Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

எழுத்தாளர் ஜெயமோகன்-பலசரக்கு கடைக்காரருடன் இட்லி மாவுக்காக கைகலப்பு விவகாரம்!. எது உண்மை ?

16 Jun 2019 10:27 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

பிரச்சனை :

நாகட்கோவிலில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இவர் ஒரு பலசரக்கு கடையில் தோசை மாவு வாங்கியுள்ளார். வீட்டிற்கு சென்று திரும்பவந்து அந்த மாவு புளித்துள்ளது என்று கூறி திரும்ப எடுத்துக்கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார். பழைய மாவு என்று சொல்லியும் பரவாயில்லை என்று கூறித்தானே வாங்கிசென்றீர்கள் என்று கடைக்காரர் செல்வத்தின் மனைவி கீதா கூற. கோபமுற்ற ஜெயமோகன் பெண் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளை பயன் படுத்தியதோடு மட்டுமல்லாமல் மாவு  பாக்கெட்டை அந்த பெண் மீது வீசி அடித்துள்ளார். இந்நிலையில் கடைக்காரர் செல்வத்திற்கும் ஜெயமோகனுக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கைகலப்பினாலும், மன உழைச்சலாலுமும் பாதிக்கப்பட்ட கடைக்காரரின் மனைவி கீதா நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் ஜெயமோகனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சைக்கு பின்னா்  வீடுதிரும்பினார்.

பாஜக தேசிய செயலர் எச். ராஜா சாடல்

இச்சம்பவம் தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய செயலர் எச். ராஜா, ஜெயமோகனை தாக்கியது திமுகவைச் சேர்ந்தவர் என்பதால் ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன என சாடியிருந்தார்.

ஜெயமோகன் விளக்கம்

புளித்த மாவு பாக்கெட் விவகாரத்தில் நடந்தது என்ன என்பதைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கியுள்ளார். மேலும் தாம் தாக்கப்பட்டதில் கட்சி அரசியல் எதுவும் இல்லை எனவும் ஜெயமோகன் விளக்கியுள்ளார்.

இணையப்பக்கத்தில் எழுதியுள்ள ஜெயமோகன், கட்சி அரசியல் எதுவும் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். ஜெயமோகன் தமது இணையப் பக்கத்தில் எழுதியுள்ளதாவது: நான் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். தாடையிலும் தோள்பட்டையிலும் வலியும் ரத்தகீறல்களும் உள்ளன. கீழே விழுந்தமையால் உடல் வலியும். ஆனால் ஆஸ்பத்திரி வார்டில் இருந்த பிற நோயாளிகளின் துன்பங்கள் அழுகைகள் நடுவே தூங்க முடியவில்லை. ஆகவே வந்துவிட்டேன்.தனியார் மருத்துவமனையில் சற்று மருத்துவம் செய்யவேண்டியிருக்கலாம். சில செய்திகளை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தாக்கியவர் திமுகவின் அடிமட்டப் பொறுப்பில் இருப்பவர். ஆனால் முழுக்கமுழுக்க குடிவெறியால் நிகழ்ந்த தாக்குதல் இது. ஏற்கனவே பகல்முழுக்க குடிவெறியில் கலாட்டா செய்துகொண்டிருந்திருக்கிறார். அவர் கடையை கவனிக்கவில்லை என குற்றம்சாட்டி அவர் மனைவி கடையில் அமர்ந்திருக்கிறார். அவர்கள் முன்னரே சண்டையிட்டுக்கொண்டிருந்திருக்கிறார்கள். என்ன ஏது என தெரியாமல் நான் நடுவே புகுந்து மாவு பற்றிக் கூறினேன். அது கூட தெரிந்தவர் என்பதனால் "ஏன் இதையெல்லாம் பார்க்கமாட்டீர்களா?" என்ற அர்த்ததில்தான். இவன் தாக்க ஆரம்பித்துவிட்டான். ஏன் என்று அவனுக்கே தெரிந்திருக்காது. இப்போதுகூட "குடிவெறியில் தெரியாமல் செய்துவிட்டான்' என்பதே அவர்களின் பதிலாக இருக்கிறது. ஆனால் சற்று அதிகமான தாக்குதல்தான். இளவயதினனான, குற்றப்பிண்ணணி உடைய ஒருவனின் அடிகள் எளியவை அல்ல. அவனுடன் இருந்தவர்களும் குடித்திருந்தமையால் சற்றுநேரம் எவருமே பிடித்துவிலக்கவில்லை. அதன்பின்னரும் புகார்செய்யவேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஏனென்றால் இது என் நிலம் , இந்தமக்கள் இப்படி இருப்பதை நான் நன்கறிவேன். அதன்பின் அவன் வீட்டுக்கு வந்து மனைவியையும் மகளையும் வசைபாடி தாக்கமுற்பட்டமையால்தான் இரண்டு மணிநேஎரம் கடந்து காவலரிடம் செல்லவேண்டியிருந்தது. அதன்பின்னர் காவலர்கள் கைதுசெய்து ரிமாண்ட் செய்திருக்கிறார்கள் இதில் இதுவரை கட்சி அரசியல் இல்லை. திமுகவின் வழக்கறிஞர் மகேஷ் காவல்நிலையம் வந்து அவன் இருந்த நிலையை பார்த்ததுமே என்னிடம் மன்னிப்புகோரிவிட்டு சென்றுவிட்டார். திமுக மிகமிக பண்பட்ட ரீதியில்தான் நடந்துகொண்டிருக்கிறது. அடிப்படையில் திமுக ஒர் அறிவுத்தளம் கொண்ட கட்சி என்ற எண்ணமே எப்போதும் என்னிடம் இருக்கிறது. நான் மு.கருணாநிதி அவர்கள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்த காலகட்டத்திலும் கூட அவர் மேல் தனிப்பட்ட முறையில் நம்பிக்கை கொண்டிருந்தேன். என் பாதுகாப்பு பற்றி ஐயம் கொண்டதே இல்லை. இன்றும் திமுக மேல் எனக்கு அந்நம்பிக்கை உண்டு. எனக் கூறியுள்ளார்

புகார் ஏற்க மறுப்பு, பாஜக பிரஷர்

கடைக்காரர் செல்வத்தின் மனைவி கீதா கொடுத்த புகாரை உள்ளூர் காவல்துறை ஏற்க மறுத்த நிலையில், ஜெயமோகன் அளித்த புகாருக்காக பா.ஜ.க.வின் வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் லோக்கல் போலீசிடம் பிரஷர் கொடுத்துள்ளனர்.

இத்தனைக்கும் செல்வத்தின் அண்ணன் பா.ஜ.க.வின் நகர வழக்கறிஞர் பிரிவு பொறுப்பில் இருக்கிறார். அவர், உண்மை நிலவரத்தை போலீசிடம் எடுத்துச் சொல்வதற்காக, தொடர்ந்து தொடர்பு கொண்டும் காவல்துறை அதிகாரிகள் அவரது போனை எடுக்கவில்லை.

இந்நிலையில், பா.ஜ.க. பிரமுகர்களின் ஆதரவு பெற்ற ஜெயமோகனுக்காக விழுப்புரம் எம்.பியும் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் வென்றவருமான ரவிக்குமார் மிகுந்த சிரத்தையெடுத்து செயல்பட்டு வருகிறார். ஒரு பெண்ணிடம் அடாவடி செய்த நபருக்கு துணைபோவது கண்டு, நாகர்கோவில் தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடைக்காரர் செல்வம், தி.மு.க.வின் பகுதிச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

நியாயமான விசாரணை என்றால் இருதரப்பு புகாரையும் ஏற்றுக்கொண்டு அதன்பிறகு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சம்பவம் நடந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே பிரியாணி கடை, பியூட்டி பார்லர் என தி.மு.க. ஆட்கள் தகராறு செய்தபோது, அவர்களை விமர்சித்தவர்கள் இப்போது கடையில் தகராறு செய்தவரை விட்டுவிட்டு, கடைக்காரர்களை குற்றவாளியாக்குவது என்ன நியாயம் எனவும் கேட்கிறார்கள்.

மகளீர் அமைப்பினர் கருத்து

இது குறித்து பெண்கள் அமைப்பை சோ்ந்த சிலா் கூறும் போது... ஜெயமோகன் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் போல் நடித்துள்ளார். அவா் கதாசிரியராக இருந்த சா்க்கார் படத்தில் மிக்ஸியை தீயிட்டு கொளுத்தி ஒரு விரல் புரட்சி செய்வது போல் மாவு பாக்கெட்டை பெண் மீது எறிந்து ரவுடி புரட்சி செய்தியிருக்கிறார். அவா் வாங்கும் போது பழைய மாவு தான் இருக்கிறது என்று அந்த பெண் கூறிய போது பரவாயில்லை என்று தான் வாங்கி சென்று இருக்கிறார். அதன் பிறகு புளித்து இருக்கிறது என்று திரும்ப கொடுக்கும் போது வார்த்தைகள் பயன்படுத்தியதை குறைத்து இருக்க வேண்டும். அல்லது மாவு வாங்கும் போது யோசித்து இருக்க வேண்டும். இல்லையென்றால் அவா் அதற்கென்று அதிகாரிகள் இருக்கிறார்கள் அவா்களிடம் சென்று முறையிட்டு இருக்க வேண்டும். அதை விட்டுட்டு சழுதாயத்தில் பிரபலமாக இருப்பவா் ஒரு பெண்ணிடம் இப்படியா நடந்து கொள்ள வேண்டும். இதற்கு காவல் துறையும் உடந்தை என்றனா். 

நாகா்கோவில் வா்த்தக சங்கத்தினா் கருத்து !?

நாகா்கோவில் வா்த்தக சங்கத்தினா் கூறும் போது போலிசாருக்கு முதல் எதிாியே வியாபாரிகள் தான். செல்வம் திமுக பிரமுகராக இருப்பதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த பகுதியில் போலிசாா் நடத்தும் சில அக்கிரமங்களை உடனே தட்டி கேட்பார். இது போலிசாருக்கு எரிச்சலாக  இருந்து பணத்தையும் ஆள் பலத்தையும் காட்டி உண்மை தன்மை தொியாமல் வியாபாாி மீது வழக்கு தொடுத்த காவல்துறையையும் ஜெயமோகனையும் கண்டிக்கிறோம் என்றனா். வந்தது. அந்த கோபத்தை இப்போது தீா்த்து விட்டனா்.

பணத்தையும் ஆள் பலத்தையும் காட்டி உண்மை தன்மை தொியாமல் வியாபாரி மீது வழக்கு தொடுத்த காவல்துறையையும் ஜெயமோகனையும் கண்டிக்கிறோம் என்றனா்.

ஜெயமோகனை அறிந்தவர்கள் கருத்து

இதேபோல் ஜெயமோகன் புளித்தமாவு மட்டுமல்ல ஓட்டல்களில் சாப்பிட சென்றாலும் பொருட்கள் எப்போ தயார் செய்தது என்று எல்லாம் கேட்டு விட்டு சாப்பிட்ட பிறகு எதாவது குறைகளை சுட்டிகாட்டி சண்டையிடுவாராம் என்கின்றனா் அவரை பற்றி அறிந்தவா்கள்.

உண்மை வெளிவருமா குற்றவாளி யார் தண்டிக்கப்படுவாரா? கேட்கிறார்கள் பொதுமக்கள்

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096569
Users Today : 15
Total Users : 96569
Views Today : 29
Total views : 416727
Who's Online : 0
Your IP Address : 3.137.162.21

Archives (முந்தைய செய்திகள்)