18 Mar 2023 11:18 pmFeatured
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் மற்றும் வலைத்தமிழ் தொலைக்காட்சி அமெரிக்கா இணைந்து இணையம் வழியாக நடத்தும் உலக மகளிர்நாள் பட்டிமன்றம்.
உலக மகளிர் நாளை முன்னிட்டு 19-03-2023. ஞாயிறு மாலை 6 (IST) மணியளவில் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் மற்றும் வலைத்தமிழ் தொலைக்காட்சி அமெரிக்கா இணைந்து இணையம் வழியாக உலக மகளிர்நாள் பட்டிமன்றம் நடத்தவிருக்கிறது.
தமிழ் எழுத்தாளர் மன்ற பொதுச்செயலாளர் கல்வியாளர் அமலா ஸ்டேன்லி நிகழ்வுக்குத் தலைமை தாங்குகிறார்,
பெண்களுக்குப் பாதுகாப்புத் தருவதில் பெரும்பங்கு வகிப்பது சமூகமா? சட்டமா?
என்ற தலைப்பில் நடைபெறும் பட்டிமன்றத்திற்கு கோயம்புத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் தேர்வாணையர் , பேராசிரியர் முனைவர் க.முருகேசன் பட்டிமன்ற நடுவராகவும்
சமூகமே! என்றத் தலைப்பில்
தமிழ் எழுத்தாளர் மன்ற பேச்சாளரணி செயலாளர் சொற்போர் திலகம் புவனா வெங்கட்,
தமிழ் எழுத்தாளர் மன்ற முன்னணிப் பேச்சாளர் நற்றமிழ் நாவரசி பிரவினா சேகர்
தமிழ் எழுத்தாளர் மன்ற கருத்துரைஞர் முனைவர் வி. நளினி ஆகியோரும்
சட்டமே! என்றத் தலைப்பில்
தமிழ் எழுத்தாளர் மன்ற முன்னணிப் பேச்சாளர் கவிச்செம்மல் ஆரோக்கியசெல்வி
தமிழ் எழுத்தாளர் மன்ற முன்னணிப் பேச்சாளர் நற்றமிழ் நாவலர் செல்வி ராஜ்
தமிழ் எழுத்தாளர் மன்ற முன்னணிப் பேச்சாளர் மீனாட்சி முத்துகுமார்
ஆகியோரும் வாதிடுகின்றனர்.
முன்னதாக செல்வி வை.ராஜலட்சுமி அனைவரையும் வரவேற்று பேசுகிறார்,
சுந்தரி வெங்கட் மகிழ்வுரையாற்றுகிறார்,
வாணிஸ்ரீ வேணுகோபால் மொழி வாழ்த்து மற்றும் பாடல்கள் பாட,
ராணி சித்ரா நெறியாள்கை மற்றும் பாடல்கள் பாடவுள்ளார்.
நிறைவாக பொற்செல்வி கருணாநிதி நன்றியுரையாற்றவுள்ளார்
நிகழ்வில் கலந்துகொள்ள
Zoom Meeting ID: 945 0336 0817
Passcode: 123123
அல்லது கீழே சொடுக்கவும்
https://valaitamil.zoom.us/j/94503360817?pwd=K3RxYjZhQUx2TEY4WElSWStJRldnQT09