17 Feb 2022 12:36 amFeatured
தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-75
படைப்பாளர் - முனைவர் த.சுமதி முருக செல்வன், மதுரை
மார்கழி மாதம் பனிப் பொழியும் இரவு நேரம்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள,தெற்குப் புத்தளத்துக் கிராமத்து இளைஞர்கள் காலையில் போட்டத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கினார்கள்.
"இண்ணைக்கு இவனுவளுக்கு நம்ம யாருன்னு கண்டிப்பாக் காட்டணும்" என்றான் சுஜித்.
இப்பொழுது நண்பர்கள் நால்வரும் கார்த்தி வீட்டுத் தென்னந்தோப்புக்குள் சத்தமில்லாமல் மெதுவாகக் குதித்தனர்.
நண்பர்கள் நால்வரும் குதித்த வேகத்தில் தலையைக் குனிந்து கொண்டு சீனி வெடி, தீப்பெட்டியைத் தயாராக வைத்துக் கொண்டார்கள்.
தூரத்தில் இந்து காரர்களின் பஜனை வருவது தெரிந்தது.சிறிது நேரத்தில்
பஜனை குழு கோரசாக சத்தம் போட்டு "எங்கள் தாயே முத்தாரம்...மா, மூன்று முகம் கொண்டவ...ளே, உன் புகழைப் பா...ட நாங்கள் ஓ...டி வந்தோம் அம்மா..." என்று பாடவும்;
ஐசக் "புகழ பாட ஓடி வாரனுவளாம். இவனுவள இப்போ நம்ம ஒரேயடியா ஓட விடுரோம் பாரு" என்று சொல்லும்போதே,
பஜனை குழு "திக்கனைத்தும் கா...த்து நிற்கும் தேவி முத்தாரம்...மா" என்று அடுத்த வரியைப் பாடினார்கள்.
பாடல் வரியைக் கேட்ட டேவிட் "லேய்... திக்கெல்லாம் அவுனுவ முத்தாரம்ம தான் காப்பாத்துவாம்" என்றான்.
"அப்புடின்னா என்ன...ல எனக்குப் புரியும் படியாச் சொல்லு...?"என்றான் ஜேக்கப்.
"லேய் மக்கா ஒலக முழுவதையும் அவுனுவ முத்தாரம்ம தான் காப்பாத்துவாம். நம்ம ஏசப்பா எல்லாம் ஒண்ணுமே இல்லன்னு பாடானுவ கேட்டியா...!"என்று சொல்லும் போதே பஜனை குழு இவர்கள் அருகில் வர நால்வரும் ஒன்று போல சீனி வெடியைக் கொளுத்தி தலையைக் குனிந்து கொண்டு கையை மட்டும் நீட்டி எறிந்தார்கள்.
வெடிகள் பஜனை குழுவினரின் தலை மற்றும் கையில் விழுந்து 'பட்டு பட்டு'என்று வெடித்தது.
பஜனை குழு ஏதோ நம் மீது விழுந்து வெடிக்கிறதே என்று ஓட்டம் பிடித்தவர்கள், தெற்குப் புத்தளம் தெருவைக் கடந்து பெத்தபெருமாள் குடியிருப்புச் சாலைக்கு வந்து திரும்பிப் பார்த்தார்கள். யாரையும் காணவில்லை.
"என்ன...ல வெடிச்சது என்று கேட்டான்" அமுதன்.
"கார்த்தி காம்பவுண்டுக்குள்ள இருந்து சீனி வெடி வந்து விழுந்து. யாரு எறிஞ்சான்னு தெரியல மக்கா" என்றான் சேது.
வெடி போட்ட இளைஞர்கள் நினைத்ததைத் சாதித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் வீடு திரும்பினார்கள்.
சரி எதுவானாலும் கோவிலில் போய் பேசுவோம் என்று பாடலைத் தொடர்ந்து பாடி கோவிலுக்குள் நுழைந்து சாமி படத்தை இறக்கி வைத்து விட்டு அமர்ந்தார்கள்.
"லே...ய் மக்கா நம்ம பஜனை தெக்குப் புத்தளம் போன நாளிலிருந்து டேவிட் எங்க வச்சிப் பாத்தாலும் மொறச்சான்.எல்லாம் அவனுடைய திட்டமாத்தான்...!" இருக்கும் என்றான் அமுதன்.
"சரி இப்போ வீட்டுக்குப் போவோம்.எதுவானாலும் நாளைக்கு இது பத்தி பேசுவோம்" என்று செந்தில் சொல்ல கூட்டம் கலைந்து, அவரவர் வீட்டிற்குச் சென்றார்கள்.
காலையில் படுக்கையை விட்டு எழுந்த செந்தில் தந்தை சுந்தரத்திடம் முதல்நாள் பஜனையில் நடந்த சம்பவத்தைக் கூறி தெற்குப் புத்தளத்தில் இளைஞர்கள் முறைத்த கதையையும் சொன்னான்.
சுந்தரம் தான் வடக்கு முத்தாரம்மன் கோவில் தலைவர்.
செந்தில் சொன்னதைக் கேட்ட சுந்தரம் ,"மொவனே... நீங்க காலேஜ் படிக்கிற பையனுவ. இத நாங்க பெரியாளுவ பாத்துகிடோம்.
"சரிப்...பா!" என்ற செந்தில் நண்பர்களைச் சந்தித்தான்.
"மக்கா அந்த வேதக்காரனுவ பஜனை மட்டும் மார்கழி முழுசும் வடக்குத் தெருவுக்குள்ள வருவு... நம்ம ஏதாவது சொல்லமா...!"
"உங்க அப்பாட்ட இது பத்தி சொன்னியா...?" என்று செந்திலிடம் கேட்டான் பாலன்.
"ஆமா...ல; அப்பா நீங்க இதுல தலையிடாதுங்க,நாங்க பார்த்துக் கிடோம்னு சொன்னாரு".
"அவுனுவ நேத்தைக்கு வெடி எறிஞ்சா, நம்ம இண்ணைக்குக் கல்லெறையாம விடக்கூடாது...ல" என்று சொன்னான் சோமு.
"சரி அப்போ அவுனுவ பஜனை இன்னைக்கு நம்ம தெருவுக்கு வரும் போது நம்ம வேலையைக் காட்டுவோம்...!" என்று திட்டம் போட்டு விட்டு கலைந்தார்கள் நண்பர்கள்.
அன்று மாலை சுந்தரம் வீட்டின் முன்பு நாற்காலியைப் போட்டு அமர்ந்திருந்தார்.
அந்த நேரம் தெரு வழியாக ஜேக்கப், சுஜித், டேவிட் சென்றதைப் பார்த்த சுந்தரம் நாற்காலியில் இருந்து எழுந்து,
"எப்...போ தம்பிகளா எங்கப் போறீய...? இங்க வாங்க" என்று அழைத்தார்.
"களிமாருக்குப் போறோம்" என்ற நண்பர்கள் மூவரும் சுந்தரத்தின் பக்கம் வரவில்லை .ஆனால் அடுத்த அடி எடுத்து வைக்காமல் நின்றார்கள்.
உடனே சுந்தரம் அவர்களிடம் சென்று "எப்...போ நேத்து எதுக்குபோ நம்ம பையனுவ மேல வெடி போட்டிய...?'
"நாங்க போடலியே" என்றனர் மூவரும் ஒரு சேர. சுந்தரம் அதை நம்பவில்லை.
"தம்பிகளா வேதக்காரளும் நெறைய பேரு வடக்குத் தெருவுல இருக்காவ.நம்ம எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா தான் இருக்கோம்."
"மக்கா நம்ம மனுசனுவளுக்க இடையில்தான் கோவிலுக்குப் போறவிய இந்துன்னும், சர்ச்சுக்கு போறவிய கிறுத்துவருன்னும், மசூதிக்குப் போறவிய முஸ்லிம்னு பிரிச்சி வச்சிருக்காவ...!"
"புறாக் கூட்டத்தைப் பாரு.அது கோவிலுக்குப் போனாலும் புறா தான்.சர்சுக்கு போனாலும் புறா தான்.மசூதிக்கு போனாலும் புறா தான்.நம்ம மனுசனுவ எல்லாரோட உடம்புலயும் சிவப்பு ரத்தம் தான் ஓடுவு...!" என்று சுந்தரம் சொல்லவும்;
ஜேக்கப்பிற்கு கோபம் வந்து சுந்தரத்திடம்,
"ஓ...ய் நீரு இவ்வளவு சொல்லீரே... எங்க சர்ச்சுக்கு வருவீரா...?
"மக்கா நான் என்னல… என் குடும்பமே வாரோம். சர்ச்ல முட்டிப் போட்டுப் பிரேயர் பண்ணுறோம். வா போவோம்."
"ஓ...ஹோ அப்படி எல்லாம் வரக்கூடாது.உங்க பெயரை மாத்தி ஞானஸ்நானம் எடுத்து எங்க சர்ச்சுக்கு வர முடியுமா உங்களால...?
"லேய்... மக்கா அது எப்புடி...ல வர முடியும்.நாங்க எங்க பாட்டன் காலத்திலிருந்து இந்து மதத்துல பிறந்து வளந்துற்றோம்...!" என்று சுந்தரம் சொல்லவும்,
"உங்க மதத்து மேல நீங்க வெறியா தான இருக்கிரிய...!அப்போ எதுக்குப் பெருசா மதவெறி பற்றி பேசுறிய...? என்றான் டேவிட்.
"மக்கா நான் ஒங்க சர்ச்சுக்கு வரதுக்குக் வேதக்காரனா மாறித் தான் வரணும்னு அவசியம் இல்ல. மனசுல எல்லா கடவுளும் ஒண்ணு தான் என்னும் எண்ணம் இருந்தாலே போதும். நீங்கெல்லாம் காலேஜ் படிக்கிற புள்ளையளு. இந்த வயசுல இந்த மத வெறியைல்லாம் எடுக்கக்கூடாது...!"என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார் சுந்தரம்.
அன்று இரவு எட்டு மணி.
"இண்ணைக்கி அந்த வேதக்கார பயலுவள விடக்கூடாது... ல!" என்று அமுதன், செந்தில், சேது, சோமு நால்வரும் கையில் சிறிய கற்களோடு இராமுவின் விளையில் பதுங்கினார்கள்.
கிறுத்தவ பஜனை குழு,
"ஓசன்...னா பா...டுவோம், ஏசுவின் தாசரே... உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்...னா !" என்று இரண்டு முறை பாடவும் ;
அமுதன் "லேய் அவுனுவ ஓ..சோ...னா,
ஓ..சோ...னான்னு சினிமா பாட்டா....ல
பாடானுவ...?
"இல்ல...ல இது ஒரு வேதப் பாட்டுத் தான்..." என்றான் சோமு.
"லேய்...அவுனுவ பக்கத்துல வாறானுவ. நம்ம கோரசா பாடிகிட்டே கல்லெறிவோம் என்று ;
"போ சோ...னா,போ சோ...னா இந்தத் தெருவ விட்டு ஓடிப்...போ சோ...னா என்று அனைவரும் ஒரு சேர பாடிக் கொண்டே கல்லெறிந்தார்கள்.
கிறுத்தவ பஜனை குழுவின் மீது கல் விழவும்,
நேற்று இந்து பஜனையின் போது இவர்கள் எப்படி ஓடினார்களோ, அதுபோலவே இன்று அவர்கள் ஓடினார்கள்.
இந்த இந்து பையனுவ பழக்குப் பழி வாங்கிட்டானுவளே என்று கிறித்தவ இளைஞர்களுக்குக் கோபம் தலைக்கேறி வெள்ளிக்கிழமை வடக்கு அம்மன் கோவில் பஜனை குழுவைத் தெருவுக்குள் வர விடாமல் தடுத்தார்கள்.
மறுநாள் வடக்கு முத்தாரம்மன் கோவில் ஊர்த் தலைவர் சுந்தரம் செயலாளர் பொன்ராஜ் மற்றும் கல் எறிந்த இளைஞர்கள் என்று பலர் புத்தளம் தேவாலயத்தின் பாதிரியார் செல்லையாவைப் பார்த்து நடந்ததைத் தெரிவித்தனர்.
பாதிரியார் அன்போடு "சகோதரர்களே...! நான் இதைப் பார்த்துக் கொள்கிறேன். கவலையை விடுங்கள் என்று வெடி பேட்ட இளைஞர்கள் மற்றும் தேவாலயத்தின் உறுப்பினர்கள் என்று அனைவரையும் அழைத்தார்.
"இயேசுவின் அன்புக் குழந்தைகளே...!நீங்கள் எதற்காக பஜனையின் போது வெடி போட்டீர்கள். மதம் என்ற ஒன்றை இறைவன் பகுக்கவில்லை. மனிதர்கள் தான் பகுத்துக் கொண்டார்கள். உலகின் அனைத்து மதத்தவரின் இறைவனும் ஒன்றே. மனிதர்கள் தங்கள் மதத்திற்குத் தகுந்தாற்போல் இறைவனுக்கு உருவம் கொடுத்து வழிபடுகிறார்கள்...!'
"எனவே இளைஞர்களாகிய நீங்கள் இந்த மதவெறியை இன்றோடு விட்டுவிட்டு, ஒருவருக்கொருவர் பகைமை,வெறுப்பை வளர்த்துக் கொள்ளாமல் அன்பும், நட்பும் பாராட்டுங்கள்...!"என்றார்.
பாதிரியாரின் அறிவுரையில் டேவிட் தவிர்த்து மற்றவர்கள் மனம் மாறி ஒருவருக்கொருவர் கைகொடுத்து நட்புப் பாராட்டினார்கள்.
இப்பொழுது சுந்தரம் எழுந்து "சாமி ரொம்ப நன்றி. நம்ம ஊருல ரெண்டு மதத்துக்கும் இடயே நல்லிணக்கத்தை உண்டு பண்ணிட்டிய. அப்புடியே நாளக் கழிச்சி எங்க கோவில்ல கொடை விழா இருக்கு.கொட முடிஞ்சதும் அன்னதானம் இருக்கு சாமி. நீங்க எல்லாரும் மதிய சாப்பாட்டுக்கு எங்க கோயிலுக்கு வரணும். இப்புடியே நீங்க கோவிலுக்கும், நாங்க சர்ச்சுக்கும் வந்து போனா நமக்குள்ள ஒற்றுமை வளரும்...!" என்றார்.
உடனே பாதிரியார் "மிக்க மகிழ்ச்சி... நாங்கள் அனைவரும் நாளை மறுதினம் வருகிறோம்" என்றார்.
உடனே இளைஞர்கள் கரவொலி எழுப்பி, விசிலடித்து ஆரவாரம் செய்தனர்.
சுந்தரம் மிக்க மகிழ்ச்சி சாமி என்று நன்றி கூறி வந்தவர்கள் கிளம்பும்;
டேவிட் நேரே பாதிரியாரிடம் வந்து எதுக்கு ஃபாதர் வடக்கு தெரு கோவிலுக்குச் சாப்ட வாரோன்னு சொன்னிய...?
"டேவிட் அன்பா அழைக்கும் போது வரமாட்டேன்னு சொல்லமுடியாது...!"
"இல்ல ஃபாதர்.நம்ம கிறுத்தவர்கள் யாருமே இந்து கோவில்ல உள்ள எதையுமே சாப்பிட மாட்டோம்.அப்புடி இருக்க ஃபாதர் நீங்க...?" என்று டேவிட் இழுத்தான்.
"அதாவது டேவிட் கிறுத்துவர்கள் தேவாலயத்துல சிலுவையும், ஏசுவின் உருவத்தையும் வைத்து வணங்குகிறோம்.இந்துக்கள் கோவில்ல அவர்களுக்குப் பிடித்த இஷ்ட தெய்வத்தை வைத்து வழிபடுகிறார்கள்.மற்றபடி கோவிலைக் கட்டியதும் கொத்தனார் தான்.தேவலயத்தைக் கட்டியதும் கொத்தனார் தான்.கண்டிப்பா கொத்தனார் ஒரு இந்துவாகவோ அல்லது கிறுத்துவராகவோ தானே இருப்பாரு.அந்தக் கொத்தனாரிடம் மாதம் தாண்டி மனிதம் என்ற உணர்வு மட்டும் தான்இருந்திருக்கும்.
அதுனால நீயும் கண்டிப்பாக எங்களோடு வர வேண்டும்...!" என்று பாதிரியார் டேவிட்டை அழைக்கவும்
வேண்டா வெறுப்பாக "சரி" என்று கூறினான் டேவிட்.
அன்று முத்தாரம்மன் கோவில் கொடை சிறப்பாக முடிந்து அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஊர் மக்கள் அனைவரும் கோவிலில் குழுமி இருந்தார்கள்.
அந்த நேரம் செல்லையா பாதிரியார், தேவாலயத்தின் உறுப்பினர்கள் மற்றும் டேவிட்,ஐசக்,ஜேக்கப், சுஜித் என்று அனைவரோடும் கோவில் மைதானத்துக்குள் நுழைந்தார்.
பாதிரியார் வருவதைப் பார்த்த ஊர்மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் வாங்க ஃபாதர், வாங்க ஃபாதர் என்று அன்போடு உபசரித்துக் கோவிலுக்குள் அழைத்துச் சென்றார்கள்.
கோவில் கருவறைக்குள் இருந்த முத்தாரம்மனை, மேரி மாதாவாகவே பாதிரியார் பார்த்தார்.
டேவிட் ஏதோ பாதிரியார் கூப்பிட்டாரேன்னு வந்து கோவிலுக்குள்ள போகாம வெளியில் நின்றான்.
அன்று கிறித்தவ பஜனையின் போது கல்லெறிந்த இளைஞர்கள், இன்று பாதிரியாரையும் உடன் வந்தவர்களையும் அன்பு மழையில் நனைய வைத்தார்கள்.
அடுத்து ஊர் மக்கள் வந்தவர்களை உணவருந்த அமர வைத்து இலை போட்டார்கள் சாப்பாடு வைத்தார்கள்.
டேவிட் சாப்பிடுவது போல் நடித்துக் கொண்டிருக்க...
"ஃபாதர் டேவிட்டை சாப்பிட வற்புறுத்தினார்...!"
சாப்பிடக் கூடாது என்று இருந்த டேவிட் விழிகளை அங்குமிங்கும் சுழல விட்டவன் பார்வை கோவிலுக்குள் பரவ, கோவிலுக்குள் அழகோவியமாக ஒரு இளம் பெண் தாவாணி, பாவாடையுடன் தன்னுடைய நீண்ட கூந்தலில் பூச்சூடி அந்தச் சடையை முன்னால் தூக்கிப் போட்டுக்கொண்டு நின்றிருப்தைப் பார்த்த டேவிட்டின் கண்கள் மீண்டும் மீண்டும் அவளைப் பார்க்க.... அவனது கை அவனை அறியாமலே சாப்பாட்டை எடுத்து வாயில் வைத்தது.
"ஃபாதர் இன்னும் கொஞ்சம் சோறு வைக்கட்டா...?" என்றான் அமுதன்.
"போதும்...யா இதைச் சாப்பிட்டு வாங்கிக்கிறேன்" என்றார் ஃபாதர்.
"சுஜித்... சாம்பார் இன்னும் கொஞ்சம் ஊத்தட்டா...?என்று கேட்டான் பாலன்.
"போதும் மக்கா அடுத்து ரசம் வாங்றேன்".
ஃபாதரின் இலையில் அவியல் கூட்டை இரண்டாவது முறை அள்ளி வைத்தான் செந்தில்.
டேவிட்டின் இலையில் முட்டைக்கோஸ் பொரியலை மீண்டுமொரு முறை வைத்தான் சோமு.
இறுதியில் அனைவரது இலையிலும் சிறுபயறு பாயாசம் ஊற்றப்பட்டு அனைவரும் பழத்துடன் சேர்த்து உண்டு மகிழ்ந்தார்கள்.
பாதிரியாரும், உடன் வந்தவர்களும் நிறைவோடு சாப்பிட்டு மகிழ்வோடு நன்றி கூறி கிளம்பும்போது , அடுத்த வாரம் புத்தளம் சர்ச்சில் நடக்கும் கிறுத்துமஸ் விழாவிற்கு ஊர் மக்கள் அனைவரும் வர வேண்டும் என்று அன்போடு அழைத்தார்.ஊர் மக்கள் அனைவரும் ஃபாதர் நீங்க சொன்ன பிறகு வராம இருப்பமா என்றார்கள்.
பாதிரியார் "நாங்கள் வருகிறோம் என்று மகிழ்வோடு கை கூப்பும் போது..."!
"ஃபாதர் ஒரு நிமிடம் இதோ வருகிறேன் என்று டேவிட் கோவிலுக்குள் நுழைந்தான்.முத்தாரம்யைப் பார்த்தான்.'உன்னோட கோவிலுக்குப் பிடிக்காமத் தான் வந்தேன்.வந்த எனக்கு நீ வாழ்க்கையோடத் தொடக்கத்தக் காட்டியிருக்கா...!என் வாழ்வில் உன் ஆலயத்தில் பார்த்த அழகியை மனைவியாக்கு என்று மனதார வேண்டினான் டேவிட்...!" கோவிலில் இருந்து புது மனிதனாக கிளப்பிய டேவிட் ,சில வருடங்களில் புது மாப்பிள்ளையாக கோவிலுக்கு வந்தான்.
அருமையாக உள்ளது அக்கா.
மிக மிக அருமையான கதை அக்கா… அப்படியே நம்ம ஊரு நிகழ்வு… முழுவதும் நெசமான சம்பவங்களுடன் இதை இணைத்துப் பார்க்க உதவுவது அப்படியே வரும் நமது ஊரு பேச்சி…. மிகவும் அற்புதம் அக்கா…. கடைசியில் வரும் கதையின் முடிவு மிக அருமை… அப்படியே அந்த டேவிட்டின் சுந்தரிக்கு ஒரு பெயரூட்டி உயிரூட்டியிருக்கலாம்….
Thank you
Very nice
Thank you
Very nice 👍
நன்றி
Vera nice!!!
I like very much this story.
நன்றி
யதார்த்தமான உண்மை👌👌👌👌👌✌️
நன்றி
Thanks
நன்றி
எனதருமை
அன்பு சகோதரியே
முதலில் என் வாழ்த்துக்கள்
மதம் மேல் வெறிக்கொண்ட
மதிக்கெட்ட
மக்களுக்கு
மதிநுட்பத்துடன்
இந்துக்கோயில்
சர்ச் கட்டியவர்கள்
இருதரப்பு மதத்தினரில்
யாதோ ஒரு மதத்தினர் தான்
கட்டியிருப்பார்
அவர் பாகுபாடு
பார்த்து இருந்தால்
நீயோ நானோ
சர்ச்க்கோ வரமுடியுமா?
என டேவிட் இடம்
சுட்டி காட்டும் பாதர்
மனித நேயத்தை காட்டுகிறது
இந்து மக்கா
திருவிழா
அழைப்பிணையேற்று
பாதர் தன் கிறிஸ்துவ
மக்காவுடன் பிரச்சனை மீறி
செல்லும் போது
அங்கு பாசமும் பண்பும் தெரிகிறது
அம்மன் அவர்கள் பார்வையில்
மாதாவாக காட்டியது சிறப்பு
மேலும் அழகிய பெண்னை கண்ட டேவிட் மனமாற மணம்முடித்து சகோதரத்துவத்தினை காட்டுவது சிறப்ப
மனம் இருந்தால் எந்த மதமும் ஒன்று தான் என்றும் அனைத்து கடவுள் ஒன்று தான் என்று புறாவினை எடுத்து காட்டியது சிறப்பு
வாழ்க வளமுடன்
கா. காளிமுத்து M.com.B.L.,
நீதித்துறை அதிகாரி
தமிழ் நாடு மாநில மனித உரிமை ஆணையம், சென்னை
நன்றி அண்ணா
super akka
Thank you ma
super
Thank you
Nice to read to good article after long days ….congrats sister ….keep writing and contribute to society.
Thank you
அருமையான வாசகம் கருத்துமிக்க கதை வாழ்த்துக்கள்
Thank you
அருமை
Thank you in in
சூப்பர் அண்ணி வாழ்க வளமுடன்
Thank you
அருமை அருமை
Good
Sister 🤝
Thank you
Nice
Thank you
Super sumathi akka👍👍👌🏻👌🏻👌🏻
Thank you ma
……புறா கூட்டத்தை பாரு அது கோவிலுக்கு போனாலும் புறா தான் சர்ச்சுக்கு போனாலும் புறா தான் மசூதிக்கு போனாலும் புறா தான் நம்ம மனசங்க எல்லோரோட உடம்புலயும் சிவப்பு ரத்தம் தான் ஓடுவது …
குமரி பாஷையில் மின்னியல் இழைக்கோர்வை படிக்க இழுத்து பரவசத்தை தூண்டுகிறது கதை முனைவரின் கைவண்ணம் மிகச்சிறப்பு
வாழ்த்துக்கள்
ஆழ்வார்பேட்டை
Thank you