28 Jun 2021 11:07 pmFeatured
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம், சரஸ்வதி இராமநாதன் அறக்கட்டளை - தமிழ்நாடு, தமெரிக்கா தொலைக்காட்சி- அமெரிக்கா இணைந்து இணையம் வழியாக நடத்தியது.
27-06-2021 ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணியளவில் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம், சரஸ்வதி இராமநாதன் அறக்கட்டளை தமிழ்நாடு, தமெரிக்கா தொலைக்காட்சி அமெரிக்கா ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து இணையம் வழியாக கவியரசு கண்ணதாசனின் 95 ஆவது பிறந்தநாள் விழா பட்டிமன்றமும் இன்னிசை நிகழ்ச்சியும் நடத்தினர்.
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றப் புரவலர் சேதுராமன் சாத்தப்பன் (Chief Operating officer (India) Emirates NBD Bank) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மன்றத்தின் நிர்வாகக் குழுச் செயலாளர் வே.சதானந்தன் வரவேற்புரையும் மன்றத்தின் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் தொடக்கவுரையும் ஆற்றினர்.
கவியரசு கண்ணதாசன் புதல்வரும் கண்ணதாசன் பதிப்பகத்தாருமான காந்தி கண்ணதாசன் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
சரஸ்வதி இராமநாதன் அறக்கட்டளைத் தலைவரும் சிறந்த இலக்கியச் சொற்பொழிவாளருமான முத்தமிழரசி பேராசிரியர் முனைவர் சரஸ்வதி இராமநாதன் தலைமையில் கண்ணதாசனின் படைப்புகளில் விஞ்சி நிற்பவை இன்பியல் பாடல்களா! துன்பியல் பாடல்களா! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
இன்பியல் பாடல்களே! எனும் தலைப்பில் சொற்போர் திலகம் புவனா வெங்கட், பாவலர் ஞாயிறு இராமசாமி நற்றமிழ் நாவலர் செல்வி இராஜ் ஆகியோரும்
துன்பியல் பாடல்களே! எனும் தலைப்பில் உரைத்தென்றல் கே.வேங்கடராமன் ,கவிச்செம்மல் ஆரோக்யசெல்வி, மருத்துவர் பிரவினா சேகர் ஆகியோரும் உரையாற்றினார்கள்.
தமிழ் எழுத்தாளர் மன்றப் புரவலர் கவிஞர் அரியக்குடி மெய்யப்பன், தமெரிக்கா டிவி. நிறுவனர் மகேஸ் நாட்டாண்மை மற்றும் எழுத்தாளர் மன்ற ஆலோசகர் பாவரசு முகவை திருநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்வின் நிறைவாக மன்றத்தின் கலைப்பிரிவு சார்பாக ஒருங்கிணைப்பாளர் (மும்பை டி.எம்.எஸ்) எம்.என்.நரசிம்மன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வினை மன்றத்தின் கலைப்பிரிவைச் சார்ந்த ராணி சித்ரா நெறியாள்கை செய்தார்.
மன்றத்தின் நிர்வாகக்குழுத் துணைப் பொருளாளர் வெங்கட் சுப்ரமண்யன் நன்றியுரை ஆற்றினார். நிர்வாகக் குழுத் துணைச் செயலாளர் தேவராசன் புலமாடன் நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்.
பல்வேறு தமிழ் அமைப்பைச் சார்ந்தவர்களும் உலகெங்கும் வாழும் தமிழ் அன்பர்களும் நிகழ்வில் கலந்து மகிழ உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமெரிக்கா தொலைக்காட்சியின் 'யூட்யூப்' மற்றும் முகநூல் வாயிலாக நேரலையில் வெகுமக்கள் காணக்கூடிய வகையில் ஒலிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.