங்கே அழைச்சிட்டு  போகறது?னு  தெரியாம  தவித்தேன். மனசை   தேத்திக்கிட்டு  பெத்தவங்க  மேல  இருந்த  கோபத்தில  வந்துட்டேன். உன்னத்  தவிர வேற  பொண்ண  நினைச்சுக்கூட  பார்க்க முடியல; உனக்கு  செய்த  பாவத்த  போக்கத்தான்   தர்மம்  செஞ்சேன்.... ஆனா,

' காலச்  சுத்தினப்   பாம்பும்
 அடிபட்டப்  பாம்பும்
 கடிக்காம  விடாது   என்பதும்....
 முன்னோர்  செய்த  பாவமோ
முன்  பிறவியில்  செய்த   பாவமோ
இல்லை..இப்பிறவியில் 
செய்த  பாவமோ.....
விடாது  துறத்தும்   என்பதும்
நிதர்சனம்..... '

அப்படின்னு  முன்னோர்கள்  சொன்னதுக்கு  ஏத்த  மாதிரி  என்  நிலமை  ஆயிடுச்சி;  நான்  செஞ்ச  உதவிக்கு  இப்ப  எல்லாரும்   பார்த்துக்கிறாங்க ;  ஆனா.... போகப் போக அவங்களுக்கும் சலிப்பு ஏற்பட்டு போயிடும்; எதுக்கும் பிரயோஜனம்  இல்லாம  நான்  ஏன்  உயிரோட   இருக்கணும்?  மத்தவங்க  கிட்டக்  கேக்க  முடியாது; உனக்கு  செஞ்ச  துரோகத்துக்கு   நீயே  என்னெ  விஷம்  கொடுத்து  கொன்னுடு;  என்று  கதறி  அழுதபோது    கொலை  செய்ய  போன  என்  ஈரக்  குலையே  ஆடிச்  போச்சு;  அப்போது  நான்  'என்னால முடியாதுங்க... நான் இருக்கிறேன், நம்ம  பையன், மருமகள், பேரப்பிள்ளைகள்  இருக்கிறார்கள்; வாங்க  நம்ம  ஊருக்குப்  போயிடலாம்;'  என்றேன்.

 நல்லா சம்பாதிக்கிற போது, ஊனமில்லாம  இருந்த போது நான் உங்கள  கண்டுக்கவே இல்ல... இப்ப   எப்படி?  பையனும் மருமகளும் என்ன ஒரு வேண்டாத பொருளா நெனப்பாங்க. வேணாம்  ஜாக்குலின்!  நீ  எவ்வளவோ  கஷ்டப் பட்டுருப்பே! இனிமேலும்  என்னால  உனக்கு  கஷ்டம்  வேணாம்; உனக்கு  என்  மேல  உண்மையான  அன்பு, பாசம்   இருந்தா  இந்த அவஸ்தை எனக்கு  வேணாம் ; என்னெ  கொன்னுடு! ' என்றார்.

என்னால  முடியாதுங்க...நான்  சொல்றதைக்  கேளுங்க; வாங்க  நம்ம  ஊருக்கே  போயிடலாம்; என்றேன். என்  பிடிவாதத்தைப்  பார்த்த  அவர், ' டயர்டா  இருக்கு  ஆப்பிள்  விதைகளை  மிக்ஸியில் போட்டு அரைச்சி  ஜூஸ்  செஞ்சு  கொடு'னு கேட்டார். நானும்  ஆப்பிளை  விட  ஆப்பிள்  விதையில சத்து அதிகமா  இருக்கும்  போலிருக்கு; அதனால தான்  ஆப்பிள் விதை ஜுஸ்  கேட்குறாரு  என்று நம்பி ஜூஸ் செய்து கொடுத்தேன்; கொஞ்ச  நேரத்தில்  மயக்கமாயிட்டாரு; அப்போது, சன்னமான  குரலில், 'ஜாக்குலின்  என்னெ காப்பாற்ற முயற்சி எடுக்காதே! என்னெ  இனிமே யாராலயும்  காப்பாற்ற முடியாது; ஆப்பிள் விதை  கொடிய  விஷம்.'  என்று  அவர்  சொன்ன பிறகு தான் எனக்கே  தெரியும்; ஆப்பிள் விதைகள் விஷம் அப்படினு. அதனால, இந்த  கடிதத்தை  எழுதிட்டு, நானும்  ஆப்பிள் விதைகள் அரைத்து சாப்பிட்டேன்; இந்த  பூமியில தான் நாங்க  சேர்ந்து  வாழ விடாம  பிரிச்சிட்டாங்க; ஆனா, சாவில் ஒன்னா சேர்ந்துட்டோம்;

மேலுலகத்திலாவது   நாங்க சேர்ந்து  வாழுவோம்; அங்க  எங்களைப்  பிரிக்க முடியாது; நாங்க  போறோம்.. எங்களைப்  பற்றி யாரும்  கவலைப்  படாதீங்க! என்னையும் என் கணவரையும் பார்த்துக் கொண்ட உங்கள் எல்லோருக்கும் நன்றி. "
இப்படிக்கு,
ஜாக்குலின்.
என்று    காவல்துறை அதிகாரி கடிதத்தைப்  படித்து  முடித்ததும்  எல்லோரும்  கண்ணீர்  விட்டு   கதறி  அழுதனர்; காவல்துறை  அதிகாரி  உட்பட   மற்ற  காவல் துறையினரான   கான்ஸ்டபிள்களும்  கண்ணீர்  சிந்தினர்  என்றால்  வானமும்  சேர்ந்து   அழுதது

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

097956
Users Today : 24
Total Users : 97956
Views Today : 44
Total views : 419426
Who's Online : 0
Your IP Address : 3.147.195.28

Archives (முந்தைய செய்திகள்)