Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

உளவாளிகளின் மர்ம உலகம் (தொடர்-4.2)

11 Sep 2019 8:49 amFeatured Posted by: Sadanandan

You already voted!

அதிரடி திட்டம். ஆனால் ஆபத்தான திட்டமும் கூட!

லேக் விக்டோரியாப் பாதை வழியாக உகண்டா நாட்டுக்குள் யாருமறியாமல் நுழைந்து விட்டிருந்த 6 மொசாத் ஏஜன்ட்களும் என்டபே விமான நிலையத்தின் வெளிப்புறமாக சூழ்ந்து கொண்டு மறைந்து கொண்டார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த முக்கிய வேலைகளில் ஒன்று, உகண்டாவின் விமானநிலைய அதிகாரிகளையும் குழப்பியடிப்பது.

அதை எப்படிச் செய்தார்களென்றால், என்டபே விமான நிலையத்தின் விமான நிலையத்தின் கண்ட்ரோல் டவாரில் இருந்த ராடார்களை சிறிய கருவி ஒன்றிலுள்ள அலைவாரிசைகளால் ஜாம் பண்ணுவது. (இப்போது இதெல்லாம் சில்லறை விஷயம். ஆனால் அந்த நாட்களில் இது ஒரு பெரிய தொழில்நுட்பம்!)

அப்படிச் செய்யும்போது என்டபே விமான நிலையத்தின் கட்டப்பாட்டிலுள்ள வான் பரப்பிலுள்ள எந்தவொரு விமான அசைவையும் கன்ட்ரோல் டவரிலுள்ள ராடார்கள் காட்டாது.
இவர்கள், தமது கருவிகள் மூலம் என்டபே விமான நிலையத்தின் விமான நிலையத்தின் கண்ட்ரோல் டவாரில் இருந்த ராடார்களை ஜாம் பண்ணிவிட்டு, கமாண்டோக்களுடன் வரப்போகும் விமானத்துக்காக பொறுமையுடன் காத்திருந்தார்கள்.
அதே நேரத்தில், நைரோபி விமான நிலையத்தில் இஸ்ரேலிய விமானம் என்ன செய்துகொண்டிருந்தது?
விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. அதன்பின் விமானம் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. உகண்டாவில் கடத்தற்காரர்கள் பணயக் கைதிகளை விடுவித்த பின்னரே விமானம் அங்கிருந்து கிளம்பி உகண்டாவுக்குச் செல்லும் என்று நைரோபி விமான நிலைய அதிகாரிகளுக்கு விமானத்தின் விமானியால் கூறப்பட்டது.

இந்த நிலையில் நைரோபி விமான நிலைய அதிகாரிகள், விமானத்திலிருந்த விமானிகளும் வைத்தியர் குழுவும் (!) விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்துக்கு அருகிலுள்ள ஹோட்டலில் ஓய்வெடுக்கலாம் என்று கூறினார்கள்.
ஆனால், போயிங் 707 விமானத்தில் வந்த விமானிகளும், வைத்தியர் குழுவும், மறுத்து விட்டார்கள்.  தாங்கள் விமானத்துக்கு உள்ளேயே தங்கிவிடப் போவதாகவும், எந்த நிமிடத்திலும் விமானம் கிளம்புவதற்கான உத்தரவு வரலாம் என்றும் கூறியிருந்தார்கள்.
அந்த நாட்களில் நைரோபி விமான நிலையம் மிகச் சிறியது. இரவில் விமானங்கள் எதுவும் வருவதில்லை. இதனால் விமான நிலையமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிப் போய்க் காணப்படும். விமான நிலையத்தில் காவலும் மிகச் சொற்பம். அவர்களும் வெளியே வருவதில்லை.

நள்ளிரவு தாண்டிய நேரத்தில் அந்த விமானத்திலிருந்து 50 கமாண்டோ வீரர்கள் ஓசைப்படாமல் ஆயுதங்களுடன் வெளியே வந்தார்கள். அவர்களின் கைகளில் ஆயுதங்களைத் தவிர வேறு சில பொதிகளும் இருந்தன. இந்த 50 கமாண்டோக்களும் லேக் விக்டோரியா ஏரியின் கரையை நோக்கி ஓசைப்படாமல் சென்றார்கள் இவர்களின் கைகளில் இருந்த பொதிகளில் காற்று அடிக்கக்கூடிய ரப்பர் படகுகள் இருந்தன.

லேக் விக்டோரியாவின் கரையில் அந்த ரப்பர் படகுகளுக்கு காற்று அடிக்கப்பட்டது. அவற்றின் மூலமாக லேக் விக்டோரியாவைக் கடந்து உகண்டாவுக்கு உள்ளே நுழைந்தார்கள் அந்த 50 கமாண்டோக்களும்.

அந்த அதிகாலை நேரத்தில் என்டபே விமான நிலையத்தின் சுற்றுப்புறங்களில் இந்த 50 பேரும் சூழ்ந்து மறைந்து கொண்டார்கள். அவர்கள் மறைந்திருந்த இடத்திலிருந்து விமான நிலைய டேர்மினலும், ரன்வேயும் மிகத் தெளிவாகத் தெரிந்தன.
அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த உத்தரவு, அங்கே காத்திருக்க வேண்டும் என்பதே.ஆக்ஷன் ஏதும் கிடையாது.

என்டபே விமான நிலையத்திலுள்ள பணயக் கைதிகளை மீட்டும்போது இவர்களது உதவி தேவைப்பட்டால் மாத்திரமே இவர்கள் தமது மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு உள்ளே நுழைய வேண்டும் என்பதே உத்தரவு.
உண்மையான அதிரடி மீட்பு நடவடிக்கையை வேறு ஒரு கமாண்டோப் பிரிவுதான் செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இவர்கள் ஸ்டான்ட்பையாக அனுப்பி வைக்கப்பட்ட குழு.
இந்த 50 பேரும் என்டபே விமான நிலையத்தைச் சூழ தத்தமது பொசிஷன்களை எடுத்துத் தயாராக இருந்த அதே நேரத்தில்-
பணயக் கைதிகளை மீட்கவேண்டிய கமாண்டோக்கள் எங்கிருந்தார்கள்?

அந்த நேரத்தில் இஸ்ரேலிய விமானப்படைக்குச் சொந்தமான மூன்று சீ-130 ஹேர்குலஸ் ரக போக்குவரத்து விமானங்களில் அந்தக் கமாண்டோக்கள் இஸ்ரேலில் இருந்து பயணித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத்தான் அதிரடித் தாக்குதலின் திட்டம் முழுமையாகக் கூறப்பட்டிருந்தது.

திட்டம் என்ன?

இவர்களது விமானம் என்டபே விமான நிலையத்தில் கன்ட்ரோல் டவரிடம் அனுமதி பெறாமல் தரையிறங்க வேண்டும். ராடார்கள் ஜாம் பண்ணப் பட்டிருக்கும் என்பதால், இவர்களது விமானங்கள் எண்டபேயை நோக்கிக் கீழே பதியும்வரை என்டபே விமானநிலைய அதிகாரிகளுக்கு அப்படி மூன்று விமானங்கள் தரையிறங்கப் போவதே தெரியாமலிருக்கும்.
இந்த மூன்று விமானங்களும் தரையிறங்கிய உடனே, என்டபே விமான நிலைய அதிகாரிகளிடையே குழப்பம் ஏற்படும். அவர்கள் தரையிறங்கிய விமானங்களுடன் முதலில் ரேடியோ தொடர்புகளை ஏற்படுத்தி அந்த விமானங்கள் எதற்காக வந்திருக்கின்றன என்று அறிய முயல்வார்களே தவிர, உடனடியாக அந்த விமானங்களைச் சுட மாட்டார்கள்.

கிடைக்கும் இந்தக் குறுகிய நேர அவகாசத்தைப் பயன்படுத்தி, அதன் விமானிகள் விமானங்களை விமான நிலையக் கட்டடங்களுக்கு அருகே கொண்டு சென்றுவிட வேண்டும்.
என்டபே விமான நிலையத்தின் வரைபடமும், அதில் பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருந்த லொக்கேஷனும், விமானத்தில் வந்திறங்கும் கமாண்டோக்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. விமானங்கள் விமான நிலையக் கட்டிடத்தை நெருங்கியதும் அதிலிருந்து கமாண்டோக்கள் குதித்து அதிரடியாக அந்தக் கட்டடத்துக்குள் நுழைந்து, எதிர்ப்பவர்களைச் சுட்டுவிட்டு பணயக் கைதிகளை மீட்கவேண்டும் என்பதே திட்டம்.

என்டபே விமான நிலையம் பற்றி மொசாத் உளவாளிகள் சேகரித்து அனுப்பியிருந்த தகவல்களின்படி இந்த விமான நிலையத்தில் உகண்டா ராணுவத்தின் ஒரு மிகச்சிறிய அவுட்போஸ்ட் மாத்திரமே இருக்கின்றது. அதில் அதிகபட்சம் ஏழிலிருந்து பத்து ராணுவத்தினர் மாத்திரமே இருப்பார்கள். அவர்களைச் சமாளிப்பது சுலபம்.
இந்த 10 ராணுவத்தினரும் தகவல் அனுப்பி, மேலதிக ராணுவத்தினரும், விமான எதிர்ப்புப் பீரங்கிகளும் விமான நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள மற்றொரு ராணுவ முகாமில் இருந்துதான் வந்துசேர வேண்டும். அவர்கள் அங்கிருந்து வருவதற்குள் அதிரடி மீட்பு நடவடிக்கை முழுமையாக முடிந்து, பணயக் கைதிகள் விமானத்தில ஏற்றப்பட்டு விமானம் கிளம்பிவிட வேண்டும்.

இதுதான் கமான்டோக்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த திட்டம்.
திட்டத்தில் மேலதிகமாகக் கூறப்பட்டிருந்த அறிவுறுத்தலின்படி, விமானம் என்டபே விமான நிலையத்தில் நின்ற விநாடியிலிருந்து சரியாக ஏழு நிமிடங்களுக்குள் அனைத்தையும் முடித்துவிட வேண்டும்.

ஒரு வேளை ஏதாவது தடைகள் ஏற்பட்டு இந்த ஆப்ரேஷன் 7 நிமிடங்களைவிட அதிக நேரம் எடுக்குமென்றால், ரேடியோ மூலம் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் உதவி கோரலாம். அந்த அலைவரிசையில் உதவி கோரப்பட்டால், என்னபே விமான நிலையத்தைச் சூழ மறைந்திருக்கும் 50 கமாண்டோக்களும் உதவிக்கு வருவார்கள்.
அவர்களிடம் உதவி கோரும் பட்சத்தில், அவர்களையும் விமானத்தில் ஏற்றிக்கொண்டுதான் கிளம்பவேண்டும். அவர்களைத் தரையில் விட்டுவிட்டு செல்லக்கூடாது.
திட்டப்படி எல்லாமே ஏழு நிமிடங்களுக்குள் முடிந்துவிட்டால், மறைந்திருக்கும் ஐம்பது கமாண்டோக்களை அழைக்கத் தேவையில்லை. அதேபோல அவர்களை விமானத்தில் ஏற்றிக்கொண்டு செல்லத் தேவையும் இல்லை. அவர்களே தங்கள் வழியைப் பார்த்துக் கொள்வார்கள்.

மிகத் தெளிவான திட்டம். ஆனால் ஆபத்தான திட்டமும் கூட!

தொடரும்..............

வென்றதா மொசாத்?

நாளை முற்றும்.

Tags:
You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096552
Users Today : 13
Total Users : 96552
Views Today : 21
Total views : 416695
Who's Online : 0
Your IP Address : 18.188.101.251

Archives (முந்தைய செய்திகள்)