21 Aug 2019 2:37 amFeatured
நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் தூத்துக்குடி டாக்டர் அம்பேத்கார் அறக்கட்டளையின் வெள்ளி விழா மற்றும் தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் 10 மற்றும் 12 - ம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவியருக்கான பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா கடந்த வாரம் திருச்செந்தூர் ஹோட்டல் உதயம் இன்டர்நேஷனலில் வைத்து நடைபெற்றது.
விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்க அறக்கட்டளையின் தலைவர் திரு. டி.தாமோதரன் தலைமை தாங்கினார்.
அறக்கட்டளையின் உறுப்பினரும் ஓய்வுபெற்ற வருமான வரித்துறை துணை ஆணையருமான திரு.ஐ .விஜயராஜன் முன்னிலை வகிக்க அறக்கட்டளையின் உறுப்பினர் சு.சுரேஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார்
விழாவில் கலந்துக்கொண்ட திமுக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் 10 - ம் வகுப்புத்தேர்வில அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள். கனிமொழி சிறப்புரையில் இருபத்து ஐந்து ஆண்டுகளாக சிறப்பாக ஓடுக்கப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்கா பாடுபட்டு வரும் தூத்துக்குடி டாக்டர் அம்பேத்கார் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை வெகுவாக பாராட்டியதுடன் இவர்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்தினார்.
விழாவில் ஏலகிரி மலையில் இயங்கிவரும் CRHSC நிறுவனத் தலைவர் திரு.பென்னட்பெஞ்சமின் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் ஓய்வுபெற்ற தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் கிறிஸ்துதாஸ்காந்தி IAS அவர்கள் சமுக சேகவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டி பேசினார்கள்.
விழாவில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் M.P அவர்கள் கலந்து கொண்டு தூத்துக்குடி,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில +2 வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
மேனாள் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் அப்பாதுரை, மத்திய பிராவிடண்ட் ஃபண்ட் கமிஷன் உறுப்பினர் திருமதி. இமயா கக்கன், ஓய்வுபெற்ற சென்னை இ.எஸ்.ஐ மருத்துவமனை முதன்மை அறுவை சிகிச்சை நிபுணர் ஜி.காமராஜ், தாய்மண் அறக்கட்டளை இயக்குனர் அ.இளந்திரையன், புதுக்கோட்டை, அம்பேத்கர்-பெரியார்-காரல்மார்க்ஸ் கலாச்சார மையத்தின் நிறுவனர் Dr.N.ஜெயராமன், ஓய்வுபெற்ற தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் Dr.S.ராஜன், வீரபாண்டியன் பட்டணம் ஸ்ரீதர் ரோட்ரிகோ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
முனைவர் ச.பிரபாகரன் நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது.