02 Jan 2020 8:05 pmFeatured
உலகப் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் டி.எஸ்.எலியட் தனது நண்பர் எமிலி ஹேல் என்பவருக்கு எழுதிய ஆயிரம் கடிதங்கள் 60 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் டி.எஸ். எலியட் எழுதிய சுமார் ஆயிரம் கடிதங்கள் அந்நாட்டின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. அறுபது ஆண்டுகளாக நூலகத்தில் இருந்தும் யாரும் வாசிக்க முடியாமல் இருந்த இந்தக் கடிதத் தொகுப்பை, இனி அந்த நூலகத்தில் வாசிக்க முடியும்.
1930 முதல் 25 ஆண்டுகளுக்கு மேல் எலியட்டும் எமிலியும் நட்பு கொண்டிருந்தனர். ஹேலுக்கு எலியட் எழுதியிருக்கும் கடிதங்கள் வாசிக்கக் கிடைத்திருப்பதால், எலியட்டின் வாழ்க்கை பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் இன்னும் விரிவாகவும் ஆழகமாவும் அறிய முடியும் எனக் கருதப்படுகிறது.
எமிலி ஹேல் தனக்கு எழுதிய கடிதங்களை கொழுத்திவிடும்படி டி.எஸ்.எலியட் ஆணையிட்டு இருந்தார் என்பது அவரது சரிதையை எழுதியவரின் கூற்று ஆகும்
பத்தாண்டு நிறைவை நினைவுகூரும் தருணத்தில், “இந்தக் கடிதங்களின் வெளியீடுதான் இலக்கிய உலகில் தலைசிறந்த நிகழ்வாக இருக்கும் என நினைக்கிறேன்” என எலியட் படைப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் ஆண்டனி கூடா சொல்கிறார்.
எமிலி ஹேல் இந்தக் கடிதங்களை 1956ஆம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழக நூலகத்துக்குக் கொடையாக வழங்கினார். இந்தக் கடிதங்களை இருவரும் இறந்து 50 ஆண்டுகள் வரை யாருக்கும் படிக்கக் கொடுக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்திருந்தார். 1965ஆம் ஆண்டு எலியிட் காலமானார். நான்கு ஆண்டுகள் கழித்து 1969ஆம் ஆண்டில் ஹேல் மறைந்தார்.