16 Feb 2022 11:51 pmFeatured
தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-73
படைப்பாளர் - முத்துசெல்வி செ மு
அப்புவுக்கு கடல் அப்டின்னா ரொம்ப புடிக்குமாம். வாரவாரம் ஞாயிற்று கிழமை, பள்ளி விடுமுறை நாட்களில் தனது அப்பாவுடன் சேர்ந்து கடற்கரைக்கு செல்வானாம். அங்க போயிட்டு கடல் தண்ணில கால நெனச்சு நெனச்சு விளையாடுவானாம் அப்டியே கடல் காற்றை சிறிது நேரம் உட்கார்ந்து ரசித்தல், அருகிலிருக்கும் கடையிலிருந்து மக்காசோளம் வாங்கி சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் கடற்கரை மணலில் அப்பாவுடன் நடந்து சிறிது பேசிவிட்டு அந்த இடத்திலிருந்து சென்று விடுவானாம்.இப்படித்தான் அப்புவின் ஞாயிற்று கிழமை விடுமுறை, மற்ற பள்ளி விடுமுறை நாட்கள் கழியுமாம்.
காலாண்டு விடுமுறை நாட்களில் அப்புவின் வீட்டிற்கு குட்டி தனது விடுமுறையை கழிக்க வந்திருந்தானாம். வழக்கம் போல கடற்கரைக்கு போனாங்கலாம். குட்டிக்கு போர் அடிச்சிருச்சாம்.அடுத்த நாள் காலைல அப்பு குட்டிய வா கடற்கரைக்கு போகலாம் அப்டின்னு கூப்டானாம். நா வரலடா அப்டின்னாம். இல்லடா வா இன்னைக்கு நம்ம கேமரா எடுத்துட்டு போய் நிறைய போட்டோக்கள் எடுக்கலாம் நிறையா பறவைகள் அங்க இருக்கும் பார்க்கலாம் அப்டின்னு கூப்டானாம் அப்பு. குட்டியும் சரிடா வரேன்னு சொல்லிட்டு கிளம்பி போனாங்களாம். கடல் பக்கத்துல ஒரு ஏரி இருந்துச்சாம். அங்க போகலாமானு குட்டி அப்புகிட்ட கேட்டனாம். போகலாமே... அப்டின்னு போனாங்களாம்.
அந்த ஏரி பக்கத்துல நிறைய குட்டி குட்டி ஊரு இருந்துச்சாம். குட்டிக்கு ஒரே சந்தேகம்??எப்படி கடல், ஏரி பக்கத்துல பக்கத்துல வீடு இருக்கும்?புயல், பெரிய மழை வர நேரத்துல எப்டி சமாளிக்க முடியும்? எப்டி இங்க இருக்க முடியும்? டேய் அப்பு உனக்கு தெரியுமாடா என்று குட்டி கேட்டானாம்.என்னடா இத்தன கேள்வி கேக்குற வா.. நம்ம அவுங்கட்டயே போய் கேக்கலாம்.
அப்புவும் குட்டியும் கேக்க போறாங்க உங்களுக்கும் தெரிஞ்சிக்க விருப்பமா? போங்க போய் கடற்கரையோரம் வாழும் மக்களுடைய வாழ்வியலை பற்றி தெரிஞ்சிக்கோங்க.. மஜாவா இருக்கும்.
"ரோஜாப்பூ ரவிக்கை போட்டு
ரோஜாப்பூ ரவிக்கை போட்டு
கட்டுமரத்துல போனாராம்,
கட்டுமரத்துல போனாராம்.... "
அப்டின்னு பாட்டு சத்தம் கேட்டுச்சாம். யாருன்னு அப்புவும் குட்டியும் பாத்தாங்களாம். அந்த பாட்டு பாடுனது ஒரு பாட்டி. அந்த பாட்டி பக்கத்துல போய் உட்காந்தாங்களாம். பாட்டியும் பேச ஆரம்பிச்சிட்டாங்க. குட்டி அந்த வீட்டு வாசப்படிய பாத்துட்டே இருந்தனாம் அப்டியே பக்கத்துல உள்ள வீட்ட எல்லாம் பாத்துட்டே இருந்தானாம்.. பாட்டி கேட்டாங்களாம் என்ன தம்பி பாக்குற.. இல்ல பாட்டி ஏன் எல்லாரு வீட்டு முன்னாடியும் மஞ்சள் கலர் மாதிரி இருக்கு அது என்னது அப்றம் அதுமேல கோலம் போட்ருக்காங்க. பட்டணத்து குழந்தைக்கு இது எப்டி தெரியப்போகுது..? அதுவா நாங்க இங்க உள்ள எல்லாரும் வீட்டு முன்னாடி சாணி மொழுகுவோம்,. நீ போய் பார்த்தா தெரியும் ஒரு வீடு விடாம எல்லாரு வீட்டு முன்னாடியும் சாணி மொலிகிருப்பாங்க. நாங்க அந்த காலத்துல இருந்து அப்டித்தான்.
மக்களே..வீட்டு முன்னாடி ஏன் சாணி மொழுகுராங்கன்னு நம் வருங்கால சந்ததிகளுக்கு அறிவியம் ரீதியாக சொல்லி கொடுப்போமா?
அப்டியே ரெண்டு பேரும் நடந்து போனாங்களாம். அங்கு நிறைய குழந்தைங்க விளையாண்டுட்டு இருந்தாங்க. இவுங்க ரெண்டு பேரும் அவுங்க பக்கத்துல போய் நிண்டாங்களாம்.அந்த குழந்தைகள்ள ஒரு சிறுவன் கேட்டானாம் என்ன தல பீச் க்கு வந்தீங்களா? குட்டியும் அப்புவும் ம்ம்ம் ன்னு சொன்னாங்களாம். நீங்க விளையாடுற விளையாட்டு என்னது? எப்டி விளையாடணும்? எங்களுக்கும் சொல்லி தறீங்களா என்று கேட்டார்களாம்.
ஒரே கலகல சிரிப்பு சத்தம். இங்க பாரு தல இது பேரு கோலிக்குண்டு. இந்த விளையாட்டு பேரு கோலிக்குண்டு விளையாட்டு இங்க நாங்க எப்போதுமே இதத்தான் விளையாடிட்டே இருப்போம். எங்க அப்பா சீட்டு கட்டு, அம் மாங்க பள்ளாங்குழி, விளையாடுவாங்க. கடலுக்கு போகிற நேரம் தவிர மீதி எல்லா நேரமும் அவுங்களுக்கு இதான் பொழுதுபோக்கு. சாப்டுவாங்க கடலு பக்கத்துல உட்கார்ந்துட்டு கத பேசிக்கிட்டே வலையா பின்னிக்கிட்டு ஜாலியா இருப்பாங்க. அப்றம் இங்க இருக்குற எல்லா கடையிலையும் கோலிக்குண்டு விக்கும்.வெயிலு மழை எது வந்தாலும் இப்படித்தான். கோலிக்குண்ட நல்லா உன்னிப்பா கவனிச்சு குறி பாத்து அடிச்சா போதும் ஆட்ட முடிஞ்சது... இந்தா நீங்க ஒரு ஆட்டத்த போடுறீங்களா? அப்புவும் குட்டியும் ஓ ஓ போற்றலாமே
நீங்க கோலிக்குண்டு விளையாண்டு இருக்கீங்களா? நம்மளும் விளையாண்டு பாக்கலாமா? அப்டி என்னதான் இருக்குன்னு. விளையாண்டுட்டு விளையாட்டு பத்தி நம்ம அனுபவத்த பகிர்ந்துத்துக்கலாமா?
அப்புக்கும் குட்டிக்கும் ஒரே சந்தோசம். ஜாலியா இருக்குடா அப்டின்னு குட்டி சொன்னானாம். ஆமாடா எனக்கும் ஜாலியா தான் இருக்கு ஆனா time பாருடா 12 மணி லஞ்ச் time எனக்கு பசிக்குதுடா அப்டின்னு அப்பு சொன்னானாம். ஆமால்ல time போனதே தெரியல. அப்டியே அந்த தெருவுல இருந்து ஒரு சத்தம் "என்ன தம்பிங்களா இங்க வாங்க,
மீன் குழம்பு சாப்பிடுவீங்களா " சாப்பிடுவோம் aunty.. அப்டியா அப்போ ரெண்டு பேரும் இங்க வாங்க சாப்டுட்டு போங்கன்னு கூப்பிட்டாங்களாம். அப்புவும் குட்டியும் வாடா சாப்பிட போகலாம் ன்னு போய்ட்டாங்க. ரெண்டு பேருக்கும் தனித்தனி தட்டுல சாப்பாடு போட்டு மீன் குழம்பு பொரிச்ச மீன் வச்சாங்களாம். செம்ம சாப்பாடு aunty.. இது என்ன மீன் aunty? அப்டின்னு குட்டி கேட்டனாம். இதுவா நெத்திலி மீன். சூப்பரா இருக்கு. எங்க வீட்ல sunday மட்டும் மீன் மார்க்கெட்ல போய் மீன் வாங்கிட்டு வந்து சமைப்பாங்க அதுவும் இந்த அளவுக்கு இருக்காது. அப்டித்தான் தம்பி எங்களுக்கு பக்கத்துல கடல் இருக்குல்ல எங்க வீட்ல கடலுக்கு போவாக.. மீன் பிடிப்பாங்க அதுதான் எங்களுக்கு வருமானம் தம்பி.. அப்றம் இந்த மாதிரி குட்டி மீனாலாம் பக்கத்துல எரில பிடிச்சுட்டு வருவாங்க. எங்களுக்கு மீன் இல்லாம சாப்பிடவே முடியாது தம்பி.ஒவ்வொரு மீன்லயும் என்ன சத்து இருக்குன்னு அத்துப்படி தம்பி எங்களுக்கு.
அப்புவுக்கும் குட்டிக்கும் மதிய சாப்பாடுக்கு மீன் குழம்பு கிடைச்சிருச்சு. வாங்க நம்மளும் அங்க போய் என்னதா அந்த taste னு சாப்டு தெரிஞ்சிக்கலாம். அப்டியே நம்ம சாப்பிடுற மீன்ல என்ன சத்து இருக்குன்னு கேட்டு தெரிஞ்சி கிடலாமா?
சரி வாடா அப்டியே கடல்ல போய் கால நெனச்சிட்டு கிளம்புவோம் அப்டின்னு அப்பு சொன்னானாம் அப்பு. அங்க ஒரே பெண் குழந்தைங்க சத்தம். கடல் “ அலைகூட என்ன தொடுங்க பாப்போம் என்ன தொடுங்க பாப்போம் னு ” விளையாண்டுட்டு இருந்தாங்களாம். இவுங்க ரெண்டு பேரும் பக்கத்துல போனாங்களாம். அந்த குழந்தைங்க இவுங்க ரெண்டு பேரையும் விளையாட்டுக்கு சேர்த்து ஜாலியா விளையாண்டாங்களாம். எல்லாரும் நல்லா பிரிண்ட்ஸ் ஆகிட்டாங்கலம். உங்களுக்கு பயமே இல்லையா அப்டின்னு கேட்க .. பயமா? நாங்க இங்கதான் விளையாடுவோம். சங்கு பொறுக்குவோம். இந்தா இந்த சங்கு சிற்பிய எங்க ஞாபகமா வச்சுக்கோங்க அப்டின்னு கையில குடுத்தாங்களாம்.
செம்ம ஜாலியா இருக்குடா.எப்டி இவுங்க எல்லாரும் இவ்ளோ தைரியமா இருக்கிறாங்க? எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம இருக்காங்க டா??
ஒரு வழியா ரெண்டு பேரும் அப்பாகிட்ட போய்ட்டாங்க.அப்புவோட அப்பா கேட்டாங்கலாம் ரெண்டு பேரும் எங்க போனீங்க இவ்ளோ நேரம்? சாப்டாம கூட அவ்ளோ நேரம்? சரி வாங்க சாப்பிடுவோம் அப்டின்னு சொல்ல.. ரெண்டு பேரும் சேந்து ஹஹஹஹ நாங்க நெத்திலி மீன் சாப்டோமே நெத்திலி மீன் சாப்டோமே.. அப்டினாங்கலாம்.
அப்பா டேய்ய்..
சரி கேமரா காமிங்க இவ்ளோ நேரம் என்ன photos எடுத்தீங்கன்னு பாக்கலாம்.
ஹாஹாஹ் அதுல ஒண்ணுமே இருக்காதே, ஒண்ணுமே இருக்காதே..
அப்பா டேய்ய்..
இதோ கையில பாருங்க இதோ கையில பாருங்க அப்டின்னாங்கலாம் சேந்து..
டேய்ய் வாங்க வாங்க ஏதோ பெருசா நடந்துருக்கு போலே.என்னதான் நடந்துச்சு சொல்லுங்க.
வாங்க அப்பவுக்கும் குட்டிக்கும் நடந்த அனுபவத்த அவுங்க அப்பாகிட்ட சொல்லுவோம். சொல்லலாமா?
அப்புவின் அப்பா :
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். பல வருஷங்களா இங்க கடற்கரைக்கு வந்துட்டு இருக்கோம். இப்டி ஒரு அனுபவம் எனக்கும் கிடைச்சது இல்ல என்னோட குழந்தை அப்புவுக்கும் நான் பழக்க படுத்துனது இல்ல.அவுங்களோட அனுபவத்த கேட்டதுக்கும் அப்றம் இனிமே குழந்தைங்கள அவுங்களோட இயல்புல விடணும் அப்டின்னு முடிவு பண்ணிட்டேங்க. என்ன சொல்லறீங்க நீங்க?
அப்பறோம் நாம நம்ம குழந்தைகள நிறைய எளிய மக்களோட வாழ்வியல், அவுங்களோட தொழில் முறை இதெல்லாம் பத்தி தெரிஞ்சிக்க பழக்க படுத்தணும். இதுதான் சிறந்த கல்வின்னு நா நெனைக்கிறேன். நீங்க என்ன சொல்லறீங்க??
இன்னொரு முக்கியமான விஷயம்ங்க. நா அவுங்ககிட்ட அனுபவத்த மட்டும்ந்தான் கேட்டேன். மேலே இருக்குற கேள்விகளுக்கு பதில் அவுங்க சொல்லல. தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கேன். வாங்க நம்ம எல்லோரும் சேர்ந்து அதற்கான விடையை கண்டுபிடிப்போம். பயணத்தை தொடர்வோமா!!
காட்சி வடிவம் அருமை. இன்னும் கூடுதலான குழந்தமை எழுத்துநடை தேவை. மெருக்கேற்றலாம். மூத்தவர்கள் சிறார் இலக்கிய நூல்கள் தேடி வாசிக்கலாம். அருமையான கதை நோக்கம். குழந்தைகளை குழந்தைகளாக வளர விடுவதே சிறந்த கல்வி…
முத்துச்செல்வி…. உங்கள் எழுத்து நடை தனித்து நிற்கிறது. குழந்தைகளின் வாசிப்பிற்கு ஏற்றது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
ரொம்பவே அழகா இருக்கு… வகுப்பு கல்வி மட்டுமல்லாமல் வாழ்வியல் கல்வியும் இனிதே…❤️ பயணம் தொடரட்டும்… வாழ்த்துக்கள்✨
அருமையான கதை….
வாழ்வியல் தொகுப்பு…
ந
எவரின் சாயல் இல்லாத மாறுபட்ட எழுத்து நடை.
உங்களால் இக்கதையை இரசிக்க முடியும் எனில், உங்களுக்குள் இருக்கும் குழந்தமையை இழக்காதவர் நீங்கள் என்பேன்.
அருமையான பதிவு தோழி… எளிய முறையில் வாழ்க்கையின் தத்துவத்தையும் ,குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்றும்…இயற்கையிடமும்,சுற்றி உள்ள அனைத்து விஷயங்களில் இருந்து பலவற்றை கற்று கொள்ள முடியும் என்றும் கதையின் வாயிலாக சுருக்கமாக கூறி விட்டாய்…இது போன்ற கதைகளை குழந்தைகள் படிக்கும் போது எண்ணங்கள் மாறும்…வளர்ச்சி பெறுவார்கள்…தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்….
👌🏻 super
Superma keep it up
Super akka
வாழ்்துக்களுக்கு
Supper
Super
super
❤️
Very interesting
நல்ல பதிவு ,இக்காலத்தில் தேவையான பழக்கம்
மனித வாழ்வியலை எடுத்துரைக்கும் கல்வியே சிறந்தது என்பதை கதைகள் மூலம் கொண்டு செல்ல நினைக்கும் உங்களின் முயற்சிக்கு தலைவணங்குகிறேன் தோழி….மீனவர்களின் குடிசைக்கு போக வேண்டும் அங்கு கமகமக்கும் மீன் குழம்பை ஒருபிடி பிடிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கும் எழுந்துள்ளது. வாழ்க வளமுடன்.
சிறு வயதில் இருந்து அவர்கள் பார்ப்பதும். கேட்பதும் தான் அவர்கள் பழகும் பழக்கத்தை வைத்து நடைமுறை படுத்துவார்கள். சாமானிய மக்களுடன் சாதாரணமாக பழக இவை போன்ற நிகழ்வுகள் நடந்தால் நம் மனம் மாற்றம் அடையும், இது போன்ற நிகழ்வுகள் குழந்தை செல்வங்களுக்கு நிகழவேண்டு, அதில் நானும் ஒரு குழந்தையாக இருக்க வேண்டும், இயற்க்கையின் காற்றுடன் கமகமக்கும் மீன்குழம்பையும், என் அன்பு நண்பர்களுடன் மனம்விட்டு உரையாட வேண்டும் என்று என் அடி மனதில் தோன்றுகிறது….