28 May 2021 11:50 pmFeatured
வருகிற 30.05.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் இணையம் வழியாக வெளிநாட்டுத் தமிழறிஞர் தமிழ்த்தொண்டு என்ற பெயரில் கடந்த காலங்களில் தமிழ்ப்பணியாற்றிய கால்டுவெல் மற்றும் ஜி.யூ.போப் ஆகியோரின் சிறப்புகளை உலகறியச் செய்யும் நோக்கில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றப் பொதுச்செயலாளர் கல்வியாளர் அமலா ஸ்டேன்லி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் மன்றத்தின் துணைத்தலைவர் கவிமாமணி இரஜகை நிலவன் வரவேற்புரை ஆற்றுகிறார். மன்றத்தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் அறிமுகவுரை ஆற்றவுள்ளார்.
தமிழ்நாடு அரசின் பாரதிதாசனார் விருதாளரும் கவிதை உறவு மாத இதழின் ஆசிரியருமான கலைமாமணி ஏர்வாடி எஸ் இராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
"வெளிநாட்டுத் தமிழறிஞர் தமிழ்த்தொண்டு" என்ற பொருண்மையில் நடைபெறவுள்ள கருத்தரங்கிற்கு சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் சாதனைப் பெண்மணி விருதாளர் பேரசிரியர் முனைவர் உலகநாயகி பழனி தலைமையேற்று நடத்துகிறார்
"கால்டுவெல்லின் தமிழ்ப்பணி" எனும் தலைப்பில் மன்றப் புரவலர் கவிஞர் அரியக்கடி மெய்யப்பன்,
"கால்டுவெல்லின் ஒப்பிலக்கணப்பணி" எனும் தலைப்பில் கவிச்செம்மல் ஆரோக்கியசெல்வி,
"ஜி.யூ.போப்பின் மொழிபெயர்ப்புப் பணி" எனும் தலைப்பில் மன்ற ஆலோசகர் மிக்கேல் அந்தோணி,
"ஜி.யு.போப்பின் தமிழ்ப்பணி" எனும் தலைப்பில் பிரவினா சேகர் ஆகியோரும் கருத்துரை ஆற்ற உள்ளார்கள்.
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றப் புரவலர் அலிசேக் மீரான், மன்ற ஆலோசகர்கள் பாவலர் ஞாயிறு இராமசாமி மற்றும் ஆறுமுகப்பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவுள்ளார்கள்
நிர்வாகக்குழுப் பொருளாளர் வெங்கட் சுப்ரமண்யன் நன்றியுரையும் மன்ற அங்கத்தினர் நர்மதா தொகுப்புரையும் ஆற்றுகின்றனர்.
இணையவழியில் நடைபெறவுள்ள கருத்தரங்க நிகழ்வினை மன்றத்தின் நிர்வாகக்குழுச் செயலாளர் வே.சதானந்தன் மற்றும் நிர்வாகக் குழுத்துணைச் செயலாளர் தேவராசன் புலமாடன் ஆகியோர் ஒருங்கிணைக்கவுள்ளார்கள். நிகழ்வில் உலகெங்கும் வாழும் தமிழன்பர்களும் பல்வேறு தமிழ் அமைப்பைச் சார்ந்தவர்களும் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்துத் தமிழன்பர்களும் நிகழ்வில் கலந்து மகிழும்படி அழைக்கப்படுகின்றனர்.
நிகழ்வில் கலந்துகொள்ள
Meeting ID: 817 9581 6929
Passcode: 123456
இணைப்பு
https://us05web.zoom.us/j/81795816929?pwd=c1k5MUllVjNYSUZTSjQ0VkkyWjhDQT09