07 Mar 2021 4:26 pmFeatured
06-03-2021 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பாக மகளிர் நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாள் உலக மகளிர் நாளாகக் கொண்டாடப் படுவதையொட்டி வழக்கம்போல் பெண்களின் சிறப்புகளை உலகறியச் செய்யும் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் இந்த ஆண்டும் இந்த நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் விதமாக இணையம் வழியாக நடைபெற்ற கருத்தரங்கத்தில் மகளிர் பெருமை பற்றி ஆண்கள் உரையாற்றும் நல்லதொரு நிகழ்விற்கு ஏற்பாடு செய்தது.
மன்றத்தின் பொதுச் செயலாளர் கல்வியாளர் அமலா ஸ்டேன்லி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மன்றப் பட்டிமன்றப் பேச்சாளர் செல்வி ராஜ் வரவேற்புரை ஆற்றினார்.
மன்றத்தின் கருத்தரங்கப் பேச்சாளர் கவிச்செம்மல் ஆரோக்கிய செல்வி நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார். நிறைவாக பட்டிமன்றப் பேச்சாளர் கலைச்செல்வி நன்றியுரை ஆற்றினார்.
கோயம்புத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தேர்வாணையர் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் க.முருகேசன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில்
"தாயின் பெருமை" பற்றி தமிழ் எழுத்தாளர் மன்ற ஆலோசகர் மிக்கேல் அந்தோணி
"மனைவியின் பெருமை" பற்றி மன்றப் புரவலர் கவிஞர் அரியக்குடி மெய்யப்பன்
"சகோதரியின் பெருமை" பற்றி மன்றப் பட்டிமன்றப் பேச்சாளர் கே.வேங்கட்ராமன்
"மகளின் பெருமை" பற்றி மன்றக் கவியரங்க நடுவர் கவிஞர் பாபுசசிதரன்
"இலக்கியத்தில் பெண்" என்ற தலைப்பில் கவிஞர் வடலூர் ஜெகன் ஆகிய ஐந்து பேச்சாளர்களும் உரையாற்றினார்கள்.
ஆட்சிமன்றக் குழுவைச் சேர்ந்த வே.சதானந்தன் மற்றும் நிர்வாகக்குழு துணைப் பொருளாளர் வெங்கட் சுப்ரமண்யன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்கள்.
மன்ற ஆலோசகர்கள் கருவூர் பழனிச்சாமி மற்றும் பாவலர் முகவை திருநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பல்வேறு தமிழ் அமைப்பினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு மகளிர் புகழ் பாடும் இந்த நிகழ்வைப் பெருமைப் படுத்தினார்கள்.