12 Dec 2020 2:15 amFeatured
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் மேனாள் தலைவர் பேராசிரியர் சமீரா மீரானின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வருகிற 13-12-2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் சூம் செயலி வழியாக நடைபெறவுள்ளது.
தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் தலைமையில் நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் இந்தியன் ஐ.ஏ.எஸ் அகடமி நிறுவனத்தின் தமிழ்த்துறை -இணை இயக்குநர் செ.வ.இராமாநுசன் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
இலெமூரியா அறக்கட்டளைத் நிறுவனத் தலைவர் சு.குமணராசன், இந்தியப் பேனா நண்பர் பேரவைத் தலைவர் மா.கருண், மும்பைத் தமிழ்ச்சங்கத்தின் மேனாள் தலைவர் எஸ்.இராமதாஸ், ஜெரிமெரி தமிழ்ச்சங்கத் தலைவர் கோ.சீனிவாசகம், அணுசக்திநகர் கலைமன்றத் தலைவர் ந.கனகசபை, மலாடு தமிழர் நலச் சங்கத் தலைவர் எல்.பாஸ்கரன் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்ற உள்ளனர்.
மன்றப் புரவலர்கள் அலிசேக் மீரான், சேதுராமன் சாத்தப்பன், அரியக்குடி மெய்யப்பன் நிர்வாகிகள் அமலா ஸ்டேன்லி, அ.இரவிச்சந்திரன், கவிஞர் இரஜகை நிலவன் மற்றும் ஆலோசகர்கள் கருவூர் இரா.பழனிச்சாமி, வே.பாலு, பாவலர் முகவை திருநாதன், மிக்கேல் அந்தோணி, கே.ஆர்.சீனிவாசன், பாவலர் ஞாயிறு இராமசாமி, ஞான.அய்யா பிள்ளை, ஜி.வி.பரமசிவம், ஆறுமுகப் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மன்றத்தின் ஏனைய அங்கத்தினர்களும் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சார்ந்த தமிழ் அன்பர்களும் நினேவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.
வே.சதானந்தன் மற்றும் பு.தேவராஜன் சூம் வழியாக நிகழ்வை ஒருங்கிணைக்கிறார்கள்.
கூட்ட ஏற்பாடுகளை பொற்செல்வி கருணாநிதி, அந்தோணி சேம்ஸ், கு.மாரியப்பன், வெங்கட் சுப்ரமண்யன் ஆகியோர் செய்கின்றனர். பேராசிரியர் சமீரா மீரானின் மேல் அன்புள்ளம் கொண்ட அனைவரும் நிகழ்வில் கலந்து கொள்ளும்படி விரும்பப்படுகின்றனர்.