28 Nov 2024 11:32 amFeatured
மும்பை மாநகர் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47 வது பிறந்த நாள் விழா
மும்பை மாநகர் திமுக சார்பில் தமிழ்நாட்டின் மாண்புமிகு துணை முதல்வரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47 வது பிறந்த நாள் விழா 27.11.2024 புதன்கிழமை மாலை 6.00 மணியளவில் தலைமை பணிமனை கலைஞர் மாளிகையில் மும்பை திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு அமரன் உத்தமன் அவர்கள் தலைமையில் பொறுப்பாளர் கருவூர் இரா.பழனிச்சாமி தொடக்கவுரையாற்ற ,மும்பை திராவிடர் கழகத்தலைவர் திரு பெ.கணேசன், அவைத்தலைவர் திரு வே.ம.உத்தமன், மூத்த தலைவர் திரு என்.வி.சண்முகராசன், தானே கே.ஏ. ஜாகிர் உசேன் வக்கோலா கிளைச்செயலாளர் சேலம் மா. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்திப் பேசினார்.
விழாவில் கலந்து கொண்ட ஏழைத் தாய்மார்களுக்கு அத்தியாவிசய உணவுப்பொருள்கள் அரிசி, பருப்பு, சர்க்கரை அடங்கிய பைகள் கொடுக்கப்பட்டது.
விழாவில் வக்கோலா கிளைச்செயலாளர் சேலம் மா. சீனிவாசன், தாராவிக் கிளை திரு ஸ்டிபன் ஜெபராஜ், திரு நாஞ்சிலின், திரு காந்தி, திரு வேல்முருகன், அன்பு சிதம்பரம், அண்டோ ஜாக்சன், முருகன் சுலேகா, திரு ஜுசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Happy news.