Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 50 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கு

04 Oct 2019 8:03 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

நாடு முழுவதும் சிறுபான்மையினர் மற்றும் தலித் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், இதனை உடனே தடுக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கடிதம் எழுதப்பட்டது. 50 பிரபலங்கள் இணைந்து இந்த கடிதத்தை எழுதியிருந்தனர். இதில் திரைப்பட இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி , அனுராக் காஷ்யப், ஷியாம் பெனகல், ராமச்சந்திரா குஹா , அபர்ணா சென், சௌமித்ரா சாட்டர்ஜி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

அந்த கடிதத்தில், மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலேயே ஒருவரை தேசவிரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது எனவும் உடனடியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில், இந்த நாடு அதன் ஜனநாயக முகத்தை இழந்துவிடும்

நமது நாட்டில் சமீபகாலங்களில் நிகழ்ந்த பல மோசமான சம்பவங்கள் குறித்து நாங்கள் கவலை அடைந்துள்ளோம். இந்தியா ஒரு மதச்சார்பற்ற சோஷியலிச ஜனநாயக குடியரசு நாடு; இங்கு எல்லா பேதங்களைக் கடந்தும் அனைத்து மக்களும் சமம் என்கிறது நமது அரசியலமைப்புச் சட்டம். எனவே அரசியலமைப்புச் சட்டத்தின் பெயரால் குடிமக்கள் அனைவரும் அவர்களுக்கான உரிமையை பெறவேண்டும் என்பதற்காக இதனை எழுதுகிறோம்.

முஸ்லிம், தலித் மற்றும் பிற சிறுபான்மையினர்கள் கூட்டாக தாக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அவர்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் வேளையில், அதில் ஈடுபட்டதற்காக தண்டனை அனுபவித்தவர்கள் வெகுசிலரே. 

'ஜெய் ஸ்ரீராம்' என்ற முழக்கங்கள் தற்போது சண்டையின் தொடக்கமாகிவிட்டது. அதன் பெயரால் சட்டம் ஒழுங்கு மற்றும் பிற கும்பல் கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. மதத்தின் பெயரால் பல வன்முறை சம்பவங்கள் நடைபெறுவது அதிர்ச்சியை அளிக்கிறது. இது பழங்காலம் அல்ல. ராமரின் பெயருக்கு இம்மாதிரியான சம்பவங்களால் நேரும் அவப்பெயரை நீங்கள் தடுக்கவேண்டும் என பிரதமர் மோடிக்கு கூட்டாக கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

வழக்கு

இந்த நிலையில், பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள காவல்நிலையத்தில் இந்த பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்கள் தாங்கள் எழுதிய கடிதத்தின் மூலம், நாட்டின் பிம்பத்துக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாகவும், பிரதமரின் செயல்பாடுகளை குறைத்து மதிப்பிட்டதாகவும் குற்றம்சாட்டி வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முசாபர்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும், பிரிவினைவாத கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் கடிதம் அமைந்திருப்பதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த் திவாரி அளித்த உத்தரவின்பேரில் தற்போது கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த பிரபலங்கள் மீது முசாபர்பூரில் உள்ள காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது தேசத்துரோகம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096532
Users Today : 17
Total Users : 96532
Views Today : 22
Total views : 416664
Who's Online : 0
Your IP Address : 13.59.73.248

Archives (முந்தைய செய்திகள்)