27 Nov 2022 10:20 pmFeatured
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 45 ஆவது பிறந்தநாள் விழா 27.11.2022 அன்று மதியம் மும்பை மாநில திமுக இளைஞர் அணியின் சார்பாக நடைபெற்றது.
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடும் முகமாக மும்பை சயானில் உள்ள இரட்சணிய சேனை ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் இளைஞர் அணியினர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
காப்பகத்திலுள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய அசைவ உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மும்பை புறநகர் மாநில செயலாளர் அலிசேக் மீரான், மாநகர அவைத் தலைவர் வே.ம. உத்தமன், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், இளைஞர் அணி துணை அமைப்பாளர் இரா.கணேசன், இலக்கிய அணித் தலைவர் வே சதானந்தன், பிவாண்டி கிளைக் கழக செயலாளர் மேஹபூப் பாஷா, டோம்பிவிலி கிளைக் கழகச் செயலாளர் வீரை சோ பாபு, இலக்கிய அணி புரவலர் சோ.ப.குமரேசன், மாநகர கழக நிர்வாகிகள் சண்முகராசன், கா.ராஜன், ஸ்டீபன், சுடலையாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.