05 Jan 2020 11:03 amFeatured
-பாவராசு முனைவர் வதிலை பிரதாபன்
விட்டில் பூச்சியெல்லாம் தொட்டில்கட்டி ஆடுதிங்க!
சொந்த பந்தம் சாமி சனம்
சேர்ந்து கூடி சொக்கி நிக்க!
ஏர்பிடிச்ச கைகள்ள ஏகப்பட்ட காயமாச்சு
காயமெல்லாம் காசாச்சு வச்சவித முளச்சாச்சு
அடிச்ச நெல்லு கெடக்குதிங்க திண்ணையில
ஆளவச்சு பண்டகட்டி அள்ளிவச்ச வெங்காயம்
ஆறூரு சனத்துக்கு ஆவலத்தான் தீர்த்திருச்சு
காடுகர வெதச்சதுல கம்புசோளம் நெம்பிப்போச்சு
கண்களெட்டும் வழியெங்கும் பச்சமனம்
பொங்கிருச்சு
பட்டபாடு தீந்துச்சின்னு பள்ளிக்கூடம் அனுப்பிவச்சா!
பாடமுன்ன பேருலதான் பறந்தேதான் போயிருச்சு
பட்டசொகம் தொட்டசுகம் பாவிப்புள்ள கத்துக்கிச்சு!
கண்டதெலாம் வேணுமுன்னு கத்தியழ தெரிஞ்சதுக்கு
வாய்வயித்துச் சோத்துக்கு வயலவிட்டா ஒன்னுமில்ல!
கண்ணுக்கெட்ன தூரத்துக்கு சொல்லியழ ஆளுமில்ல
உண்டசோறு செமிக்கலன்னு ஓடிவந்து நின்னவனே!
ஒக்கார இடமில்ல ஒட்டிக்கிட்டு நடக்குறியே
வெட்கமான மேதுமில்ல வெந்தசோத்துக் கொசரன்நீ
வேலைக்குதான் கெளம்பீட்ட வெளங்கா மூஞ்செடுத்து
படிச்சமப்பு நெறஞ்சதுல பட்டணமே கெதியான
பாவிமனங் கேட்கலயே பட்டினிதான் போட்றதுக்கு
என்னநம்பி நீயிருக்க எப்படியும் சோறுவரும்!
உன்னநம்பி இருக்கவ்னுக்கு எப்படித்தான் சோறுவரும்?
பட்டணமே போனாலும் பசிதீக்க வெளச்சலுன்னு
படச்சவனும் வச்சுப் போனான் படிச்சவனே!!