16 Feb 2022 10:02 pmFeatured
தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-71
படைப்பாளர் - ச.ஐஸ்வர்யா
பூவுலகம் இந்த உலகத்திற்கு வெளிச்சம் காட்டும் நேரத்தில் மலர்கள் மலரும் நேரத்தில் சாலையில் பனித்துளிகளோடு துளிர்த்திருக்கும் நேரத்தில் தாத்தா தன் சைக்கிளில் வந்து பெடிக்கடையை திறந்தனர்.அந்தப் பெட்டிக்கடைக்குப் பக்கத்தில் ஒரு அழகான மிகப்பெரிய ஒரு குளம்.அந்த ஊர் நீர் நிறைந்த ஒரு அழகான ஊர்.அந்த ஊரின் பெயர் கூலூர்.
அந்த ஊரின் மிகப்பெரிய குளத்தில் தாமரை மல்லி மற்றும் பல மலர்களும் விரிந்திருக்கும்.அந்தக் குளத்தில் மீன்களெல்லாம் தாமரை இதழ்களில் துள்ளியாடும்.அது ஒரு அழகிய காலைப்பொழுது.இந்தக் காட்சிகளை தாத்தா தன் நாளிதழ் படித்துக்கொண்டே படித்தும் இரசித்தவாறும்இருப்பார். இல்லாவிட்டால் அந்த நாளே கடக்காது.ஏதோ ஒன்றை இழந்தது போல் உணர்வார்.
அந்த நாளிதழ் படித்த பிறகு சந்தோஷமும் துக்கமுமாக இருப்பார்.அவரின் ஒரே பெண்தான் வதனி.இவரின் வளர்ப்பு தனிரகம்.ஊர்மக்களோடு ஒன்றி உறவாட விட்டதில்லை.பன்னிரண்டாம் வகுப்ப வரையில் இப்படியே காலம் ஓடுகிறது.கண்டிப்பிற்கு பஞ்சமே இல்லை.வதனியின் மனதில் எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டே இருக்கும்.வெறுப்புதான் அந்த எண்ண ஓட்டம்
படித்த பிறகு ,வதனி ஐந்து வருடங்களாக வீட்டிலேயேதான் உள்ளாள்.பிறகு பெண்பார்க்கும் படலம் நடைபெறுகிறது.மாப்பிள்ளை வீட்டாரின் கோரிக்கை என்னவென்றால் நன்கு கலந்து பேசும் பெண் தான் பார்க்கனும் என்பது.மாப்பிள்ளை இலாஷ் , கப்பல்துறையில் பணிபுரிபவர். அவரின் பணியானது ஆறு மாதம் கடலில் பிறகுதான் வீட்டிற்கு வர இயலும். எனவே தனிமை சாத்தியமா என்று கேள்வி கேட்கும் மாப்பிள்ளை வீட்டார்
எப்படியோ திருமணம் நடைபெற்றது. இலாஷிற்கு ஒரு வருடத்திற்கு பிறகுதான் தெரியும் வதனிக்கு கடைக்குப் போவதை தவிர்த்து இதர வேலைகள் ஒன்றும் தெரியாதென்று.கணவனோ அவளை புரிந்துகொண்டு எல்லா இடங்களுக்கும் கூட்டிச் சென்று எல்லா வேலைகளையும் கற்றுக்கொடுத்தார்
ஆறு மாத பணிக்கு செல்கிறார். ஆறு மாத பணிமுடித்து வீடு திரும்ப இருக்கையில் வதனி கருவுற்றிருக்கிறாள்.அதை உலகத்திலேயே கிடைத்த சிறந்த பரிசாக உணர்கிறாள்
குழந்தை பூமியில் கால் பதிக்கும் தருணம் வந்தது. வதனியின் எண்ணமோ இந்த நேரத்தில் இலேஷ் நம்முடன் வெகு நாள் இருக்க முடியாதே என்ற எண்ணம் ஊடுருவியது. ஒரு நாள் இரவில் வதனிக்கு குழந்தை பிறக்கிறது. குழந்தையை இலேஷ் கையில் கொடுக்கப்படுகிறது. அத்துடன் சோக செய்தி என்னவென்றால் வதனி படுக்கையிலேயே இறந்துவிட்டாள்.அந்தக் குழந்தை என்பது தெரிகிறது .மகிழ்ச்சியடைய முடியவில்லை ,அழகாய் இருக்கிறது கொஞ்ச முடியவில்லை.. அதற்குள் வதனி இப்படியா ..நடக்கவேண்டும் ….அறை முழுவதும் சோகத்தை விட அதிர்ச்சி தான் நிரம்பியது
இன்று கொண்டாடுவதா அழுவதா என்று.குழம்புவதற்கும் கூட நேரமில்லை.இலேஷின் சூழ்நிலை கொடூரமானது..இந்தச் சூழலில் இலேஷால் முடிவெடுக்க முடியவில்லை. இலேஷால் பணி செய்ய இயலவில்லை.வாழ்க்கை கேள்விக்குறியாக மாறுகிறது.அந்தப் பிஞ்சுக் குழந்தையை யார் வளர்ப்பதென்று?. வதனியின் பெற்றோர் நாங்களே வளர்த்துக் கொள்கிறோம் இல்லையெனின் காப்பகத்தில் விடுங்கள் என்றனர்.ஆனால் இலாஷோ உறுதியான மனதோடு என் குழந்தையை நானே வளர்க்கிறேன்.அது என் கடமை என்கிறார்
நகரத்திற்கு நகர்கின்றனர்.ஊரிலிருந்தால் இன்னொரு திருமணம் செய்வார்கள் என்று யூகித்துக்கெண்டு இலாஷ் சென்றுவிட்டார்.இலாஷ் தன் குழந்தை பெரியாளாகும் வரை தன் பணியைத் தியாகம் செய்துவிட்டார்.அந்த பெரியாளான குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?..மௌலா..
நகரமக்களின் கேள்விகளுக்கும் பஞ்சமே இல்லை..இந்தக் குழந்தை யின் அம்மா எங்கே என்பது போன்று கேட்டனர். தாய் இங்கு ஏன் வரவில்லை என்றும் கேட்டனர்.ஒரு சந்தேகப் பார்வையும் இருந்தது. மௌவலா வளரும் வரையிலும் அந்தச் சந்தேகம் இருந்தது.
ஐந்து வயதான மௌலா இலாஷிடம் தன் தாய் எங்கே என கேட்கிறாள்.ஊரில் உள்ளார் ,வெளிநாட்டில் உள்ளார் என்றெலாம் சமாளித்தார்..தான் போகுமிடமெல்லாம் மௌலாவை தன்னுடனே கூட்டிப் போவார்.பள்ளியில் சேரும் தருணம் வருகிறது..மௌலாவின் அப்பாதான் எல்லா வேலைகளையும் செய்கிறார்.இருப்பினும் அவளுக்கு தாயின் ஏக்கம் இருந்தது.அது அவள் அப்பாவிற்குத் தெரகயவில்லை.கடிதம் எழுதும் பழக்கம் இவர்கள் இருவருக்கும் உண்டு
நேரிலும் கூட பல நேரம் இவர்கள் கலந்துரையாடுவர்.ஒரு முறை இருவரும் கடிதம் எழுதுகின்றனர். அதன் மூலமாகத்தான் மௌலாவின் ஏக்கம் இலாஷிற்கு தெரியவருகிறது.மௌவலாவின் பழக்கம் அறிவார்ந்த கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பதுதான்.பலவற்றையும் கற்றுக்கொள்ள ஆசைப்படுவாள்.அதற்கு காரணம்,எல்லா இடங்களுக்கும்இலாஷ் கூட்டிப்போவதுதான்
உதவியிலும் தலைச்சிறந்தவள் மௌலா.எந்த உயிர்க்கும் தீங்கு விளைவிக்கமாட்டாள்.இலாஷ் மௌலாவிடம் எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக பகிர்வார்.மௌலாவும் அப்படித்தான்.மௌலாவிடமீ ஒரேயொரு கேள்வி மட்டும் நெடுநாளாய் மனதை வருடிக்கொண்டே இருந்தது
படிப்பெல்லாம் முடித்த பிறகு இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.அப்பாவின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்கும் தன்மையும் மௌலாவிடம் உள்ளது.தோழி ஒருவள் இருக்கிறாள் .நேளியும் மௌலாவும் நெடுநாள் தோழிகள்.மௌலாவும் நேளியும் சிறுவயதிலிருந்தே ஒன்றாய் படிப்பவர்கள். இருவருக்கும் இவர்கள் இருவர்தான் பலம். பள்ளியில் நேளி இருந்தாலும் தன் வீட்டருகே என்ன நட்பு வட்டாரமும் மௌலாவிடம் உள்ளது.அதற்கு காரணமும் இலாஷின் வளர்ப்புதான்
பக்கத்து வீட்டாரிடம் தானே சென்று பேசுவாள்.ஆனால் அங்கே இவளுக்கு பெண் தோழிகள் இல்லை.ஆண் நண்பர்களோடு பழகும் வாய்ப்பு தான் இருந்தது.அதற்கும் இலாஷ் அறிவுரை வழங்கினார்.ஆண் பெண் பாலின பாகுபாடு இருத்தல்கூடாது என்பது அவர் கருத்து.கொஞ்சம் கொஞ்சமாய் பேச ஆரம்பித்தனர்.
அவர்கள் பெயர் குகில் மற்றும் நகிஷ்.இவளது பள்ளியில் இராணுவ பயிற்சி தொடர்பான முகாம் துவங்கப்பட்டது. மௌலாவிற்குத்தான் பலவற்றையும் கற்றுக்கொள்ள ஆர்வம் இருந்ததே. அதனால்தான் என்னவோ இராணுவத்திலும் ஆசை.தன் கடிதத்தில் இலாஷிடம் இதனை குறிப்பிடுகிறாள்.
பிறகு ஒரு நாள் தாத்தா பாட்டி இவளை பார்க்க வருகின்றனர்.மெல்ல அவர்களிடம் மெல்ல மனம் திறக்கிறாள்.அவர்களுக்கோ மனதில் ஒரு பயம்.ஆனால் இலாஷிற்கு பெருமகிழ்வு.நாம் நம்பிக்கையாக இவளை அனுப்ப வேண்டும் என்ற ஆசை
ஆனால் இலாஷக்கும் தாத்தா பாட்டிக்கும் வாக்குவாதம்.ஆனால் பிடிவாத குணமும் மௌலாவிடம் உள்ளது.மௌலாவின் தாத்தாவிற்கு சற்றும் விருப்பமில்லை.ஊர் என்ன பேசும் பெண் பிள்ளைக்கு எதற்கு இதெல்லாம் போன்ற அதே வசனங்கள் தான் அடுக்கடுக்காய் அவளின் மேல் தொடுக்கப்பட்டன.
மௌலாவிற்கு காடுகளுக்குள் பயணம் செய்யும் ஆசை ஒரு பக்கமும் இருந்தது. மௌலாவின் தந்தை நீ இதில் சாதித்து வந்து இவர்களின் வாயை அடைக்க வேண்டும் என்று ஊக்குவித்தார். அதற்கு ஏற்றார் போல் தாத்தா வழக்கம் போல் நாளிதழ் படிக்கிறார்.அதில் மௌலா இளம்பெண் இராணுவ விருதை பெற்றதாக செய்தி இடம்பெறுகிறது.வாயடைத்துத்தான் போயினர் உண்மையில்…. இலாஷிற் வானத்திற்கும் பூமிக்குமாய் குதிப்பார். இப்போது படித்தும் முடித்து சாதித்தும் விட்டாள்.இப்போது அவள் மனதிலிருந்த கேள்வியைக் கேட்கலாம் என நினைத்தாள்.இலாஷிடம் இந்த ஊர்மக்கள் தவறாய் யூகிப்பதெல்லாம் இருக்கட்டும்.ஆனால் நீங்கள் ஒரு அம்மாவைப் போல் என்னை பார்த்து வளர்த்துள்ளீர்கள் ,இந்த ஊராரின் ஐயப்பாடுகளுக்கு ஏன் அஞ்ச வேண்டும் ? என்று கேள்வியின் உள்ளேயே பதிலையும் கூறிவிட்டாள் மௌலா.