15 Jan 2020 9:58 amFeatured
இலைதளையைச் சுற்றியவன் இடுப்பளவை உணருமுன்னே!
இழிநிலையில் கிடந்தமனம் இக்கரைக்கு தாவுமுன்னே!!
இவன்தானா? மனிதனென்று இதயங்கள் அறியுமுன்னே!
இலக்கியச் சுரங்கங்களை இலக்கணத்தி லிட்டுத்தந்து!!
இன்பச் சொற்றொடரை எழிலுடன் இறக்கிவைத்து!!
இடம்பல ஓடிடினும் இதுபோ லில்லையென!
இளையோர் தவழ்வதைப்போல் இதமாய் நகர்ந்துவந்து!!
இதைவிட யான்பெரியோன் இவனினும் யான்இனியோனென!
இடுகாட்டுக் கூக்குரலில் இன்றுவரை கதறிவரும்!
எண்ணற்ற மொழிகளுமே ஏறிட்டுப் பார்த்தாலும்!
இயற்கை துதித்தமொழி!இன்னல் துடைத்தமொழி!!
இதயங்கள் மகிழ்ந்தமொழி! இறைவனும் அறிந்தமொழி!!
இருப்பவன் இல்லாதான்!இதுவரை நெகிழ்ந்தமொழி!!
இனிவரும் நல்லோனும் ஏறிட்டுச் சொல்வதற்கு!
இதுபோல் இல்லையென்று இடித்தே உரைக்கும்வண்ணம்!!
ஏற்கா மனங்களிலே ஏரிட்டு உழுதவர்கள்!
ஏராள மாந்தர்களின் ஏற்றச் சிந்தனையால்!!
எண்ணிய எண்ணங்களில் எழுச்சி பிறப்பெடுக்க!
இப்புவி வளர்ச்சிதனை இதமாய் வைத்தமனம்!!
ஏரெனும் கலப்பைதனில் எருதினை பூட்டிட்டு!
ஊரெலாம் உண்பதற்கு உணவினை உண்ணவைத்தோன்!
ஏகமாய் ஏற்றம்பெற்று இடம்பொருள் அறிந்தவனாய்!!
இளமை குதித்தெழும்ப இன்முகம் கண்டவர்கள்!
இதுதான் எனதாண்டு இனமே அறிகவென்று!!
விண்ணதிர முழக்கமிட்டு வேற்றுலகும் பறைசாற்ற!
உழவன் மகிழ்வதற்கு வளமாய் வித்திட்ட!
தரமாய் வாழ்வதற்கு தைமகள் வருகையொன்றே!!
தரணியில் எமக்கின்பம் தகாது உரைக்காமல்!
தமிழ்மொழி சிதையாமல் தன்னலம் கருதாமல்!!
தமிழ்போல் வாழ்கவென தகைமை சார்ந்தோரால்!
கரும்பென தித்திக்க கண்ணொலி வழிகாட்ட!!
கனிவாய் உறவுதனில் கவிதைப் பாலூட்ட!
ஏலம் அரிசியிட்டு ஏற்றப் பொங்கலிட்டு!!
எல்லோர் மனங்களிலும் என்றும் மகிழ்வூட்டும்!
என்றும் இந்நாளே எம்மவர் புத்தாண்டு!!!