16 Feb 2022 5:00 pmFeatured
தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி- 70
படைப்பாளர் - ராஜதிலகம் பாலாஜி, புடாபெஸ்ட், ஹங்கேரி
கண்களில் கண்ணீருடன் தான் வரும் பாதையைத் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே அனல் பறக்கும் வேகத்தில் ஓட்டத்தைப் பிடித்தாள் ஒரு பெண்.மூச்சிரைக்க பயந்து கொண்டே வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தவள் திடீரென்று அவள் செல்லும் வழியிலிருந்த ஒரு கூரைவீட்டிற்குள் நுழைந்துவிட்டாள்.
முன் பின் தெரியாத நபர் வீட்டிற்குள் நுழைந்ததைப் பார்த்ததும், "யாரும்மா நீ?" என்று வீட்டின் உரிமையாளர் கேட்டதும், இரு கைகளை கூப்பி வேகமாக அவருடைய கால்களில் விழுந்து "ஒரு பத்து நிமிஷம் மட்டும் அமைதியா இருங்கம்மா.நான் எல்லாம் விஷயத்தையும் விளக்கமாக சொல்லுறேன்" என்று கெஞ்சியதும் உதவிக் கேட்டவளின் நிலையைப் பார்த்து மௌனமாக இருந்தார் அந்த வீட்டின் உரிமையாளர்.
தன் வீட்டை நோக்கி உதவி தேடி நாடி வந்தவளைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது.ஒளியிழந்த கண்களோடு முகத்தில் வழியும் கண்ணீருடன் தலையிலும் கையிலும் சொட்ட சொட்ட சில இரத்தக் காயங்களுடனும், அவள் உடுத்தியிருந்த துணியும் ஆங்காங்கே கிழிந்தும் காணப்பட்டது.
அவளைப் பார்த்ததுமே, ஏதோ மிகப்பெரிய ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள போராடிகிறாள் என்பது மட்டும் அவருக்கு நன்றாக தெரிந்தது.
பத்து பதினைந்து அடியாட்கள் சிலர், கைகளில் கத்தி மரக்கட்டை போன்ற பல ஆயுதங்களுடன் "ஏய் அங்க தேடிப் பாருங்கடா…" என்று கூச்சலிட்டுக் கொண்டே அந்த வீட்டின் வாசலில் நின்று கொண்டிருப்பதைக் கூரையின் ஓட்டைகளின் வழியாக பார்த்தவளுக்கு இதயத்துடிப்பெல்லாம் வேகமாக துடிக்கத் தொடங்கியது.பயத்தில் முகமெல்லாம் வியர்த்து விறுவிறுத்து தொண்டையில் எச்சில் கூட விழுங்க முடியாமல் தொண்டைக் குழி அடைத்துக் கொண்டது.ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு அந்த ரவுடிக் கும்பல் அவ்விடத்தை விட்டுக் கடந்து சென்றதை அறிந்ததும் பெரு மூச்சுவிட்டாள்.
"யாரும்மா நீ? உன்னை எதுக்கு இந்த ரவுடி பசங்க துரத்துறாங்க…"
விம்மி விம்மி அழுது கொண்டே தன்னைப் பற்றிய விவரம் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறத் தொடங்கினாள்.
"என் பெயர் கார்த்திகாம்மா.என்னுடைய அப்பா அம்மாவிற்கு நான் ஒரே பிள்ளை.என்னுடைய அப்பா அம்மா திருமணமாகி பத்து வருஷத்து பிறகு தான் நான் பிறந்தேன்.
பல கோவிலுக்குச் சென்று தவமிருந்து என்னைப் பெற்றதால கண்ணிமை போல அவ்வளவு பாதுகாப்பாவும் அன்பாவும் பார்த்துப் பார்த்து வளர்த்தாங்க.நான் பிறந்ததுல இருந்து பையன் மாதிரி தான் டவுசர் சட்டையெல்லாம் போட்டு தான் வளர்ந்தேன்.ஏழாவது வகுப்பு படிக்கும் வரை எனக்கு ஒன்னுமே தெரியல.
ஆனால் நாட்கள் கடந்து செல்ல செல்ல எனக்கு கையில வளையில் போடனும், தலையில பூ வைக்கனும், மஞ்சள் பூசி குளிக்கனும், பாவடைத் தாவணி போட்டு பார்க்கனும்னு ஆசை வர்ற ஆரம்பிச்சிருச்சு.
ஒரு நாள் என்னுடைய சித்தப்பா பொண்ணுக்கிட்ட அவள் பயன்படுத்துற எல்லாம் பொருளும் வாங்கிட்டு வந்து பொண்ணு மாதிரி ட்ரஸ் மேக்கப்லாம் போட்டிருந்ததை என்னுடைய அப்பா பார்த்ததும் கோபம் வந்து வேகமாக ஓங்கி அடிச்சுட்டாங்க.நான் உடனே ஓடிப்போய் அம்மா முந்தானைய பிடிச்சு அழ ஆரம்பிச்சுட்டேன்.
அப்பா வீட்டை விட்டு கிளம்பிச் சென்றதும் "அம்மா.. அப்பா எதுக்கும்மா என்ன அடிக்கிறாங்க? "
"நீ பையனா இருந்துட்டு பொண்ணுங்க மாதிரி ட்ரஸ் போட்டதால அப்பாவுக்கு பிடிக்கல கார்த்திக். பசங்களாம் இப்படி டிரஸ் பண்ணுவாங்களா சொல்லு…"
"அதாம்மா நானும் சொல்லுறேன்.எனக்கு மட்டும் ஏன் பொண்ணுங்க மாதிரி டிரஸ் மேக்கப் பண்ணணும்னு தோணுது? அப்போ நான் பையன் இல்லதானேனு" சொன்னதும் அம்மாவும் என்னை இனி இப்படி பேசுவியா அப்படினு சொல்லி அடிச்சுட்டாங்க.
அம்மாவாது என்னுடய நிலைமைய புரிஞ்சுக்குவாங்க நினைச்சா, அவுங்களும் என்ன ஏதுனு விசாரிக்காம தினமும் திட்டி அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க .வருஷம் போக போக என்னுடைய மார்பகம் எல்லாம் பெருசாக ஆரம்பிச்சிருச்சு.இந்த விஷயம் தெரிந்த என்னுடைய அப்பாவும் அம்மாவும் உடனடியா ஆஸ்பத்திரில கொண்டு போய் அட்மிட் செஞ்சு டாக்டரோட ஆலோசனைப்படி எனக்கு ஆப்ரேஷன் செய்ய முடிவு எடுத்தாங்க.
முதல் வருஷம் ஆப்ரேஷன் பண்ணுவாங்க, மறுவருஷம் பார்த்தா மறுபடியும் மார்பகம் வெளிய தெரிய ஆரம்பிக்கும்.இது போல தொடர்ந்து நடந்து கொண்டே இருந்துச்சு.நித்தமும் வலி தாங்க முடியாம தவியா தவிச்சேன்.நான் மைனருங்கறதால என்னால வீட்டிலிருந்து தப்பிச்சு போகவும் முடியல.ஒரு முறை அப்படி முயற்சி செஞ்சு வசமா மாட்டிக்கிட்டேன்.சரினு பல்லைக் கடிச்சு ஒவ்வொரு முறையும் ஆப்ரேஷன் வலியையும் மன வேதனையும் சகிச்சு பொறுத்துக்கிட்டேன்.இனி அவுங்களுக்கு ஏத்த மாதிரி நடிச்சா தான் நம்மளால இந்த வீட்டுல உயிர் வாழ முடியும்.மேஜர் வயசு வரும் வரைக்கு நடிப்போம்னு ப்ளான் போட்டு என்னுடைய நாடகத்தை தொடர்ந்து நடித்தைப் பார்த்து, என்னுடைய அப்பா அம்மாவும் நான் பழைய மாதிரியே மாறிட்டேனு நம்பிட்டாங்க.
நான் காத்திருந்த எனக்கான நேரம் வந்ததும் வீட்டை விட்டு ஓடி வெளியே வந்துட்டேன்.யாருடைய கண்ணுக்கும் படாத இடத்துக்கு போயிரனும் நினைச்சு என்னை மாதிரியே பிறந்து பெற்றோர் ஆதரவு இல்லாதவுங்கள பற்றிய தகவலை எல்லாம் விசாரிச்சு அவுங்களோட சேர்ந்து என்னுடைய வாழ்க்கையை நான் வாழ ஆரம்பிச்சேன்ம்மா.
யாருடைய தொந்தரவும் இல்லாம நிம்மதியா வாழ்க்கை போய்க்கிட்டு இருந்தது.நான் வெளியே வந்த இரண்டு வருஷத்து பிறகு மீண்டும் என்னைத் தேடி என்னுடைய அப்பா அம்மா கூப்பிட வந்தாங்க.நல்லவுங்க மாதிரி நடிச்சு கூட்டிட்டுப் போய் என்னை கொலை செய்ய பார்த்தாங்க.
"நான் தான் இனி இங்க வரமாட்டேனு சொல்லிட்டேனே… என்னை ஏன் இப்படி அடச்சு வச்சு சித்தரவாதை பண்ணுறீங்க?"
"நாங்க சொல்லுற படி நடந்தா, நீ சந்தோஷமா உயிரோட வாழலாம். இல்லைனா பெத்த பிள்ளைனு கூட பார்க்காம சோத்துல விஷம் வச்சு கொன்றுவோம்னு சொன்னாங்க."
"நம்ம ஜாதி ஜனம் எல்லாம் எங்கள பார்த்து கேவலமா பேசுறாங்க… எல்லாத்துக்கும் காரணம் நீதானு ஓங்கி பளார்னு என்னுடைய கண்ணுத்துல அறைஞ்சுட்டாங்கம்மா…" என்று கதறி அழுகத் தொடங்கிவிட்டாள் கார்த்திகா.
"மறுபடியும் முட்டி மோதி பிழைச்சு ஓடி வந்துட்டேன்ம்மா. நாங்க இப்படி பிறந்ததுக்கு நாங்க எப்படிம்மா பொறுப்பாக முடியும். இந்த சமுதாயத்துல எத்தனை பேரு என்னை மாதிரி பெத்தவுங்க ஆதரவு இல்லாம தனியா கஷ்டப்படறாங்க தெரியுமாம்மா… எங்கள மாதிரி அவதாரம் எடுத்த கடவுளை மட்டும் வழிபடும் மக்களுக்கு, நாங்க மட்டும் தீண்டத்தகாத மனுஷங்களா தெரியுறதுக்கு காரணம் என்னம்மா? இனிமேல் இப்படி ஒவ்வொரு நாளும் உசுருக்கு பயந்து என்னால ஓட முடியாதும்மா…
போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறேன்ம்மா.
என்னை மாதிரி பிறந்து தனியா கஷ்டப்படறவுங்களுக்கு சிறந்த வழிகாட்டியா இருந்து என்னுடைய மக்களுக்காக நான் உரிமை கேட்டு போராடப் போறேன் என்று கூறினாள்.
கார்த்திகாவின் கதையைக் கேட்டு மனம் உருக்குலைந்த அந்தப் பெண், கார்த்திகாவை வேகமாக கட்டியணைத்து "நானும் உன்னைப் போல ஆதரவற்ற திருநங்கை தான் கார்த்திகா" என்றார். "வா கார்த்திகா! இந்த சமுதாயம் நம்மைப் பார்க்கும் பார்வையை மாற்றுவோம்.நமக்கும் உணர்வுகள், ஆச பாசங்கள் இலட்சியங்கள் உண்டு என்பதை சேர்ந்தே வாழ்ந்து காட்டுவோம் என்றார்.
Good luck.
Thank you sir
Super 💓🎉
All the best 💕 dear
Thank you dear🙏
Thank you🙏
Well done TR for the story.Fabulous message to the society. Keep on rocking! We needs to provide proper respect to them in all the places.
Thank you petchi🙏🙏🙏
Thank you🙏
Nice
Thank you🙏
Superb raj…touching story…
Thank you🙏🙏
Thank you🙏
Nice story ka…neegha melum valara valthukakal..congratsss..
Thank you dear
Thank you ma🙏
Nice ma good story
மிக்கநன்றி🙏🙏🙏
அருமை dear 👌👌 வாழ்த்துக்கள்!!
மிக்க நன்றி🙏
அருமையாக இருந்தது.
திருநங்கையாக பிறவி எடுப்பது நாம் எடுக்கும் முடிவல்ல, அது இறைவனின் கட்டளை. அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்னும் யாரும் பக்குவமடைய வில்லை.
பல இடங்களில் பெற்றவர் அடித்து உதைத்தாலும் தாயாவது அவனுக்காக பேசுவார் என்று கேள்விபட்டிருக்கிறேன். இங்கு ??
மிக்க நன்றி🙏🙏🙏
Amazing 👌 No words to say 🙏👌
மிக்க நன்றி🙏🙏🙏
மிகவும் கருத்துப் பொதிந்த அற்புதப் பதிவும்மா
மிக்க நன்றி🙏🙏🙏
அருமையான கதைக்களம் தோழி. வீட்டிலும் , சமூகத்திலும் திருநங்கைகள் சந்திக்கும் அவலங்களையும் கஷ்டங்களையும் அழகாக எழுத்துக்களில் வெளிப்படுத்தி உள்ளீர்கள். இது போன்ற விழிப்புணர்வு முன்னெடுப்புகள் நம் இனிவரும் காலங்களில் திருநங்கைகள் பற்றிய புரிந்துணர்வுக்கு வழிவகுக்கும் என நம்புகிறேன்.
மிக்க நன்றி🙏🙏🙏
கதைக்களம் மிக சிறப்பு
மிக்க நன்றி🙏🙏🙏
Extraordinary story.. congratulations di
மிக்க நன்றி🙏🙏🙏
மிக்க நன்றி🙏🙏🙏
Superb Story ma
மிக்க நன்றி🙏🙏🙏
அருமையான திரைக்கதை
மிக மிக அருமை ராஜி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👏👏👏
மிக்க நன்றி🙏🙏🙏
திருநங்கைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அழகாக எடுத்தியம்பி உள்ளீர்கள். அழகான கதை. வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துகள் டா.
மிக்க நன்றி🙏🙏🙏
அருமையான கதை..👏🏻👏🏻
மிக்க நன்றி🙏
மிக நேர்த்தியாக சொல்லி உள்ளீர்கள்.இது பலரது பிரச்சினை.இது ஒரு விழிப்புணர்வு கதை.பாராட்டுக்கள்
மிக்க நன்றி சார்🙏🙏🙏
அருமையான கதைக் கரு. நெகிழ்ச்சி உண்டாக்கிய பதிவு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மிக்க நன்றிம்மா🙏🙏🙏